• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...

Dear TBS Sir,

There is a fireplace in the huge hall and my son fitted a carbon monoxide detector (without telling us!) just for safety,

though the fireplace is not used. The central heating system keeps the whole house warm. No food was burnt in kitchen.

Anyway, after this incident, he felt that the alarm gets triggered without any reason and deactivated it! :cool:

We had to plug our ears with cotton wool, till the shrill sound vanished. :)
hi

many times FALSE ALARMS used to happen without any reasons...
 
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 22


சின்னச் செல்லத்தின் முதலாம் ஆண்டு நிறைவு;

சின்ன விழாவாக இனிய இல்லத்தில் செய்த பின்,

நண்பர்களை அழைத்து, வாடகை ஹால் ஒன்றில்,
நல்ல பார்ட்டி ஒன்று தருவதுதான் இங்கு வழக்கம்!

ஆஸ்த்தான சாஸ்திரிகள் ஒருவர் உள்ளார் இங்கு,
ஆர்வத்துடன் வந்து ஹோமம் செய்து தருவதற்கு!

தொலைபேசியில் அழைத்ததும் ஒப்புக்கொண்டார்;
தொலை தூரம் செல்ல மகிழ்வுந்து வைத்துள்ளார்!

பெண்ணரசியின் பெற்றோர், குரியர் ஒன்றை நாடி,
பெரிய பெட்டியில் பக்ஷணங்கள் பல அனுப்பினர்!

பருப்புத் தேங்காய் ஜோடி இல்லாமல், எப்போதும்
ஒரு ஹோமமும் நடக்காதே! ஒரு ஜோடி வந்தது!

தங்க நிறக் காகிதச் சுருளை வாங்கி, ஜோடியைத்
தங்க நிறத்தில் அழகாக மாற்றிவிட்டேன் நான்!

அந்த நாள் விடியலுக்கு முன்னரே எழுந்து, நீராடி,
அருமையான விருந்தினை சமைத்துவிட்டோம்!

பெண்ணரசியின் இளவல், தன் மனைவி மகனுடன்
முன் தினம் வந்ததால், நாங்கள் ஒன்பது பேர்தான்.

இந்தியாவில் பெண்ணரசியின் பெற்றோர் களிக்க,
அந்த ஹோமத்தை 'ஸ்கைப்'பில் ஒளிபரப்பினோம்!


தொடரும் ..................
 
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 23

புகை எழுப்பாத ஹோமம்!

இந்திய நாட்டில் ஹோமம் செய்தால்
வந்திடும் தவறாமல் லிஸ்டில் வறட்டி!

பெரிய அளவு ஹோம குண்டத்தினில்,
பெரிய சமித்துடன் வறட்டியும் இட்டால்,

தகிக்கும் விதமாய் அக்னியுடன், புகை
வகிக்கும் தன் பங்கு, விழிகள் எரிந்திட!

பாஸ்டனில் மகனின் இனிய இல்லத்தில்
பாங்காக நடந்தது ஆயுஷ்ய ஹோமம்.

எளிய தோற்றத்தில் ஒரு சாஸ்திரிகள்;
எளிதில் எங்களைக் கவர்ந்துவிட்டார்!

கொப்பரைத் தேங்காயில் புகையின்றி,
ஒப்பிலா அழகில் அக்னி வளர்த்தினார்.

மூன்று மணி நேரம் மந்திரங்கள் ஓதி,
நன்று செய்தீர் என்று
ம் புகழ வைத்தார்.

அமெரிக்கையாய் நடந்தது வைபவம்;
அதிசயித்தோம் நானும் என்னவரும்!

Z-vVEuB3WusIyqZERG3X47Q4aEwzMRgw9JHwcO5CEPpiTq8EI6R9WRuUC9bMMCZ_pQPqRaLDklwOvJxF-qsdf64RzREVq7ZhUErL=s0-d-e1-ft
... :clap2:
 
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 24

'கின்டர் கார்டன்' வகுப்பிலிருந்து பட்டமளிப்பு விழா
இந்த ஊரில் கோலாகலமாக நடந்தேறுவது வழக்கம்.

மருத்துவப் படிப்பை முடித்துப் பட்டம் பெற்றாலோ,
உறவுகளை அழைத்து நல்ல விருந்து அளிப்பார்கள்!

