யாதும் ஊரே - குறுந்தொடர் - பாகம் 1 - அனாமிகா
அத்தியாயம் - 1
************
"சீதா கல்யாண வைபோகமே -
ராமா கல்யாண வைபோகமே"
என்று ஆனந்தமாய்ப் பாடியபடி பஞ்சு மாமா "லலிதா பவனத்"தில் நுழைந்தார்.
"அடடே! யாரது, பஞ்சுவா? வா, வா! பார்த்து ரொம்ப நாளாச்சே!" வைத்தி வரவேற்றார்.
"நமஸ்காரம்! ஆத்துல எல்லாம் சௌக்கியமோ?"
"பரம சௌக்கியம்! லலிதா! பஞ்சுவுக்கு காஃபி கொண்டு வா!"
"ஆட்டும்னா" என முதலில் குரலும், தொடர்ந்து இரண்டு நிமிஷத்தில் கையில் காஃபியோடும் வந்தது லலிதா மாமி! ஆம்; அந்த லலிதா
பவனத்தின் தலைவி; வைத்தி மாமாவின் சகதர்மிணி!!
"உங்காத்து மாமி, குழந்தேள்ளாம் சௌக்கியமா ?" - லலிதா மாமி விசாரித்தபடியே பஞ்சுவுக்கு காஃபி கொடுத்தார்.
" எல்லாரும் நல்லாயிருக்கோம். ஒரு முக்கியமான விஷயமா பேச வந்திருக்கேன். பாட்டி ஃப்ரீயா இருக்காளா?"
பஞ்சு கேட்டு முடிக்கு முன்பே, அவயம் பாட்டி வந்து விட்டாள்.
எழுபதுகளில் நடைபயிலும் அவயம் பாட்டி தான் அந்தக் குடும்பத்தின் ஆணிவேர். 'அன்றைய சமையல் பொரிச்ச குழம்பா,வத்தக் குழம்பா' என தீர்மானிப்பதில் இருந்து ஸ்கூல் அட்மிஷன், கல்யாணம் போன்ற பெரிய விஷயங்கள் வரை - எல்லாமே அவர் பார்த்து முடிவெடுத்தால்
சரியாய் இருக்கும் என்பது எழுதாத சட்டம் ; பாட்டி முடிசூடா ராணி ! அவளுடைய ஈஸிசேர் தான் சிம்மாசனம்!!
"பஞ்சு, வா! வா!! உன் குரல் கேட்டப்பவே நான் நெனச்சேன், இன்னிக்கு நல்ல சேதி வந்துடுத்து, சரி தானே?!"
"பாட்டின்னா பாட்டி தான் ! எப்படி பட்டுன்னு விஷயத்தைப் பிடிச்சுட்டா பார்த்தேளா?ஆமாம் பாட்டி, நம்ம ஜானகிக்கு ஒரு நல்ல
வரனோட தான் வந்திருக்கேன். இது அமைஞ்சுடுத்துன்னா, நல்ல யோகம்தான்."
"பஞ்சு! எங்க ஜானகியைப் பண்ணிக்க நல்ல யோகம் இருந்தா தான் முடியும், தெரியுமோ? கண்ணுல வைச்சு கிளி போல வளர்த்திருக்கேனாக்கும்; அவ பாடினா, இன்னிக்கெல்லாம் கேக்கலாம், பூஜை பண்ணினா, நாளெல்லாம் பார்க்கலாம்; சமையலா! அத்தனையும் அத்துப்படி!! இந்த காலத்துல காலேஜ் போகிற எந்த பொண்ணாவது சமையற்கட்டு பக்கம் வர்றாளோ? நம்ம குழந்தை அப்படியில்லை! படிப்புக்கு படிப்பும் இருக்கு; அழகு இருக்கு; தங்கமான குணம் இருக்கு; என்ன நான் சொல்றது?"
பாட்டி நீளமாய் பேத்தியின் அருமை, பெருமைகளை பட்டியலிட்டு முடிக்க, பஞ்சு ஆமோதிப்பாய் தலையை அசைத்தார்.
"பாட்டி! நீங்க சொன்ன அத்தனை விஷயத்தையும் அப்படியே ஒப்புக்கறேன் ! நான் பார்த்து வளர்ந்த குழந்தை அவ !!இந்தாங்கோ, இந்த கவரில மாப்பிள்ளையோட ஜாதகம், ஃபோட்டோ எல்லாம் இருக்கு; அவா ஜானகியோட ஃபோட்டோவை வாங்கிண்டு வரச் சொல்லியிருக்கா.
நீங்களும் பார்த்து சொன்னாக்கா, மேற்கொண்டு பேசிடலாம்."
"பஞ்சு ! அதெல்லாம் இருக்கட்டும்; முதல்ல அவா குடும்பத்தைப் பத்தின விவரத்தை சொல்லு"
பாட்டி கேட்டதும், பஞ்சு ஆரம்பித்தார்.
" அவாளும் எனக்கு ரொம்ப வருஷப் பழக்கம் தான். அப்பா கவர்மென்ட் உத்தியோகத்துல இருந்து ரிடையர் ஆனவர். அம்மா ஆத்துல தான் இருக்கா. மாப்பிள்ளை, அவர் தம்பின்னு ரெண்டே பசங்க. சொந்த வீடு, தஞ்சாவூர்ல பூர்விக நிலம், சொத்து பத்து ஏராளமா இருக்கு.
