மனித சேவையே மோட்சத்துக்கான வழி: எஸ்.குர&#300

  • Thread starter Thread starter V.Balasubramani
  • Start date Start date
Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
மனித சேவையே மோட்சத்துக்கான வழி: எஸ்.குர&#300

[h=1]மனித சேவையே மோட்சத்துக்கான வழி: எஸ்.குருமூர்த்தி சிறப்பு நேர்காணல்[/h]8 வது இந்து ஆன்மிக சேவை கண்காட்சி - 2016

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மாறிவரும் குடும்ப மற்றும் மனிதாபிமான மதிப்பீடுகள், சேவை மனப்பான்மையின் தேவை என நவீன உலகம் சந்திக்கும் சவால்களை இந்து ஆன்மிகம் எப்படிச் சந்திக்கிறது? இதற்கான பதிலாக சென்னையில் ஆண்டுதோறும் நடக்கும் இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியை ‘ஹிந்து ஸ்பிரிச்சுவல் அண்ட் சர்வீஸ் பவுண்டேஷ’னும், ‘இனிஷியேட்டிவ் ஃபார் மாரல் அண்ட் கல்ச்சுரல் ட்ரெய்னிங் பவுண்டேஷ’னும் நடத்திவருகின்றன.

வரும் ஆகஸ்ட் மாதம் சென்னையில் ஏ.எம்.ஜெயின் கல்லூரி மைதானத்தில் 2-ம் தேதி தொடங்கவிருக்கும் இந்தக் கண்காட்சி குறித்து இதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான எஸ். குருமூர்த்தியிடம் பேசியதிலிருந்து….

இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி
, எட்டாவது முறையாக நடக்கவுள்ளது…இந்தக் கண்காட்சிக்கான தொடக்க உத்வேகம் பற்றிச் சொல்லுங்கள்…

2005-ம் ஆண்டு நான் அமெரிக்கா சென்றிருந்தபோது, அங்கு வசிக்கும் இந்தியர்களிடம் பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அமெரிக்கர்களிடையே, இந்தியா பற்றி ஒரு தவறான எண்ணம் நிலவுவதைப் பற்றி அவர்கள் கவலை தெரிவித்தனர்.
இந்திய சமூகம் சக மனிதர்கள் மீது பரிவற்ற சமூகம் என்று வெளிநாட்டவர்கள் நினைப்பதாகச் சொன்னார்கள். இந்து மதம், வீடு பேறு சார்ந்து சிந்திக்கும் சமயமென்றும், இகவுலகம் குறித்தும் சக மனிதர்களின் வாழ்க்கை நிலை குறித்தும் சிந்தனை இல்லாதது என்ற கருத்தும் அங்கே இருக்கிறது.

இதுபோன்ற தவறான எண்ணங்களைப் போக்கச் சர்வதேச அளவிலான செயல்பாடுகள் தேவை என்ற முடிவுக்கு நானும் நண்பர்களும் வந்துசேர்ந்தோம். இந்தியாவில் முப்பது இடங்களில் பல்வேறு அறிஞர்களுடன் கூடிப் பேசினோம். 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம், மேற்கத்திய சமய அறிஞர்களும் கீழைத்தேய அறிஞர்களும் சந்தித்துப் பேசும் வகையில் ‘க்ளோபல் பவுண்டேஷன் பார் சிவிலைசேஷன்ஸ் ஹார்மனி இந்தியா’ (ஜிஎப்சிஎச்) துவக்கச் சந்திப்பை டெல்லியில் நடத்தினோம்.

Read more at: http://tamil.thehindu.com/society/s...மூர்த்தி-சிறப்பு-நேர்காணல்/article8910488.ece
 
[h=1]S.Gurumoorthy Explains Idea Behind Spiritual Fair | Tamil The Hindu[/h][h=1]இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி பற்றி எஸ். குருமூர்த்தி[/h]

Published on Feb 7, 2015


Link:
https://www.youtube.com/watch?v=TqdBm9ECNt0
 
Status
Not open for further replies.
Back
Top