பார்த்தசாரதி கோவில் புளிக்காய்ச்சல் தய&#

Status
Not open for further replies.
பார்த்தசாரதி கோவில் புளிக்காய்ச்சல் தய&#

பார்த்தசாரதி கோவில் புளிக்காய்ச்சல் தயாரிப்பது எப்படி ?


தேவையான பொருள்கள்:


பச்சரிசி – 5 கப்
நல்லெண்ணை – 50 கிராம்
மிளகு – 200 கிராம்
புளிக்காய்ச்சல் தயாரிக்க
புளி – 100 கிராம்
நல்லெண்ணை – 100 கிராம்
கடலைப் பருப்பு – 100 கிராம்
உளுத்தம் பருப்பு – 100 கிராம்
வெந்தயம் – 10 கிராம்
சீரகம் – 5 கிராம்
கடுகு – 10 கிராம்
பெருங்காயம் – சிறிது
முந்திரிப்பருப்பு – 50 கிராம்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள் – 10 கிராம்



செய்முறை:
புளிக்காய்ச்சலை முதல்நாளே செய்துவைக்க வேண்டும்.

புளியை கெட்டியாகக் கரைத்து வைத்துக் கொள்ளவும்.

நல்லெண்ணையை வாணலியில் வைத்து, அடுப்பை மெதுவாக எரிய விடவேண்டும்.

எண்ணை காய்ந்ததும், அதில் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் என்ற வரிசையில் போட்டு நன்றாகச் சிவக்க வறுக்கவும்.

பின்னர் அதில் முந்திரிப் பருப்பையும் வறுத்துக் கொண்டு, கெட்டியாக கரைத்து வைத்துள்ள புளியைச் சேர்க்கவும்.

2 நிமிடம் கொதித்தவுடன், உப்பு, மஞ்சள்பொடியைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

புளிநீர் பாதியாக வற்றும்வரைக் கொதிக்கவிட்டு, இறக்கி எடுத்து வைக்கவும். [மறுநாள் புளிக்காய்ச்சலைத் திறந்ததுமே கும்'மென்று மணமாக இருக்கவேண்டும். சரியாகக் காய்ச்சவில்லை என்றால் புளியின் பச்சை வாசனை வரும்.

மறுநாள் பச்சரிசியை உதிர் உதிராகச் சமைத்து, ஒரு அகலமான தட்டில் அல்லது பாத்திரத்தில் பரத்தி இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணை சேர்த்து ஆறவிட வேண்டும்.

சாதம் ஆறியதும், கொஞ்சம் கொஞ்சமாக புளிக்காய்ச்சலைக் கலக்க வேண்டும்.

பின்னர் தேவையான அளவு பொடி செய்யப்பட்ட மிளகை, 50 கிராம் நல்லெண்ணையோடு கலந்து, அதையும் சாதக் கலவையில் சேர்த்துக் கலக்க வேண்டும்.





Source:Jayanathan Durai


10447869_785815728137490_121950955565692068_n.jpg
 
Status
Not open for further replies.
Back
Top