முள்ளங்கி கீரை பொரியல்

Status
Not open for further replies.
முள்ளங்கி கீரை பொரியல்

முள்ளங்கி கீரை பொரியல்

E_1419400983.jpeg





முள்ளங்கி கீரை பொரியல் செய்வது எப்படி?

தேவையானவை:

முள்ளங்கி கீரை - 1 கட்டு,
துவரம் பருப்பு - 1 கப்,
பெரிய வெங்காயம் - 3,
எண்ணெய் - சிறிதளவு,
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி,
கடுகு - அரை தேக்கரண்டி,
உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி,
சீரகம் - அரை தேக்கரண்டி,
கருவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:
முள்ளங்கி கீரையை நன்றாக அலசி, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து, பின் முள்ளங்கி கீரை சேர்த்து வதக்க வேண்டும்.

இதனுடன், வேகவைத்த துவரம்பருப்பைச் சேர்த்து, சிறிது உப்பு போட்டு வதக்கி, மிளகுத்துாள் துாவி இறக்கினால், மணமும், சுவையும் அலாதியாக இருக்கும்.

பலன்கள்: முள்ளங்கி கீரையில் கந்தகமும், பாஸ்பரஸும் மிகுதியாக உள்ளது. இது, ஜீரணத்திற்கு மிகவும் ஏற்றது. இது, உடலில் சேர்ந்திருக்கும் வாயுவைக் கலைத்து வெளியேற்றக் கூடியது. முள்ளங்கி கீரையில் மிகுந்திருக்கும் 'போலேட்' வைட்டமின், ஆரோக்கியமான ரத்த அணுக்களுக்கும், கருப்பை சிசுவின் மூளை வளர்ச்சிக்கும் தேவையான ஒன்று! இதோடு, வயிறு எரிச்சல், மல மூத்திரக்கட்டு, தலைச்சளி முதலிய பிரச்னைகளை குணப்படுத்தும் வல்லமை முள்ளங்கி கீரைக்கு உண்டு. குழந்தைகளுக்கு ஏற்படும் அக்னி மந்தம் மற்றும் ஈரல் சம்பந்தப்பட்ட நோய் வராதிருக்க, வாரம் ஒருமுறை இப்பொரியலை உணவில் சேர்க்கலாம்.

- காந்திமதி, ஊட்டச்சத்து ஆலோசகர்.


??????? ????? ??????? | ???? | Health | tamil weekly supplements

 
Status
Not open for further replies.
Back
Top