• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ப்ரயாகையில் செய்ய வேண்டியது.

kgopalan

Active member
ப்ரயாகையில் செய்ய வேண்டியது

ஆத்ம ருணம் தேவ ருணம் பித்ரு ருணம் என்ற மூன்று கடன்களுடன் நாம் பிறக்கின்றோம் .இவைகளை அகற்றினால் தான் முக்தி பெறலாம். ப்ரயாகை

யில் ஆத்ம ருணம்;காசியில் தேவ ருணம் கயா வில் பித்ரு ருணம் அகலும்;
முக்தி பெற விரும்புவோர் அவசியம் இதை செய்ய வேண்டும் இந்த
கடன்களிலிருந்து விடுபடத்தான் தெய்வங்களையும் பித்ருக்களையும் ஆராதிக்க வேண்டும். தீர்த்தாடனம் செய்ய வேண்டும் என யாத்ரா கல்பம்

கூறுகிறது. மத்ஸ்ய புராணம் வாயு புராணம் பத்ம புராணங்களில் இந்த ப்ரயாகை காசி கயா யாத்திரை மிக சிறந்தது என க்கூறுகின்றது.

அலகாபாத்திலிருந்து 6 கிலோ மீட்டரில் உள்ளது. ப்ரயாகை; தாரா கஞ்ச் என்ற ரயில்வே ஸ்டேஷனுக்கு மிக சமீபம்.. இங்கு சிவ மடம் உள்ளது.
இந்த சிவ மடத்தில் உள்ள பண்டிதரிடம் என்னால் இவ்வளவு தான் முடியும் எனச்சொல்லி பணம் கொடுத்தால் அதற்கு தகுந்த மாதிரி அவர் உங்களுக்கு எல்லாம் செய்து வைக்கிறார்..
1. ப்ராஹ்மணர்களுக்கு தக்ஷிணை தந்து த்ரிவேணி ஸ்நானம்/ வேணி தாநம் செய்ய முதலில் யோக்கியதை உண்டாவதற்கு அநுமதி பெற வேண்டும்.
2 ஸகல பாபங்களும் அகல ப்ராஜாபத்ய க்ருச்சர தாநம் செய்ய வேண்டும். இதற்கு ஒரு மட்டை தேங்காயுடன் தக்ஷிணை ப்ராமணருக்கு கொடுக்கவும்.

3. பார்வதி பரமேஸ்வரர் ; லக்ஷ்மி நாராயணர் அருளை பெற பல தாநம் செய்ய வேண்டும். பழம் தாம்பூலம், தக்ஷிணை தர வேண்டும்.
4. கங்கா புத்ரர்களாக க்ஷேத்ர வாஸிகளாக உள்ளவருக்கு முழு தேங்காயும் தக்ஷிணையும் தந்து தீர்த்த ராஜனது பேட்டி பெற வேண்டும்.
5. ஸ்நானம் செய்த பிறகு நமது பீடை அகல நாம் உடுத்திய புதிய அல்லது பழைய வஸ்திரத்தை பண்டாவிற்கு தக்ஷிணையுடன் தானமாக தர வேண்டும்..

6 ஸேதுவிலிருந்து கொண்டுவந்த வேணி மாதவர் மணலை பூஜை செய்து ஜலத்தில் போட வேண்டும்.
7. மறு நாள் தீர்த்த சிராத்தம் செய்ய வேண்டும். விசுவே தேவருக்கு ஒருவர்; அப்பா வர்க்கம் ஒருவர்; அம்மா வர்க்கம் ஒருவர்; தாயின் அப்பா வர்க்கம் ஒருவர்; தாயின் அம்மா வர்க்கம் ஒருவர்; காருண்ய பித்ருக்கள் ஒருவர்.