உடன்பிறப்பின் மருமகன் மருத்துவப் படிப்பு முடித்த-
வுடன், வேறு ஊருக்கு மாற்ற விழைய, என்னவரின்

உடன் பிறப்பு அழைப்பு விடுத்தாள், ஒரு விருந்துக்கு;
உடனே மறுக்காமல் செல்லுவதுதானே நம் வழக்கம்!

இரு செல்லங்கள் விளையாட இருப்பதால், எமக்கு
வருவதில்லை அவர்களை விட்டுச் செல்லும் ஆசை!

இருந்தாலும் விருந்துக்கு ஃபிலடெல்ஃபியா சென்று,
சிறு பரிசாவது அளிக்க வேண்டுமென நினைத்தோம்.

என்னவரின் அண்ணன் மகனும், தன் அன்பு மகளின்
சின்ன பாலே நாட்டிய நிகழ்ச்சி பார்க்க அழைத்தான்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காயா? மிகவும் நல்லது;
ஒரே பயணத்தில் இரண்டு அழைப்புகளை ஏற்கலாம்!

ரயில் பயணம் செய்ய டிக்கட்டுகள் ஏற்பாடு ஆயிற்று.
ரயில் பயணம் முன்பே பழகியுள்ளோம்; அது அருமை!

திரும்பும் பயணம் வேறு மருமகனின் காரில்; எனவே
ஒரு வழிப் பயணம் ஏற்பாடானது! சிக்கல் பின் வந்தது!

தொடரும் ........................
 
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 24

'கின்டர் கார்டன்' வகுப்பிலிருந்து பட்டமளிப்பு விழா
இந்த ஊரில் கோலாகலமாக நடந்தேறுவது வழக்கம்.

மருத்துவப் படிப்பை முடித்துப் பட்டம் பெற்றாலோ,
உறவுகளை அழைத்து நல்ல விருந்து அளிப்பார்கள்!

உடன்பிறப்பின் மருமகன் மருத்துவப் படிப்பு முடித்த-
வுடன், வேறு ஊருக்கு மாற்ற விழைய, என்னவரின்

உடன் பிறப்பு அழைப்பு விடுத்தாள், ஒரு விருந்துக்கு;
உடனே மறுக்காமல் செல்லுவதுதானே நம் வழக்கம்!

இரு செல்லங்கள் விளையாட இருப்பதால், எமக்கு
வருவதில்லை அவர்களை விட்டுச் செல்லும் ஆசை!

இருந்தாலும் விருந்துக்கு ஃபிலடெல்ஃபியா சென்று,
சிறு பரிசாவது அளிக்க வேண்டுமென நினைத்தோம்.

என்னவரின் அண்ணன் மகனும், தன் அன்பு மகளின்
சின்ன பாலே நாட்டிய நிகழ்ச்சி பார்க்க அழைத்தான்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காயா? மிகவும் நல்லது;
ஒரே பயணத்தில் இரண்டு அழைப்புகளை ஏற்கலாம்!

ரயில் பயணம் செய்ய டிக்கட்டுகள் ஏற்பாடு ஆயிற்று.
ரயில் பயணம் முன்பே பழகியுள்ளோம்; அது அருமை!

திரும்பும் பயணம் வேறு மருமகனின் காரில்; எனவே
ஒரு வழிப் பயணம் ஏற்பாடானது! சிக்கல் பின் வந்தது!

தொடரும் ........................
hi

recently i attended daughter's MD graduation ceremony in philadelphia too....
 
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 25

பயணம் செய்யும் நாளின் விடியல்; எழுந்து தயாராகி,
பயணப் பெட்டியை உருட்டிச் சென்று, காரில் அமர்ந்து,

அருகிலுள்ள மெட்ரோ ரயில் நிலையமான Alewife - ல்
இறங்கி, மெட்ரோ ரயிலிலேறி, South Station சென்று,

ஃபிலடெல்ஃபியா வழியே செல்லும் Amtrak ரயிலிலேறி,
ஜன்னல் இருக்கை எனக்குக் கிடைத்திட, அமர்ந்தோம்!

