மல்லிகைப்பூ இட்லி

Status
Not open for further replies.
மல்லிகைப்பூ இட்லி

மல்லிகைப்பூ இட்லி


10394812_734719383263703_7175237580718090959_n.jpg




புழுங்கலரிசி அரிசி 4 பங்கு;

உளுத்தம்பருப்பு 1 பங்கு
என்பது தான் இட்லிக்கான சரியான அளவு.

இரண்டையும் கழுவி, தனித்தனியே நல்ல தண்ணீரில் ஊறவையுங்கள்.


முதலில் அரிசியையும், பிறகு உளுந்தையும் தனித்தனியே அரைத்துக் கொள்ளுங்கள்.

உளுந்தை நன்கு தண்ணீர் தெளித்து, தெளித்து பொங்கப் பொங்க அரைக்க வேண்டும்.


பிறகு, இரண்டு மாவையும் கலந்து, உப்புப் போட்டு, வலதுகையின் ஐந்து விரலையும் நன்கு பிரிந்திருக்குமாறு வைத்து, மாவுக்குள் விட்டு, மாவை நன்கு அடித்துக் கலந்து வையுங்கள்.


தூக்கி ஊற்றினால், ஊற்றும்பதத்தில் மாவு இருப்பது சரியான பதம்.
அடுத்து, மாவை 6&லிருந்து 8 மணி நேரம் வரை புளிக்க விடுங்கள்.


புளித்தபின், இட்லிகளாக தட்டில் ஊற்ற வேண்டியதுதான்!
குக்கர் தட்டு எனில், ஸ்டெயின்லெஸ் ஸ்டீலை விட, அலுமினியம் தட்டு சிறந்தது.


அதில் எண்ணெயெல்லாம் தடவத் தேவையில்லை.
முடிந்தால், துணி போட்டு ஊற்றலாம்.


இல்லையென்றாலும் அப்படியே குழியில் ஊற்றி வெந்ததும் ஒரு சிறு அன்னக் கரண்டியால் எடுக்க, இட்லி, பூப்போல அழகாக வரும்.


குக்கர் தட்டு இல்லாதவர்கள், சாதாரண இட்லி தட்டில் துணி போட்டும் ஊற்றி, எடுக்கலாம்.


டிப்ஸ்: ஒரு சிலர் புளித்த பிறகு கரண்டிவிட்டு மாவைக் கிளறுவார்கள்.

அப்படிச் செய்யவே கூடாது.


மேலாக, கரண்டியால் மாவை எடுத்து ஊற்ற வேண்டும்.


மாவு நீர்த்துவிட்டாலோ, உளுந்து சற்று அதிகமாகி விட்டாலோ, அரை கப் ரவையை சேர்த்துக் கரைத்துக் கொள்ளுங்கள்.


Source: Anantha Narayanan
 
Dear Sir,

I make Idli with 'Ponni Idli Rice' for a measure of 3:1 rice and ulundu. And I grind the rice coarse, to rava consistency. The idli comes out pretty good. But I am curious to know how others make it -- if it comes out really fine.

1. What proportion do you use for rice: urad dhal?
2. How fine do you grind the rice?

Thanks.
 
Status
Not open for further replies.
Back
Top