மாங்காய் மண்டி : (செட்டிநாட்டு சிறப்பு)

Status
Not open for further replies.
மாங்காய் மண்டி : (செட்டிநாட்டு சிறப்பு)

மாங்காய் மண்டி : (செட்டிநாட்டு சிறப்பு)

நீள மூக்கு மாங்காய் - 3 (தோல் சீவி சற்று இடைப்பட்ட அளவில் நறுக்கியது )
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 3
புளி - கரைக்க தேவையான அளவு (சற்று குறைவாக போடவும், மாங்காய் சற்று புளிப்புதான்)
சீரகம் , கடுகு உளுத்தம் பருப்பு - தாளிக்க
கறிவேப்பிலை - 1 கொத்து
அரிசி களைந்த மண்டி - 1 கிண்ணம்
நல்லெண்ணெய் - தாளிக்க
வெல்லம் - இரண்டு துணுக்குகள்
வறமிளகாய் - 6 (சிவப்பு மிளகாய் வற்றல் )
மல்லித்தூள் & மஞ்சள் தூள் - தேவையான அளவு ...
உப்பு - தேவைக்கு
தண்ணீர் - தேவைக்கு


செய்யும் முறை :

மாங்காயை தோல் சீவி , சற்று இடைப்பட்ட அளவில் நறுக்கி கொள்ளவும்
சிறிது தண்ணீரில் உப்பு சேர்த்து , அவற்றை முக்கி வைக்கவும் (1 /4 மணி நேரம் )
சின்ன வெங்காயத்தை தோலுரித்து கொள்ளவும் (அப்படியே முழுதாக போடலாம் )
தக்காளியையும் நறுக்கி வைத்து கொள்ளவும்
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அடுப்பை இளம் சூட்டில் வைத்து கொண்டு மிளகாயை சற்று பொரிக்கவும்.
பிறகு கறிவேப்பிலை, சீரகம் , கடுகு உளுத்தம் பருப்பு, மிளகு போட்டு நன்றாக வதக்கவும் .
சற்று வதங்கியவுடன் சின்ன வெங்காயம் போட்டு நன்றாக வதக்கி கொள்ளவும்
பிறகு தக்காளியையும் சேர்த்து வதக்கி கொள்ளவும்
பச்சை வாசனை போனதும் , மாங்காயையும் சேர்த்து வதக்கவும்.
சிறிது உப்பு போட்டுவிட்டு , பத்திரத்தை மூடி சற்று பொறுத்திருக்கவும் .
இந்த இடைவெளியில் , அரிசி களைந்த மண்டியில் புளி சேர்த்து அதை நன்றாக பிழிந்து சாறு எடுக்கவும்...
பின்னர் சிறிது மஞ்சள் பொடி, மல்லித்தூள் சேர்த்து நன்றாக கலக்கி வைத்து கொள்ளவும்
வெந்து கொண்டிருக்கும் மாங்காயின் மேல் இந்த சாற்றை ஊற்றி , அடுப்பை சற்று உயர்த்தி மூடி போட்டு மூடி கொதிக்கவிடவும்... இடைவெளியில் கிளறி விட்டுக் கொண்டே இருங்கள் ... அடி பிடித்துவிடும் ....

கொதித்ததும் சிறிது வெல்லம் சேர்த்து இறக்குங்கள் ...

அதிகம் தண்ணீர் விடவேண்டாம் ... சற்று பதமாகவே இருக்கட்டும் ... அதிகம் உறைப்பும் இராமல் நன்றாக இருக்கும் ...

மாங்காய் மண்டி தயார் ....!!! .

செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்


நன்றிகளுடன்
அசோக்
 
நண்பரே !!!

அதிலும் அந்த மண்டியில் இருக்கும் மிளகாயை தயிர் சாதத்துடன் சாப்பிட்டு பாருங்கள்....இனிப்பு + புளிப்பு + காரம் ... என ஒருமாதிரி இருக்கும்...!!!!
:hungry:

என்னால முடியல !!!!

:)

நன்றிகளுடன்
அசோக் குமார்
 
Anaiyah vendha punnil velai paichugirir?l

Neengal Inippum pulippum kalandha Maangai pacchidi chappathiudan thottukkondu saapittuirukkireera?

(Naanum ungal vairerichalai sirudhuneram kottikolgiren)
 
Neel Mookku Maangaai.webp
நீள மூக்கு மாங்காய்






Maangaai Mandi.webp

மாங்காய் மண்டி ...!!
 

Attachments

Last edited:
Status
Not open for further replies.
Back
Top