பிராமணர்கள் பற்றிய ஒரு பதிவு
நாகர்கோவிலைச் சேர்ந்த ஜெயமோகன் எனும் பிரபல தமிழ் எழுத்தாளருக்கு, கனடாவில் வசிக்கும் அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் எழுதிய ஒரு கடிதமும் அதற்கு ஜெயமோகன் அவர்கள் பதிலும் அதற்கு எதிர்வினையாக ஒரு அன்பர் எழுதியவற்றையும் கீழே தந்திருக்கிறேன்.
பிராமண சமூகத்தைச் சேர்ந்த முதியோரும் இளைஞரும், பெண்களும் இதைப் படித்துச் சிந்திக்கவேண்டும். காழ்ப்பு உணர்ச்சியோ, கோபமோ கொள்ளாது எழுதியிருப்பதை அசைபோட்டுப் படித்துக் கருத்துச் சொன்னால் பயனுண்டு.
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி
December 24, 2009 – 12:02 am
அன்புள்ள ஜெயமோகன், அபிராம்மண-முற்படுத்தப்பட்ட சாதிகள் மீதும் பிராம்மண சாதிகள் மீதும் இட ஒதுக்கீடு செயல்படுவதில் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. பிராம்மணர்கள் போல மிக மோசமாக வெறுப்புப்பிரச்சாரம் ஏவி விடப்பட்ட மற்றொரு சமுதாயம் உண்டா என்பது கேள்விக்குறி. தலித்துகள் மீது உள்ள வெறுப்பு அழிந்து கொண்டிருக்கிறது. பிராம்மணர்கள் மீதுள்ள வெறுப்பு மிகக் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.
உண்மையை சொன்னால் முற்போக்காக சொந்த சாதியின் கொடுமைகளை எதிர்த்த குரல்கள் சொந்த சாதியை சுயபரிசோதனை செய்த குரல்கள் தமிழ்நாட்டில் வேறெந்த சாதியைக் காட்டிலும் பிராம்மணர்களிடையேதான் கூடுதலாக வந்தது என நினைக்கிறேன். ஆனால் தலித் குடிசைகளை எரிக்கும் ஆதிக்க சாதியினருக்கு பழி போட ஒரு நல்ல வாய்ப்பாக “பிராம்மணீயம்” “பார்ப்பனீயம்” ஆகியவை உள்ளன. இந்த வெறுப்பு பிரச்சாரத்தை பிற முற்படுத்தப்பட்ட சாதிகள் சுமக்க வேண்டியதில்லை. இதன் விளைவுகள் பல்வேறு விதமாக இருக்கின்றன. ஒன்று பிராம்மணர்களாக பிறந்தவர்கள் ஒன்று அதீத பிராம்மணிய எதிர்ப்பு என்கிற பெயரில் ஹிந்து ஞான மரபை ஈவெராவை விட தீவிரமாக எதிர்க்கிறார்கள். அல்லது ஒரு சிறுகுழுவாக தங்களுக்குள் மட்டுமே பேசுவோராக சுருங்கிவிடுகிறார்கள். இவற்றுக்கு அப்பால் தாங்கள் தன்னளவிலேயே பிறரை விட மரபணுரீதியாகவோ கர்மவினையாலோ உயர்ந்தவர்கள் என நினைக்கும் பிராம்மணர்கள் மிகக்குறைவானோரே.
தாங்கள் பிறப்பினாலேயே ஈகைக்குணமும் விருந்தோம்பலும் தமிழ் சைவ பண்பாடும் பிறரை விட அதிகமாகக் கொண்டவர்கள் என நம்பும் வெள்ளாளர்களையும் தாங்கள் பிறவியிலேயே வீரத்துடன் பிறந்தவர்கள் என நம்பும் தேவர்சாதியினரையும் விட அத்தகைய பிராம்மணர்கள் எண்ணிக்கையில் குறைவாகக் கூட இருக்கலாம் அல்லது சம அளவில் இருக்கலாம். என்ன சொல்ல வந்தேனென்றால் பிராம்மணர்கள் பிற முற்படுத்தப்பட்ட சாதியினரைப் போலல்லாமல் இந்த வெறுப்பு பிரச்சாரத்தை -எவராலும் தட்டிக்கேட்கப்படாத பெருமளவு நாசி யூத இனவெறுப்பை ஒத்த பிரச்சாரத்தை- சேர்ந்து சுமக்கின்றனர். மிகவும் சரியான பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு எனும் சமூகநீதி தீர்வை அமுலாக்க விடாமல் தடுக்கும் கருத்தாக்கம் அந்த பிராம்மண இன வெறுப்புதானே?