நீர் நிலைகளும், அவற்றில் மிதக்கும் படகுகளின் பளீர்
நிறங்களும், பசுமையாகப் படர்ந்திருக்கும் மரங்களும்,

மனதைக் கொள்ளை கொண்டன முந்தைய பயணத்தில்;
ஜன்னல் இருக்கை கிடைத்தாலே இவற்றை ரசிக்கலாம்!

நமது இருக்கையின் எண்களைத் தருவதில்லை; எனவே
நமது விருப்பப்படி இருக்கைகளைத் தேர்வு செய்யலாம்!

சரியான நேரத்திலே ரயில் நகர்ந்தது; வேகம் பிடித்தது;
சரியான நேரத்திலே ஃபிலடெல்ஃபியாவை அடைந்தது.

அழகிய இயற்கைக் காட்சிகளை ரசித்து, எம் பெண்ணரசி
அழகாக Pack செய்து கொடுத்த சப்பாத்திகளால் பசியாற,

மருமகன் சிரித்த முகத்துடன் எங்களை வரவேற்க, ஓர்
அருமையான ரயில் பயணத்தை இனிதாய் முடித்தோம்.

நான்கு நாட்கள் மருமகனுடன் இருப்போம்; அச் சமயம்,
நாங்கள் காண முடியும் இரு பாலே நடன நிகழ்ச்சிகளை!


தொடரும் .......................
 
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 26

இரு முறை தங்கிய இல்லம் என்பதால், எங்களுடைய
இரு சிறு பெட்டிகளை 'எங்கள்' அறையில் வைத்தோம்!

கல்லூரியில் கற்பிக்கும் பணி; என்றாலும், இல்லத்தரசி
கற்றுத் தேர்ந்தவள் சுவையான சமையற் கலையிலும்!

சூடான உணவு தயார் செய்து வைத்திருந்தாள். அதைச்
சூடாக உண்டால் அதன் ருசியும் மிக உயர்வு அல்லவா?

மறு நாள் அவளது கல்லூரியில் ஒரு மீட்டிங் - அதனால்,
சுறு சுறுப்புடன் சமையலை முடித்தாள், நான் எழும் முன்!

'அதிதி தேவோ பவ'; எனவே நான் சமைக்கக் கூடாதாம்!
அதிகம் அலட்டாது அமைதியாக இருப்பாள் எப்போதும்!

குழந்தைகளுக்கு விடுமுறை; அவர்களுடன் அரட்டை;
பழகிய பாடல்களைத் தம் பியானோவில் இசைத்தனர்.

விரும்பி நான் கேட்கும் சிலரின் வாத்திய இசையினை
சிறு கணினியில் கேட்க வைத்தேன்; மிகவும் ரசித்தனர்.

சென்ற விஜயங்களில் பல இடங்களைப் பார்த்ததால்,
இந்த முறை இனிய இல்லத்தில் இருக்க முடிவானது!

அடுத்த நாள்தான் முதல் பாலே நடன நிகழ்ச்சியாகும்;
எடுத்திருந்தனர் எங்கள் இருவருக்கும் டிக்கட்டுகளை.

வாழ்வில் முதல் முறை நேரில் காணும் பாலே நடனம்;
ஆழ்ந்து உறங்க முடியாமல், அதனை எதிர்பார்த்தேன்!

தொடரும் ....................
 
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 27

'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா', என்பதால்,
ஐந்து வயதில் அவள் சிறந்த பாலே நடனப் பள்ளியில்!

அவள் தன் நடன ஸ்டில்களைக் என்னிடம் காட்டினாள்;
அவள் பாலே நடன ஆர்வத்தை அவை பறைசாற்றின!

வீட்டிலேயே முக, சிகை அலங்காரங்களை முடித்தாள்;
வீற்றோம் இரு கார்களில்; அரங்கத்தை அடைந்தோம்.

சரியான நேரத்தில் நிகழ்ச்சி ஆரம்பம்; அரங்கம் அன்று
ஒரு இருக்கை விடாது ரசிகர்களால் நிரம்பி வழிந்தது!

சின்னஞ் சிறு பிஞ்சுகள் முதல், அழகிய பதின்பருவத்து
மங்கையர் வரை, வெவ்வேறு பிரிவில் பல நடனங்கள்!

