யப்போவ். கொஞ்சம் சிரி

Status
Not open for further replies.
யப்போவ். கொஞ்சம் சிரி

சூப்பர் தமாஷ் யப்போவ். கொஞ்சம் சிரிங்கப்பா .ஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர் வந்தாரு.
அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய அவரோட வேலை பாத்தவங்க சொல்லி இருக்காங்க. அதனால எதுக்கும் தயாராத்தான் அவர் வந்தார்.
முதல்ல ஒரு வகுப்புக்குள்ள போன உடனே பசங்க எல்லாம் எழுந்திருச்சு நின்னு வணக்கம் சொன்னாங்க!.
சரி எதாவது கேள்வி கேக்க வேண்டாம்ன்னு முதல் பையன எழுப்பி........ ..."உன் பேர் சொல்லு" "பழனி"
"உன் அப்பா பேரு" "பழனியப்பா",அடுத்தப் பையன எழுப்பி , "உன் பேர் சொல்லு" "மாரி""உன் அப்பா பேரு" "மாரியப்பா"அவருக்கு கொஞ்சம் டவுட் வருது. இருந்தும் அடுத்தப் பையன எழுப்பி.........."உன் பேர் சொல்லு"
"பிச்சை""உன் அப்பா பேரு" "பிச்சையப்பா" இப்பொ அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு, சரி பசங்க ஆரம்பிச்சுட்டாங்க அப்படினு புரிஞ்சுருச்சு.அடுத்தப்
பையன எழுப்பினாரு."முதல்ல நீ உன் அப்பா பேரைச் சொல்லு...." (மனசுக்குள்ள ஒரு பெருமிதம்) "ஜான்"
"இப்பொ உன் பேரைச் சொல்லு" "ஜான்சன்"கொஞ்சமா டென்சன் ஆயிட்டு, அடுத்த பையன எழுப்பி,உன் அப்பா பேர சொல்லு, "ரிச்சர்டு" உன் பேரு, "ரிச்சர்டசன்"
கொலவெறி ஆயிட்டாரு,கொஞ்ச நேரம் நிதானமா யோசிச்சி, அடுத்த பையன எழுப்பி, உன் தாத்தா பேர சொல்லு, "அப்பாவோட தாத்தாவா?, அம்மாவோட தாத்தாவா?" ஆய்வாளர் பல்ல கடிச்சிக்கிட்டு,
அப்பாவோட தாத்தான்னாரு "மணி", சரி அப்பா பேரு?,
"ரமணி" உன் பேரு?, "வீரமணி"அப்புறம் என்ன !!!! அதுக்கு அப்பறம் அந்தபள்ளிக்கு எந்த ஆய்வாளரும் வரதேஇல்ல

Ramakrishnan Narayanan
 
Status
Not open for further replies.
Back
Top