• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

மஹாகவி சுப்ரமண்ய பாரதியின் பிறந்தநாள்

Status
Not open for further replies.

Brahmanyan

Active member
மஹாகவி சுப்ரமண்ய பாரதியின் பிறந்தநாள்

bharathiyar2.webpஇன்று மஹாகவி சுப்ரமண்ய பாரதியின் பிறந்தநாள் . இந்நன்னாளில் இம்மஹானை நினைவு கூறுவோம். அதுவே அவருக்கு நாம் செய்யும் சிறு நன்றி மரியாதை.வாழ்ந்திருந்த 38 ஆண்டுகளில் மாபெரும் சாதனைசெய்தவர் அவருடைய கவிதைகள் எல்லாமே எனக்குப் பிடிக்கும்.
இதோ அவரது தீர்க்க தரிசனத்தில் அவர் எதிர்பார்த்த பாரததேசம்.


பாரததேசம்.

பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் - மிடிப்
பயங்கொல்லுவார் துயர்ப் பகைவெல்லு வார்.


வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம்.

வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்,
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே,
மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
தோணிகளோட்டி விளையாடி வருவோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம்
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம்

ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஒயுதல்செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம் உழு படைகள் செய்வோம்
கோணிகள் செய்வோம் இரும்பாணிகள் செய்வோம்
நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்

மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்
வானையளப் போம்கடல் மீனையளப்போம்
சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம்
சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்
கலைவளர்ப் போம் கொல்லருலை வளர்ப் போம்
ஓவியம்செய் வோம் நல்லஊசிகள் செய்வோம்
உலகத் தொழிலனைத்துமுவந்து செய்வோம்.

சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்
நீதிநெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர்.



நல்வணககத்துடன் ,
ப்ரஹ்மண்யன்,
பெங்களூர்.
 
இந்த நன்னாளில் மஹாகவி பாரதியை நினைவுகூர்ந்து அவரது கவித்திரத்தை போற்றுவோம். செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே என்று தமிழகத்தின் பெருமையை பறை சாற்றிய பாரதி பிறந்த இந்நன்னாளை நினைகூர்ந்தமைக்கு நன்றி.
 
Status
Not open for further replies.
Back
Top