மொத்தம் 6 ப்ராமணர்கள். வரித்து விதிப்படி வேஷ்டி அளித்து தீர்த்த சிராத்தம் செய்ய வேண்டும். சிராத்தத்திற்கு முன்பே பரேஹணி தர்பணம் செய்ய வேண்டும்.17 பிண்டங்கள் வைத்து பிண்ட ப்ரதானம் செய்ய வேண்டும்;
அப்பா வழி 3; அம்மா வழி 3; தாயின் அப்பா வழி 3; தாயின் அம்மா வழி 3; காருண்ய பித்ருக்கள்-1; தர்ம பிண்டம் ( க்ஷேத்ர பிண்டம் )-4.மொத்தம்=17
தச தானம் அல்லது பஞ்ச தானம் செய்வது அவசியம்..

8. மூன்றாவது நாள்:- தம்பதீ பூஜை செய்ய வேண்டும். வேட்டி; புடவை; தக்ஷிணை; ஸெளபாக்கிய த்ரவ்யங்கள்; மெட்டி; திருமாங்கல்யம்.. தாம்பூலம் புஷ்பம்; பழம்; நலங்கு சாமான்; பால் கொடுக்கும் கிண்ணம் முதலியன
ஸங்கல்பம் செய்து முடித்துக்கொண்டு போட் மூலம் கங்கை, யமுனை; ஸரஸ்வதி என்ற மூன்று நதிகளும் கூடும் த்ரிவேணிக்கு செல்ல வேண்டும் இங்கு .கங்கை ஜலம் பிடிக்க ப்லாஸ்டிக் கேன் கொண்டு செல்ல வேண்டும்

போட்டில் பண்டா மந்திரம் சொல்லி இந்த மூன்று நதிகளையும் பூஜிக்க சொல்வான் .த்ரிவேணி ஸங்கமத்தில் போட்டை நிறுத்துவான். முதலில் புருஷர்கள் வபனம் செய்து கொள்ள வேண்டும். இனி வபனம் கயா சிராத்தம் முடிந்த பிறகு தான் செய்து கொள்ள வேண்டும் அது வரை வபனம் இல்லை..அதற்கு முன் மனைவி தன்

புருஷனை மாதவனாக கருதி பூஜை செய்து கல்யாணம் ஆனது முதல் இதுவரை தான் புருஷனுக்கு செய்த அபசாரங்களை மன்னிக்கும்படி கேட்க வேண்டும். அப்படியே அதை மன்னித்து மனைவியை த்ரிவேணியாக கருதி பூஜிக்க வேண்டும்
.கணவன் மனைவியின் தலை வாரி பின்னல் போட்டு புஷ்பம் வைத்து தலை முடியின் நுனியில் இரண்டு அங்குலம் கத்திரித்து மஞ்சள் குங்குமம் அக்ஷதை அப்ரஹ பொடி,சந்தனம் காதோலை கருகமணி வெற்றிலை பாக்கு

இவைகளுடன் வைத்து மனைவியிடம் கொடுக்க அதை மனைவி பண்டாவிடம் கொடுக்க வேண்டும். பண்டா அதை ஜலத்தில் போடுவார்.வெற்றிலை மாத்திரம் மிதந்து சென்று விடும் .முறத்தில் உள்ள மற்ற பொருட்களை பண்டா இந்த இடத்தில் போட மாட்டார்.

முடி மேலே மிதக்காமல் உள்ளே சென்று விடும். த்ரிவேணிக்கு மூங்கில் (வேணு) தாநம் செய்தால் ப்ரியம். எனவே சிறிய முறத்தில் சீப்பு கண்ணாடி . குங்கும சிமிழ்; மஞ்சள் பொடி; அப்ரஹ
பொடி; அரிசி; வெற்றிலை; பாக்கு பழம்; ரவிக்கை; தக்ஷிணை இவைகளை வைத்து மற்றொரு முறத்தால் மூடி தானம் செய்ய வேண்டும்.