இப்போ அண்ணா நகர்ல ஃப்ளாட்ல தான் இருக்கா; மாமிக்கு தங்கமான குணம். அவ்வுளவு சாது; ஒருத்தரை ஒரு சொல் சொல்லி கேட்க முடியாது; நம்ம ஜானகியை பூ மாதிரி பார்த்துப்போ! அதுக்கு நான் கேரண்டி!!"
"தங்கமான மாமியார்னு பஞ்சு கிட்டேர்ந்து சர்டிபிகேட், ஓக்கே, ஓக்கே!"
வைத்தி புன்னகைத்தார்.
"அப்புறம் - மாப்பிள்ளையோட தம்பி இப்ப தான் பி.ஈ தேர்ட் இயர் படிச்சுண்டுருக்கான்"
வாசலில் கொலுசொலி கேட்க, உரையாடல் சற்றே நின்றது.
பாட்டி சொன்ன அத்தனை லட்சணங்களும் துலங்க, ஜானகிதான் வந்தாள். பட்டுப் பாவாடை, தாவணி- மல்லிகை சூடிய ஈரக் கூந்தல், திருநீறும் குங்குமமும் திகழும் சந்திரன் போன்ற முகம் - சுடர் விடும் குத்துவிளக்காய் வீட்டினுள் நுழைந்தாள். வரவேற்கும் புன்னகை
பஞ்சு மாமாவிற்கு ! விபூதிப் பிரசாதம் பாட்டிக்கு!!
"வெள்ளிக்கிழமை கோவிலுக்கு போய்ட்டு வந்தேன் மாமா! விபூதி எடுத்துக்குங்கோ!!"
"ஜானகி, சீக்கிரம் ஸ்வீட் எடுத்துண்டு வரப்போற நியூஸ்க்கு தான் வெயிட் பண்றேன்"
வெட்கச் சிரிப்போடு ஜானகி உள்ளே மறைந்தாள்.
" ஏன்னா, மாப்பிள்ளைப் பையனுக்கு எங்கே வேலை?"
லலிதா மாமி கேட்டதும் தான், வைத்தி நினைவு வந்தவராய், " என்ன பஞ்சு! என்னென்னமோ பேசிண்டிருக்கோம், இதை விட்டுட்டு ! ஆமாம்! எந்த ஊரு , மெட்ராஸ் தானே!"
" அது.. வந்து.. மாமா, அதுல தான் ஒரு சின்ன விஷயம்! இப்போ மாப்பிள்ளை லண்டன்ல இருக்கார்!"
"என்னது ? வெளிநாட்டு மாப்பிள்ளையா?"
லலிதா மாமியின் குரலில் சுருதி பிசகியது.
"அது வந்து மாமி, பையன் ஸ்ரீராம் முதல்ல இங்க தான் வேலைக்கு சேர்ந்தானாம்; அப்புறம் கம்பெனில அவரோட திறமையையும், உழைப்பையும் பார்த்து ஃபாரின் போஸ்டிங்ல அனுப்பியிருக்கா; அஞ்சு வருஷ காண்டிராக்ட். இப்பவே ஒன்றரை வருஷம் ஆயிடுத்து; இன்னும் மூணு வருஷம் ஆனதும், இந்தியா வந்திடலாம்!!"
பஞ்சு மாமியை சமாதானப்படுத்தும் தொனியில் பேசினார்.
"பஞ்சு! நீ என்ன தான் சொன்னாலும் எனக்கு கொஞ்சம் யோசனையா தான் இருக்கு."
" மாமா! ஒரே பொண்ணு, அவளைப் பிரிஞ்சு இருக்கணுமேன்னு யோசிக்கறேள், சரி தான்! அதே நேரம், மாப்பிள்ளையைப் பத்தியும் யோசிச்சுப் பாருங்கோ, நம்ம ஜானகிக்கு ஏத்த அழகு, குணம், படிப்பு, அடக்கம் - இது அத்தனைக்கும் சேர்த்து நல்ல குடும்பம், தைரியமா ஒரு பொண்ணைக் குடுக்கலாம்னு நானே சொல்றேன். இன்னொரு விஷயம் பாருங்கோ - அவாத்துலயும் இங்க நம்மளைப் போல கலாச்சாரம், பண்பாடு இதெல்லாம் ரொம்ப ஈடுபாடு உள்ள குடும்பம். ' மாட்டுப் பொண்ணு வந்து குடித்தனம் ரெண்டாச்சுன்னு" பழி வராம, கூடி வாழத் தெரிஞ்சவளா, குணம் நிறைஞ்ச பொண்ணா தான் வேணும் அப்படின்னு கண்டிஷனே போட்டிருக்கா; எனக்கு சட்டுனு ஜானகி ஞாபகம் வந்தது; அதான் இங்க வந்துட்டேன்."
"சரி பஞ்சு! மாப்பிள்ளை ஜாதகத்தோட முதல்ல பொருத்தம் பார்க்கலாம்; அப்புறம் யாருக்கு எங்க முடிச்சு போட்டிருக்குன்னு பகவான் தான் தீர்மானம் பண்றார். எதுக்கும் ஒரு ரெண்டு நாள் கழிச்சு வாயேன்; கலந்து முடிவு பண்ணி சொல்றோம்!"
அவயம் பாட்டி சொல்லவும், 'சரி, அப்ப நான் வரேன்' என்று பஞ்சு அனைவரிடமும் விடை பெற்றுச் சென்றார்.
(தொடரும்)