கண்கவர் வண்ண வண்ண உடைகளில், நுனிக் காலில்
தம் உடலைச் சமநிலைப் படுத்தி, அனைவரும் அசத்த,

மெய் மறந்து, நடனங்களிலே அனைவரும் ஒன்றிவிட,
கை கொட்டி ஒவ்வொரு சிறந்த இடத்தையும் ரசித்து,

இடைவேளை வரையில் நேரம் போனதே தெரியாமல்,
இருந்தோம் ரசிகர்கள் அனைவரும், அந்த மாலையில்!

எங்கள் செல்லப் பெண்ணின் இரண்டாம் நடனம் உண்டு;
என்னால் காண முடியாது! தங்கை ஏற்பாட்டில் உள்ளது

மறு நாள் ஃபிலடெல்ஃபியாவில் 'குடும்ப சந்திப்பு விழா'!
மருமகன் எங்களை இனிய இல்லம் அழைத்து வந்தான்.

தொடரும் ......................
dance.gif
 
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 28

என்னவரின் மருமகனும், நாங்கள் இருவரும் அமர்ந்து,
எங்கள் இரவு உணவை முடித்து, அரட்டையில் முழ்க,

இல்லத்தரசி இரு செல்லங்களுடன் வந்து சேர்ந்தாள்,
இரண்டாம் நடனத்தை மகள் அழகாய் முடித்த பிறகு.

இனிமேல்தான் அவர்கள் பசியாற வேண்டும்! எனவே,
இனிய இரவு கூறி நாங்கள் நித்திரையை நாடினோம்!

மறு நாள் விடியலில் தயாராகி, சிற்றுண்டி உண்ட பின்,
மூவரும் புறாப்பட்டோம் 'குடும்ப சந்திப்பு விழா'வுக்கு!

விடுமுறை நாள் என்பதால் வாகனங்களின் கூட்டம்
விரிந்து, பரந்து எல்லா லேன்-களையும் அடைத்தது!

இறுதி யாத்திரை ஒன்றில் பங்கு பெறச் செல்லுவோர்,
கருப்பு ஸூட் அணிந்து, ஊர்வலம் போலக் கார்களில்!

கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டதெனத் தோன்றியதால்
நெஞ்சம் படபடத்தாலும், நாங்கள்தான் First Guests!

ஒவ்வொரு குடும்பமாக மற்ற சொந்த பந்தங்கள் வந்து,
ஒவ்வொரு மேஜையைச் சுற்றி, அமர ஆரம்பிக்க, இரு

இளைஞர் டிப் டாப் உடையில் வந்து, விருந்தினருக்கு
இன்முகத்துடன் பரிமாற ஆரம்பித்தனர், ஜூஸ் / ஸூப்!

'என் ஊர் சோளவந்தே(ன்)' என அதில் ஒருவன் சொல்ல,
என்னவரும், தங்கையும் மகிழ்ந்தனர், தம் ஊர் என்பதால்!

{ சோழவந்தான் என்பதன் மரூஉ சோளவந்தே(ன்) ​}

தொடரும் .........................
 
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 29

'சோளவந்தே' எங்களை ஸ்பெஷலாக கவனித்தான்;
சோர்வில்லாது அனைவருக்கும் பானங்கள் தந்தான்!

பரஸ்பர குசல விசாரிப்புகள், வண்டின் ரீங்காரமாகப்
பரவி, மென்மையாக அந்த அறையினை நிறைத்தது.

மதிய உணவு பஃபே வகையில் ஏற்பாடாயிருந்ததால்,
போதிய தட்டுகள் ஒரு புறம் அடுக்கி வைக்கப்பட்டன.

ஒரே ஒரு பாத்திரம் மட்டும் கொஞ்சம் தள்ளி இருக்க,
ஒரு சிவப்பு வட்டத்தைக் கண்டேன், அதன் அருகில்!

ஒரு நான்-வெஜ் பதார்த்தம், டாக்டரின் நண்பர்களுக்கு;
ஒரு சிலர், நம்மவரிலும், 'அதை' ருசித்து மகிழ்ந்தனர்!

பல விதக் கலந்த சாதங்கள், சாலட்களை ருசித்தோம்.
பலர் எழுபதுகளைத் தாண்டியதால், பேச்சும் நீண்டது!

