பிராமண கலாசாரம்

Status
Not open for further replies.
பிராமண கலாசாரம்

பிராமண கலாசாரம் ஒரு முழு வாழ்வியல் கலாசாரம் என்று சொன்னால் அது மிகையாகாது. நமது வாழ்க்கையை எவ்வாறு நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவேண்டும் என்பதை சில சடங்குகள் மூலம் நமக்கு தெரிவிக்கின்ற ஒரு ஒப்பற்ற கலாசாரம் நமது பிராமண கலாசாரம்.
இந்த பிராமண கலாசாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது தினந்தோறும் நாம் செய்யவேண்டிய சடங்கான சந்தியாவந்தனம்.
இத சற்று விரிவாக காண்போம்.
இந்த சந்தியாவந்தனத்தை காலையில் சூரியன் உதிக்கும் சமயத்திலும் மற்றும் மாலையில் சூரியன் மேற்கு திசையில் மறையும் சமயத்திலும் செய்யவேண்டும் என்று நமது முன்னோர்கள் வகுத்துள்ளனர்.
இந்த சந்தியா காலத்தை ஜோதிட சாஸ்திரம் கோதூளி லக்னம் என்று கூறுகின்றது. இந்த நேரம் மிகவும் பவித்ரமானது. எந்த தோஷமும் இல்லாதது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது.
அதாவது, சூரியன் உதிக்கும் காலம் மனம் நிர்மலமாக இருக்கும். புள்ளினங்கள் தமது கீச்சுகளால் இந்த உலகை நிறைக்கும் காலம். மனம் அமைதியாகவும் தூய்மையாகவும் இருக்கும் நேரம்.
மேலும் இருள் நீங்கி ஒரு புதிய நாள் தோன்றும் காலம்.
இந்த புதிய நாளை நம்பிக்கையுடன் வரவேற்பதாக இந்த சந்தியா வந்தனம் அமைந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

மேலும, நேற்றைய குறைகள், குழப்பம், கவலைகள், போன்ற பல கழிவுகள் மறக்கப்படட்டும் மற்றும் மன்னிக்கப்படட்டும் என்று பிரார்த்திப்பதாக உள்ளது சந்தியா வந்தனம்.
இவ்வாறு ஒரு புதிய நாளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவைக்கும் ஒரு தினப்பழக்கம் சந்தியாவந்தனம்.
ஒரு புதிய நாளை தந்தமைக்காக இறைவனுக்கு நன்றி கூறும் ஒரு நிகழ்ச்சி சந்தியாவந்தனம்.
இந்த கருத்தையேதான் நவீன உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். நேற்றைய குறைகளை மன்னியுங்கள் மற்றும் மறந்துவிடுங்கள். இன்றைய நாளை நம்பிக்கையுடனும் நன்றியுடனும் எதிர்கொள்ளுங்கள் எனும் உளவியல் கருத்தைத்தான் நமது முன்னோர்கள் அன்றே கூறி வைத்த சந்தியாவந்தனம் அறிவுறுத்துகின்றது.

courtesy: Dr.SRK.Iyer:attention:
 
Status
Not open for further replies.
Back
Top