மனைவிகள் விற்கப்படும் கடை

Status
Not open for further replies.
மனைவிகள் விற்கப்படும் கடை

மனைவிகள் விற்கப்படும் கடை



ஒரு ஊர்ல மனைவிகள்

விற்கப்படும்
கடை திறக்கப்பட்டது..
.
அந்த கடை வாசலில் கடையின்
விதிமுறை போர்டு இருந்தது.
அதில் எழுதியிருந்தது..
.
1.கடைக்கு ஒரு தடவைதான்
வரலாம்.
.
2. கடையில் மொத்தம் 6 தளங்கள்
இருக்கு... ஒவ்வொரு தளத்திலும்
இருக்குற பெண்களோட தகுதிகள்
மேல போக போக
அதிகமாகிட்டே போகும்.
.
3.ஒரு தளத்துல இருந்து மேல
போயிட்டா மறுபடி கீழ வர
முடியாது..
அப்படியே வெளியேதான் போக
முடியும்..
.
இதெல்லாம்
படிச்சுட்டு ஒரு இளம் ஆண்
மனைவி வாங்க கடைக்கு வந்தார்..
.
"பச்.. மனைவி வாங்குறது என்ன
காய்கறி வாங்குற
மாதிரி கஷ்டமா என்ன...
ச்சேச்சே அப்படி எல்லாம்
இருக்காது"
.
முதல் தளம் அறிக்கை பலகையில்,
.
"இந்த தளத்தில் இருக்கும்
மனைவிகள் வேலை உள்ளவர்கள்;
கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்
நன்கு ருசியாக சமைக்கக் கூடியவர்கள்"
.
இது அடிப்படை தகுதின்னு நினைச்சுட்டு இன்னும்
மேல போக முடிவு செய்றாங்க..
.
இரண்டாம் தளம்
அறிக்கை பலகையில்,
.
"இந்த தளத்தில் இருக்கும்
மனைவிகள் வேலை உள்ளவர்கள்;
கடவுள் நம்பிக்கை உளளவர்கள்
நன்கு ருசியாக சமைக்கக் கூடியவர்கள்
மற்றும் குழந்தைகள் மேல்
அன்பு செலுத்துபவர்கள்.
வாங்கும் சம்பளத்தை முழுதாக உங்கள் கையில் கொடுப்பவர்கள். "
.
இதுவும்
அடிப்படை தகுதி அப்படின்னு நினைச்சுட்டு இன்னும்
மேல போறாங்க..
.
மூன்றாம் தளம்
அறிக்கை பலகையில்,
.
"இந்த தளத்தில் இருக்கும்
மனைவிகள் வேலை உள்ளவர்கள்;
கடவுள் நம்பிக்கை உளளவர்கள்,
நன்கு ருசியாக சமைக்கக் கூடியவர்கள்
குழந்தைகள் மேல்
அன்பு செலுத்துபவர்கள்,
வாங்கும் சம்பளத்தை முழுதாக உங்கள் கையில் கொடுப்பவர்கள்.
மிகவும் வசீகரமானவர்கள்."
.
அந்த இளம் ஆண்
வசீகரமானவர்கள்னு பார்த்ததும்,
"ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள்
இருந்தா மேல போக போக
இன்னும் என்ன எல்லாம்
இருக்குமோ"ன்னு நினைச்சு மேல
போக முடிவெடுத்தார்.
.
நாலாவது தளம்
அறிக்கை பலகையில்,
.
"இந்த தளத்தில் இருக்கும்
மனைவிகள் வேலை உள்ளவர்கள்;
கடவுள் நம்பிக்கை உளளவர்கள்,
நன்கு ருசியாக சமைக்கக் கூடியவர்கள்
குழந்தைகள் மேல்
அன்பு செலுத்துபவர்கள்,
வாங்கும் சம்பளத்தை முழுதாக உங்கள் கையில் கொடுப்பவர்கள்.
மிகவும் வசீகரமானவர்கள்
மற்றும்
வீட்டு வேலைக்கு பணிப்பெண் அமர்த்தாமல் அனைத்தையும் தானே செய்யும் திறன் படைத்தவர்கள். "
.
இதை விட வேற என்ன வேணும்...
நல்ல குடும்பம் அமைக்கலாமே?
.
கடவுளே... மேல என்ன
இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும்.
அப்படின்னு முடிவு பண்ணிட்டு இன்னும்
மேல போனார்..
.
ஐந்தாவது தளம்
அறிக்கை பலகையில்,
.
"இந்த தளத்தில் இருக்கும்
மனைவிகள் வேலை உள்ளவர்கள்;
கடவுள் நம்பிக்கை உளளவர்கள்,
நன்கு ருசியாக சமைக்கக் கூடியவர்கள்
குழந்தைகள் மேல்
அன்பு செலுத்துபவர்கள்,
வாங்கும் சம்பளத்தை முழுதாக உங்கள் கையில் கொடுப்பவர்கள்.
மிகவும் வசீகரமானவர்கள்,
வீட்டு வேலைக்கு பணிப்பெண் அமர்த்தாமல் அனைத்தையும் தானே செய்யும் திறன் படைத்தவர்கள்.
அனைத்து வேலைகளில் கணவருக்கு உதவி செய்யும் விருப்பம் உள்ளவர்கள், மற்றும்
மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள்"
.
அவ்ளோ தான்.. அந்த ஆணால்
தாங்க முடியல...
சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும்
இன்னொரு தளம் இருக்கே.. அங்க
என்ன இருக்குன்னு பார்க்காம
எப்படி முடிவு எடுக்குறது...
சரி மேல போயி தான்
பார்ப்போம்னு போறாங்க..
.
ஆறாவது தளம்
அறிக்கை பலகையில்,
.
"இந்த தளத்தில் மனைவிகள் யாரும்
இல்லை.. வெளியே செல்லும்
வழி மட்டுமே உள்ளது.. இந்த
தளத்தை அமைத்ததற்கு காரணமே,
மனைவியின் மீதான கணவனின் எதிர்பார்ப்புக்கு வானமே எல்லை என்பதை
நிரூபிக்கத்தான்..!
.
எங்கள்
கடைக்கு வந்தமைக்கு நன்றி...!
.
"பார்த்து கவனமாக
கீழே படிகளில் இறங்கவும் "
அப்படின்னு போட்டிருந்தது


Source: FB


Aval Vikatan
 
இதைத்தான் நம் பெரியோர்களும் சொன்னார்கள்:

''பேராசை; பெரு நஷ்டம்''!! :Cry:
 
Those who trust and accept women at face value without thinking too much normally do well in life.

They believe in' Judge ye not while marrying and you shalt not be judged later negatively later in life by wife".

This is Krish wisdom for all youngmen
 
Those who trust and accept women at face value without thinking too much normally do well in life.

They believe in' Judge ye not while marrying and you shalt not be judged later negatively later in life by wife".

This is Krish wisdom for all youngmen

First two lines OK Sir;

Third line..... " Illaathathaiyum Pollaathathaiyum Sollaatheenga Sir". ........ lol
 
Status
Not open for further replies.
Back
Top