வேணி தானம் செய்த பின் தம்பதிகள் இருவரும் சேர்ந்து யமுனையில் ஸ்நானம் செய்து போட்டின் வழியாக கோட்டை அருகே செல்ல வேண்டும்.அங்கு கோட்டைக்குள் பூமிக்கு அடியே ஒரு பெரிய கோவில் உள்ளது அதில் மனித உரு
அளவில் சந்திரன்; சூரியன்; யமன்; வால்மீகி; வ்யாஸர்; துர்வாஸ ர்;தத்தாத்ரேயர் முதலிய விக்கிரஹங்களும் ஆலமரத்தின் அடியும் தெரிகிறது;
இந்த ஆல மரம் அக்ஷயமானது இந்த ஆல மரத்தில் மத்ய பாகம் காசியிலும்;நுனி பாகம் கயா விலும் உள்ளது; ப்ரளய காலத்தில் இந்தஇலையின் மீது பகவான் படுத்து இருப்பார்.

இங்கிருந்து வீட்டிற்கு ஆட்டோ அல்லது டாங்கா வைத்துக்கொண்டு செல்ல வேண்டும். போகும் வழியில் பூமியில் ஹனுமார் படுத்த வண்ணம் இருக்கும் கோவிலில் சென்று பார்த்து விட்டு செல்ல வேண்டும்.. ஆனந்த பவன் பார்.
இங்கு பரத்வாஜர் ஆச்ரமத்தில் ஸப்த ரிஷிகள்; பார்வதி பரமேஸ்வரர்; காளி வாசுகி; ஒரு குகை இவைகள் இருக்கின்றன. காஞ்சி சங்கராசார்யார் விமான மணடபம் பார்க்க வேண்டிய ஒன்று வேணி மாதவரை இங்கு பார்க்க வேண்டும். ராமானுஜ மடம்; மத்வ மடம் பார்க்கலாம்.
ப்ரயாகையின் காவல் தெய்வம் வாஸுகி என்ற ஸர்ப்ப ராஜன். இந்த ஆலயத்தில் அம்பு படுக்கையில் பீஷ்மர் படுத்து இருப்பதையும் பார்க்கலாம்.
அலோபி மாதா சோமேச லிங்கம் பார்க்கலாம் பெரு வேள்விகள் கண்ட பூமி ஆனதால் ப்ரயாகை என்று அழைக்க படுகிறது; சிராத்தம் ஆனபிறகு வேணி மாதவரை அவசியம் தரிசனம் செய்ய வேண்டும்.

அக்பர் சக்கிரவர்த்தி இந்த ஊருக்கு வந்தவுடன் ஊரை அல்லா+ஆபாத்= இறைவன் உறைவிடம் என்று சொன்னான். இதுவே மருவி அலஹாபாத் ஆயிற்று;.

மாதவர் கோவில் ஆதி சேஷன் கோவில் உள்ளது.
கங்கை ஜலம் வேண்டியதை வாங்கி ஈய பற்று வைத்து ஊருக்கு எடுத்து செல்ல தயார் செய்து கொள்ளலாம் .கங்கையை பூஜித்து கங்கா ஸமாராதனை செய்து ஆச்சார்ய ஸபாவனை செய்து கிளம்ப வேண்டும் காசிக்கு..

தேசீய நெடுஞ்சாலை அலகாபாத்திலிருந்து காசிக்கு 170 கிலோ மீட்டர். உள்ளது. நடுவில் 85 கிலோ மீட்டரில் விந்தியாசல் உள்ளது. இங்கு துர்க்கா விந்தியா வாஸினி என்ற பெயருடன் அருள் பாலிக்கிறாள்.;
காசியிலிருந்து கயா 276 கிலோ மீடர். ரயிலில் சென்றால் 220 கிலோ மீட்டர்.
கோஆ சூப்பர் எக்ஸ்ப்ரஸ் ( 12358 ) 4 மணி நேரத்தில் சென்று விடலாம்..

