மசாலா ஓட்ஸ்

Status
Not open for further replies.
மசாலா ஓட்ஸ்

உடல் எடையை குறைக்க பலர் ஓட்ஸை சாப்பிடுவது வழக்கம்.இதில் பலருக்கு ஓட்ஸை பாலுடன் சர்க்கரை கலந்து தான் செய்யத் தெரியும். ஆனால் ஓட்ஸை மசாலா பொருட்களளை சேர்த்து மசாலா ஓட்ஸாகவும் செய்யலாம். இது மிகுந்த சுவையுடன் இருப்பதோடு உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

இனி வழக்கமான முறையில் ஓட்ஸை செய்து சாப்பிடுவதற்கு மாற்றாக இப்படியும் செய்து சாப்பிடலாம்.இதனை செய்வதும் மிக சுலபம்.இதை எவ்வாறு செய்வது என்பது பற்றி விளக்கமாக பார்ப்போம்.


தேவையான பொருட்கள்:-


1.ஓட்ஸ் – 1/2 கப்
2.மல்லி தூள் – 1/4 டீஸ்பூன்
3.மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
4.சீரகப் பொடி – 1/4 டீஸ்பூன்
5.மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
6.உப்பு – தேவையான அளவு
7.தண்ணீர் – தேவையான அளவு
8.கொத்தமல்லி – சிறிதளவு நறுக்கியது

செய்முறை:-

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஓட்ஸை போட்டு சிறிது நேரம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.


நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் வறுத்து வைத்துள்ள ஓட்ஸை போட்டு வேக வைக்க வேண்டும்.தேவை பட்டால் சிறிதாக நறுக்கிய காரட் மற்றும் வெங்காயம் சேர்த்து கொள்ளலாம்.

ஓட்ஸ் நன்கு வெந்ததும், அதில் சீரகப் பொடி, மல்லி தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை சிறிது நேரம் கிளறி விடவும்.

இறுதியில் நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான மசாலா ஓட்ஸ் தயார்.


????? ????? ??????? ??????? - Tamils Now
 
Status
Not open for further replies.
Back
Top