பால் கொழுக்கட்டை

Status
Not open for further replies.
பால் கொழுக்கட்டை

பால் கொழுக்கட்டை


பால் கொழுக்கட்டை சமையல் குறிப்பு :


தேவையான பொருட்கள்:


பச்சரிசி-250 கிராம்;
வெல்லம்-250 கிராம்;
பால் 250 கிராம்;
துருவிய தேங்காய்-1கப்;
ஏலக்காய்-5;
முந்திரிப் பருப்பு-10.



செய்முறை:


பச்சரிசியை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து மிக்ஸியில் வெகு நைஸாக அரைத்து எடுக்கவும்.

மாவு பட்டுப் போல் நைஸாக இருக்கவேண்டும்.


மாவை சின்னச் சின்ன பால்களாக உருட்டவும்.


உருண்டையாகவோ அல்லது ஒவல் வடிவத்திலோ இருக்கலாம்.


உருண்டைகள் கொண்டக்கடலை அளவில் இருக்கவேண்டும்.


ஒரு பாத்திரத்தை அடுப்பிலேற்றி அதில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.


கொதிநீரில், அரிசி மாவு உருண்டைகளை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்.


உருண்டைகள் வெந்ததும், தண்ணீர் அதிகமாக இருந்தால் சிறிது நேரம் வற்ற விடவும்.


பிறகு அந்தக் கலவையில் வெல்லக் கட்டிகளை தட்ட்ப்போட்டு கொதிக்க விடவும்.


வெல்லம் நன்கு கரைந்து சீரானதும் அதில் பால் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டபின், அந்தக் கரைசலில் தேங்காய்த் துருவலையும் முந்திரிப் பருப்பையும் சேர்க்கவும்.


இந்த இனிப்பு பண்டம் தளதளவென்று இருக்கும் .


இறக்கியபின் அதில் ஏலக்காய் சேர்த்தால், மணமான சுவையான பால் கொழுக்கட்டை தயார்.















Source:Anantha Narayanan
 
Status
Not open for further replies.
Back
Top