ப்ரயாகையில் ஆண்கள் வபநம் பெண்கள் வேணி தாநம் செய்து வேணி மாதவர் உள்ளிட்ட தெய்வங்களை வழிபட வேண்டும் .இதனால் ஆத்ம ருணம் விலகுகிறது.

காசியில் கங்கா ஸ்நானம் செய்து கால பைரவரிடமும் தன்டபாணியிடமும்
தண்டத்தால் அடி பெற்றுக் கொண்டு அங்கு பல தெய்வங்களை வழி படுவதால் தேவ ருணம் விலகும்.
ராமேஸ்வரம் ப்ரயாகை; காசி; கயா ஆகிய க்ஷேத்ரங்களில் தீர்த்த சிராத்தம் செய்து விஷ்ணு பாதத்திலும் அக்ஷய வட சாயையிலும் பிண்டங்கள் இடுவதால் பித்ரு ருணம் விலகும்..

..சிலர் சென்னையிலிருந்து நேரே காசிக்கு ரயிலில் சென்று விட்டு காசியிலுள்ள வாத்யாரையும் அழைத்து கொண்டு 3 மணி நேரத்தில் கார் மூலம் ப்ரயாகை வந்து ஒரே நாளில் எல்லாம் முடித்து கோண்டு காரில் காசி
திரும்பி விடுகிறார்கள். மறுபடியும் காசியிலிருந்து காரில் 4 மணி நேரத்தில் கயா சென்று ஒரே நாளில் எல்லாம் முடித்துக்கொண்டு காசி வருகிறார்கள். காசியிலிருந்து நேரே ரயிலில் சென்னை வருகிறார்கள். இது அதம பக்ஷம்.
சில வாத்யாரிடம் சொந்த கார் உள்ளது. அதில் வாத்யாரே காரை ஓட்டி சென்று திரும்பி விடுகிறார்.
திரிவேணிக்கு முதல் முறை போகும் போது மட்டும் தான் வேணி தானம். அதன் பிறகு எத்தனை முறை சென்றாலும் வேணிதானம் செய்ய வேண்டியது இல்லை.
சாஸ்திரிகள் வீட்டிலேயே ஸ்நானம் செய்து விட்டு பிள்ளையார் பூஜை மஹா ஸங்கல்பம் செய்து கிரஹ ப்ரீதி க்ருச்சர ப்ரதிநிதி தானம் செய்து
விட்டு மனைவி கணவனுக்கு பாத பூஜை செய்து கணவனின் நல்வாழ்வு வேண்டி வேணி தானம் செய்ய அநுமதி கேட்டு பெற வேண்டும். பிறகு நதிக்கரை செல்ல வேண்டும்.யுவதிகளும் வேணி தானம் செய்ய வேண்டும்.
வேணி தானம் செய்வதனால் ஸெளபாக்கியம், செல்வ செழிப்பு சந்ததி ஆயுள் விருத்தி பதியிடம் ப்ரியமும் உண்டாகும்...
பரித்ராஜகோபனிஷத் எல்லா பாபங்களும் தலை முடியில் போய் தங்குகிறது. ஆதலால் முடியை சுத்தமாக எடுத்து.காணிக்கையாக அளித்து விட வேண்டும் என்கிறது.
