பல நினைவுகள் எனக்கும் மலர்ந்தன!
நானும், என் உடன் பிறப்புகளும் படித்ததும் அரசுப் பள்ளியில், இலவசமாகத்தான்! ஊசி போடப்
பஞ்சாயத்து மருத்துவர் வந்தால், ஓட்டம் பிடிப்போம், அப்பாவிடம். ( மருத்துவரான் அவர்தான்
எங்களுக்கு ஊசி போடலாம்! ) ஒரு தடவை நெல் கொட்டும் பெரிய தொட்டியில் ஒளிந்துகொண்டு,
அந்த ஊசி மாமாவிடமிருத்து தப்பித்தது இன்னும் பசுமையாய் நினைவில்!
பக்கத்து வீட்டு முதலியார் மாமாவின் வைக்கோல் போரில் தாத்தாவுக்குத் தெரியாமல் சறுக்கு
விளையாட்டு விளையாடி, இரவில் வயலின் வாசித்ததும் உண்டு - வேறு என்ன? சொறிதான்!
நவராத்திரிக்கு பல விதமாய்ச் சுண்டல் கொடுப்பார்கள் மாமிகள்; எங்கள் பாட்டை ரசித்த பின்பு!
'மாமவது ஸ்ரீ சரஸ்வதி', 'ஸரஸிஜ நாப ஸோதரி', 'பாவயாமி' இவை அப்போதைய ஹிட்டுகள்.
பின் 'வடவரையை மத்தாக்கி' இதில் சேர்ந்துவிட்டது!
பாட்டி திவசத்தை ஆவலுடன் எதிர்பார்ப்போம்; எள்ளுருண்டை அப்போதுதானே கை நிறையக்
கிடைக்கும்! எங்கள் மூன்று சித்தப்பாக்களும் குடும்ப சகிதம் வருவார்கள்; பின் என்ன? லூட்டிதான்.
பாவம் அம்மா! எப்படித்தான் எங்கள் பட்டாளத்துக்கு ருசியாகச் சமைத்துப் போட்டார்களோ?!
ஹனுமத் ஜயந்திக்கு பத்து ரூபாய் கட்டினால், எல்லோருக்கும் மதியச் சாப்பாடு கோவிலில்; அந்த
ராமராவ் மாமா, குழம்பு, ரசத்தைத் தவிர அனைத்துப் பண்டங்களையும் கையாலேயே பறிமாறுவார்!
மாலையில் நாங்கள் சகோதரிகள் பாட, அண்ணன் மிருதங்கம் வாசிப்பான்! பிரதி சனிக் கிழமையும்
இது போலப் பாடுவதுண்டு; எங்கள் குரு, தாத்தாதான் 'லிஸ்ட்' எழுதித் தருவார்.
ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். இன்னும் என்னென்னவோ நினைவுகள் அலை மோதுகின்றன!
ஆமாம்; அது ஒரு இனிமையான பொற்காலமே - இது நிஜம்!