பணிவன்புடன்
அரவிந்தன் நீலகண்டன்
அன்புள்ள அரவிந்தன்,
நீங்கள் குறிப்பிடுவது உண்மை. நானே பல சமயங்களில் எழுதிய விஷயங்கள்தான். பிராமணர் மீதான வெறுப்பு என்பது இயல்பான ஒரு சமூக உருவாக்கம் அல்ல. கிட்டத்தட்ட இருநூறு வருடங்களாக திட்டமிட்டு மெல்லமெல்ல உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட ஒரு விஷயம். அதன் பின்னால் உள்ள நோக்கம் இந்து மதத்தின் மரபார்ந்த விஷயங்களை தாக்க்கி அழிப்பது மட்டுமே. இந்து மதத்தின் அனைத்து பழைமையான தீமைகளுக்கும் பிராமணர்களை பொறுப்பாக்குவது அதில் ஒரு முதல் படி. அதன்பின் தங்களை அதில் இருந்து விடுவித்துக்கொள்வது பிறருக்கு எளிதாகிறது. அந்த வெறுப்புப் பிரச்சரத்திற்கு எதிராக வரும்காலத்தில் வலுவான பதில் பிராமனர் அல்லாத சாதியினரிடமிருந்தே உருவாகி வரும் என நன் நினைக்கிறேன் நான் அதில் ஒருவன்.
ஆனால் இதற்கு தடையாக இருப்பது எந்தவிதமான முற்போக்கு அம்சத்தையும் உள்வாங்காமல் மனம் குறுகிப்போயிருக்கும் சில பிராமணர்களின் குரல்தான்
ஜெ
அன்புள்ள கலிராஜ்
எந்த ஆராய்ச்சிக்கும் நடுவே இந்த ஒரே சொற்றொடர்களினாலான உணர்ச்சிக்கொந்தளிப்பை முன்வைத்து பேச உங்களால் முடியும். இங்கே விவாதம் சாதிக்கொடுமை குறித்தது அல்ல
ஒரு நாகரீக மனிதனைப்பொறுத்தவரை தலித்துக்கள் மீதான காழ்ப்போ விலக்குதலோ ஏற்கத்தக்கவை அல்ல என்ற நிலை இன்று உருவாகியிருக்கிறது. ஒரு சமூகத்தின் தார்மீகமான மையத்தில் உள்ளவர்கள் ஒன்றை ஏற்றுக்கொண்டால் காலப்போக்கில் மொத்த சமூகமும் அங்கே வந்துதான் ஆகவேண்டும். தலித் வெறுப்பு பிற்போக்கானது அசிங்கமானது ஆபத்தானது என்பதில் இன்று எவருக்கும் ஐயமில்லை. இன்னமும் நம் சமூகத்தின் பெரும்பகுதி அங்கே வந்துசேரவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் வந்துகொண்டிருக்கிறது. அதிகபட்சம் ஒரு தலைமுறை ஆகலாம். ஒருவன் படிக்கும்தோறும் சிந்திக்கும் தோறும் இந்த வகையான காழ்ப்பிலிருந்து மீள்வான். மீள்வதைக் காண்கிறோம்
ஆனால் முற்போக்கான, பண்பட்ட, சமநிலையான, படித்த, நிதானமான, மனிதர்கள்கூட இங்கே பிராமண வெறுப்பை கக்கலாம் என்றாகியிருக்கிறது. பிராமண வெறுப்பைக் கக்கினால் உங்களை யாரும் பிற்போக்கானவர் என்றோ சாதிவெறிகொண்டவர் என்றோ சொல்லப்போவதில்லை. அது ஒரு வகையான முற்போக்காகவே இங்கே — தமிழகத்தில் மட்டும் – கருதபப்டுகிறது
இந்த மாதிரி ஒரேவகையான கோஷங்களை சபைதோறும் போடாமல் கொஞ்சம் நிதானமாக யோசித்தால் நான் சொல்ல வருவதென்ன என்பது புரியக்கூடும்