வேணி தானம் செய்யும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்.
திரிவேணி தேவிக்கு அநேக நமஸ்காரங்கள். எனக்கு எப்போதும் பாதி வ்ரத்யம் கொடுப்பாயாக; .என் ஸெளபாக்கியம் பெருகட்டும்;. நான் இங்கு வந்து வேணி தானம் செய்ததால் இந்த ஜன்மாவிலும் முன் ஜன்மாக்களிலிலும் நான் செய்த பாபங்கள் என்னை விட்டு நீங்கட்டும்..
வேணி தானம் சுக்கில பக்ஷத்தில் செய்ய வேண்டும். திதி, நக்ஷத்திரம் இரண்டும் நன்மை செய்ய க்கூடிய தினம் பார்த்து ப்ரயாகைக்கு சென்ற நாளன்றோ அல்லது மறு நாளோ வேணி தானம் செய்ய வேண்டும்.
தலைமுடி பிரிந்து விடா வண்ணம் முடிந்து கொண்டு முகத்தில் மஞ்சள் பூசிக்கொண்டு கணவன் மனைவி இருவரும் கைகோர்த்து கொண்டு இருவரும் சேர்ந்து திரிவேணி சங்கம ஸ்நானம் செய்ய வேண்டும்
பிறகு இருவரும் போட்டில் வந்து கிழக்கு அல்லது வடக்கு நோக்கி உட்கார்ந்து மனைவி கணவனிடம் வேணி தானம் செய்ய அனுமதி வாங்கி
பின்னர் கணவன் மனைவியின் தலை முடியை பிண்ணி விட்டு பூச்சூடி தலை முடியை இரண்டு அங்குலம் நுனியில் வெட்டி மனைவியிடம் கொடுக்க வேண்டும். மனைவி அதை ஸெளபாக்கிய த்ரவ்யங்களுடன் சேர்த்து
பண்டாவிடம் தானம் செய்து விட்டு பண்டாவிடம் முடியை த்ரிவேணியில் போட சொல்லி கொடுக்க வேண்டும் முடி மிதந்து வெளியே போகாமல் தண்ணிரில் அடியின் செல்வது நல்லது. பிறகு தம்பதிகள் கை கோர்த்து
மறுபடியும் ஸ்நானம்: போட்டிற்கு வந்து வேறு காய்ந்த ஆடை உடுத்தி த்ரிவேணிக்கு பூஜை செய்ய வேண்டும். ப்ராஹ்மணர்களுக்கும்
சுமங்கலிகளுக்கும் தானம் செய்ய வேண்டும். பிறகு தம்பதியர் வீட்டுக்கு வந்து தம்பதி பூஜை செய்து சாப்பாடு போட வேண்டும். பிறகு தம்பதியர் சாப்பிட வேண்டும். .
தலை முடி நுனியை கத்தரித்து பண்டாவிற்கு தானமாக கொடுத்து அதை கங்கை, யமுனை ஸரஸ்வதி சங்கமிக்கு மிடத்தில் போடச்சொல்லி முத்தேவியற்கும் காணிக்கையாக போடுவதற்கு வேணீ தானம் எனப்பெயர்...

வேனி மாதவர் மணலை தண்ணீரில் கரைக்க வேண்டும். ஸங்கம இடத்திலிருந்து சற்று நகர்ந்து சுத்த கங்கை நீரை கேனில் பிடித்து கொள்ள வேண்டும்.

த்ரிவேணி ஸங்கமம் இடத்திலும் மற்ற இடங்களிலும் சுமங்கலிகளுக்கு தாம்பூலம் பழம் புஷ்பம் ரவிக்கை துண்டு. கண்ணாடி சீப்பு; மஞ்சள் பொடி; குங்குமம்; கண்ணாடி வளையல்;; கண்மை; மருதாணி பவுடர் தக்ஷிணை கொடுக்க வேண்டும்

வீட்டிற்கு வந்து ஈர வஸ்த்ரம் தானம் செய்ய வேண்டும்.
தீர்த்த சிராத்தம் செய்ய வேண்டும். 17 பிண்டங்கள் பிண்ட தானம்; தர்பணம் செய்ய வேண்டும்.சிராத்தம் முடித்த பிற்கு வேணி மாதவர் கோயில் செல்ல வேண்டும். தச தானம் செய்ய வேண்டும்.

த்ரிவேணி கரையில் பூஜை செய்யும் போது அந்தந்த தேவிகளுக்கு இந்த ப்ரார்த்தனைகளும் சொல்லலாம்.
த்ரிவேணி சங்கமத்தில் கங்கைக்கு பூஜை செய்யும் போது இந்த ஸ்லோகம் சொல்லலாம்.
விஷ்ணு பாதோத்பவே தேவி மாதவ ப்ரிய தேவதே தர்சனே மம பாபம் மே தஹத்வக்நிரிவேந்தனம். லோக த்ரயேபி தீர்த்தாணி யானி ஸந்தி ச தேவதாஹா. தத் ஸ்வரூபா த்வமேதாஸி பாஹி ந ஹ பாப ஸங்கடாத்
கங்கே தேவி நமஸ்துப்யம் சிவசூடா விராஜிதே சரணத்ராண ஸம்பன்னே த்ராஹி மாம் சரணாகதம்.

யமுநாவிற்கு பூஜை செய்யும் போது இந்த ஸ்லோகம் சொல்லலாம்.

இந்த்ர நீலோத்பலாகாரே பானுகன்யே யசஸ்வினி ஸர்வ தேவஸ்துதே மாதஹ யமுநே த்வாம் நமாம்யஹம்
ஸர்வ தீர்த்த க்ருதாவாஸே ஸர்வ காம வரப்ரதே ஸர்வ பாப க்ருதத்வம்ஸே நமஸ்தே விஸ்வபூஜிதே.
ஸம்ஞ்ஞாகர்ப ஸமுத்பூதே ஸம்ஜ்ஞோசாரண புண்யதே விஷ்ணு ப்ரியதமே தேவி யமஜ்யேஷ்டே நமோ நமஹ.
ஸரஸ்வதி நதிக்கு பூஜை செய்யும்போது இதை சொல்லலாம்.

ப்ரஜாபதி முக்கோத்பூதே ப்ரணதார்தி ப்ரபஞ்சினி ப்ரயாக மிலிதே தேவி ஸரஸ்வதி நமோஸ்துதே
பத்மராக தலாபாஸே பத்மகர்ப அருணேக்ஷனே பத்மமாலா வினிதாங்கே பாபக்ந்யை தே நமோநமஹ
வீணாவாத ரஸாபிஞ்ஞே வீணயா ஸமலங்க்ருதே கீத வீணாரவே மாதஹ பாஹிமாம் சரணாகதம்;
த்ரீவேணியில் பூஜிக்கும் போது சொல்லக்கூடிய ஸ்லோகம்

த்ரிவர்ணே த்ரியம்பிகே தேவி த்ரிவித –அக- விநாசினி த்ரி மார்கே த்ரிகுணே த்ராஹி த்ரிவேணி சரணாகதம்; ஸம்சார அநல சந்தர்பம் காம க்ரோதாதி வேஷ்டிதம் பதிதம் த்வத் பாதாப்ஜே மாம் சீதளம் குரு வேணிகே
தீர்த்த ராஜே ப்ரயாகே அஸ்மின் ப்ரத்யக்ஷவாஸி ஜகத் ஹிதே நானா ஜன்ம க்ருதா ப்யாஸாத் பாதகாத் உத்தரஸ்வ மாம்
அரச மரத்தின் வேர் அக்ஷயவடம் காணும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்

ஜடரே அகிலமாதாய த்வயி ஸ்வபிதி மாதவஹ; க்ருத்வா முகாம்புஜே பாதெள நமோ அக்ஷயவடே நமஹ
த்வன்மீலே வஸதே ப்ருஹ்மா தவ மத்யே ஜநார்தனஹ த்வதக்ரே வஸதே சூலி தாத்ருசம் த்வாம் நமாம்யஹம்.
ஸெளவர்ணானி தலான்யஸ்ய ஸப்த பாதாலகா ஜடாஹா யாவன் மண்டல விஸ்தாரோ வடராஜாய தே நமஹ.
வேணி மாதவரை காணும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்;

நீல ஜிமூத ஸங்காச பீத கெளசேய பூஷித ப்ரயாக நிலய ஸ்வாமின் வேணி மாதவ தே நமஹ
சங்க சக்ர கதா பத்ம விபூஷித சதுர்புஜ சதுர்வர்க பலாதார வேணி மாதவ தே நமஹ; த்வத் பாத ப்ரணதம் மாம் த்வம் கமல ஸ்ரீ முகா த்ருசா உத்தரஸ்வ மஹோதார வேணீமாதவ தே நமஹ.

சனகாதி முனிவருக்கு ஆதிசேஷன் உரைத்த த்ரிவேணி தேவி ஸ்தோத்ரம் வ்யாஸர் அருளிச்செய்தது.
உடல் இந்திரியங்கள். ப்ராணன் மனது, புத்தி. சித்தம் அஹங்காரம் அஞ்ஞான துகள்கள் போன்ற அனைத்தையும் தனது ப்ரகாசத்தால் ப்ரகாசிக்க செய்யம் த்ரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிப்பவளாக இருக்கட்டும்.

ஜாக்ரத் ஸ்வப்ணம் சுஷுப்தி ஆகிய மூன்று நிலைகளிலும் ப்ரகாசிக்க செய்பவளும் இவற்றின் விகாரங்களை மாற்றுபவளும் விகாரங்களை அகற்றுபவளுமாக உபனிஷத்துகளால் போற்றப்படும் த்ரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிக்கட்டும்.

ஸுஷுப்தி நிலையில் அறிவு அழியும்போதும் இந்திரியங்களின் ஆளும் சக்தி குறையும் போதும் கூட என்னை நடமாட வைக்கும் த்ரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிப்பவளாக இருக்கட்டும்
அனைத்து உலக விஷயங்களிலும் தினம் கட்டுண்டு கிடக்கும் எம்மோடு தாமே வந்து கலந்து அபரிமிதமான ப்ரியம் செலுத்தி ஆதரிக்கும் ஸாக்ஷாத் திரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிப்பவளாக இருக்கட்டும்.

மறைபொருளான விஞ்ஞானம் பரந்த ப்ரபஞ்சத்தின் பலவிதமான வேறுபாடுகளை ப்ரகாசபடுத்தி ஞானமளிக்கும் த்ரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிக்கட்டும்.

ஆரம்பத்தில் ப்ருஹ்மாவையும் மத்தியில் விஷ்ணுவையும் இறுதியில் சிவனையும் ப்ரகாசபடுத்தி காட்டும் திரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிக்கட்டும்..

அகார வடிவில் ப்ருஹ்மா விசுவேதேவ ஸ்வரூபி; மகார வடிவில் அக்னி ஸ்வரூபி;என்று தேஜஸ் ஸூத்ரம் சொல்வதை உணர்த்தும் த்ரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிக்கட்டும்;

சிவபெருமானின் தேகத்திலிருந்து வேறுபடாதவளும் முக்தி தேவி ஸ்வரூபியும் அஞ்ஞானிகளுக்கு சூன்ய மானவளும் ஓங்கார லக்ஷ்மியுமான திரிவேணீ தேவி எனக்கு ஸித்தி அளிக்கட்டும்
இந்த துதியை தினமும் காலை, மதியம் மாலை சொல்பவர்களுக்கு திரிவேணிதேவி பிரசன்னமாகி அருள் புரிவாள் என்பதில் சந்தேகம் இல்லை;

மந்திர ஸாரமான இந்த ஸ்தோத்ரம் வ்யாஸ பகவான் செய்தது. இதை ஜபிப்பதால் திரிவேணி தேவி நம்மோடு எப்போதும் இருந்து காபாற்றுவாள்.
சிவ மடம் தாரா கஞ்ச் அலஹாபாத் ( 0532 ) 2500799.

இனி காசியில் செய்ய வேண்டுபவற்றை பார்ப்போம்..
 

Latest ads

Back
Top