என்னவரையும், என்னையும் இல்லத்தில் சேர்த்த பின்,
என்னவரின் மருமகன் தன் மகளின் நிகழ்ச்சி பார்த்திட

அந்த ஹாலை அடையணும்; மகளுடன் இல்லத்தரசி
அவளின் காரில் அந்த ஹாலுக்கு வருவதாக ஏற்பாடு.

நாங்கள் புறப்படுவது மிகவும் தாமதமாகிவிட்டதால்,
எங்கள் திட்டத்திலே சின்ன மாற்றமும் ஆகிவிட்டது.

'கரும்பு தின்னக் கூலியா?', என்றுதான் கேட்டேன், நான்
விரும்பும் பாலே நடனத்தை நான் காணலாமென்றதும்!

தொடரும் ................ :dance:
 
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 30

மருமகனின் இனிய இல்லம் போகும் வழியில்தான்
அருமையான நடன நிகழ்ச்சி நடைபெறும் அரங்கம்!

என்னை நடனம் கண்டு களிக்க இறக்கிவிட்ட பின்பு,
தன் சித்தப்பாவுடன் இனிய இல்லத்தை அடைவான்.

எனது இருக்கை இரண்டாவது வரிசையில் இருந்திட,
என் மனம் ஆனந்தித்தது; நன்றாக பாலே காணலாம்.

இடைவேளைக்கு முன்னும், அதன் பின்னும், அவள்
இரு அழகு நடனங்களைத் தன் குழுவுடன் ஆடினாள்.

வண்ணமய ஆடையில், நுனிக்கால் நடனமணிகள்,
எண்ணங்களிலே நிறைந்தனர், அனாயாச ஆடலால்!

வயதில் மூத்தோர் அரட்டையால் ராவினால், நான்
வருத்தப்படுவேன்; ஆனால் அன்று படவேயில்லை!

அவர்களின் ராவலால்தானே, எனக்குக் கிடைத்தது,
அந்த நடனங்களைக் காண மீண்டுமொரு சந்தர்ப்பம்.

அதிர்ச்சி தரும் விஷயம் ஒன்று அறிந்தேன்! சிறுமி
முதிர்ச்சி அடைந்து, பதின்பருவம் தொடும் பொழுது,

கால்களில் பல வகையான வலிகள் ஏற்பட்டு, தமது
நாட்பட்ட பயிற்சியை, உடனே நிறுத்திவிடுவாராம்!

எந்தக் கலையிலும் தொடர வேண்டுமாயின், நமக்கு
அந்த இறைவனின் அருள் இல்லையேல் இயலாதே.

தொடரும் ............................
 
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 31

தன் தோழிகள் சிலர், நடனத்தை நிறுத்திவிட்டதாக,
தன் கண்கள் கலங்க அவள் உரைத்து, வருந்தினாள்!

பரஸ்பரம் நடனமணிகளின் பெற்றோர், பெண்களைப்
பாராட்டிப் பூரித்த பின், புகைப்படங்களும் க்ளிக்கினர்!

மன நிறைவுடன் இனிய இல்லம் திரும்பினோம்; என்
மனம் கொஞ்சம் சஞ்சலித்தது; அதற்கு காரணம் இது!

கனெக்டிக்கட்டில் வசிக்கும், என்னவரின் அக்கா மகன்
கட்டாயம் விருந்தில் கலந்துகொண்டு, பின் எங்களை

பாஸ்டனுக்குத் தனது காரில் அழைத்துச் செல்வதாக
வாக்களித்தும், அதனை நிறைவேற்ற இயலவில்லை!

இந்த ஐ. டி பசங்கள் இப்படித்தான்! எப்போதும், 'எனக்கு
வந்த ப்ராஜெக்ட்டின் DEADLINE வந்தது', எனச் சொல்லி,

பெட்டியில் (அதுதான் மடிக் கணினி) ஐக்கியம் ஆவார்;
சட்டை செய்யவும் மாட்டர், மற்ற விஷயங்கள் பற்றி!

ரயில் பயணமே மீண்டும் செய்வோம் என்று எண்ணி,
ரயில் டிக்கட் விலைகளைப் பார்த்தால், மிக அதிர்ச்சி!

கடைசி நிமிட ஏற்பாடு எனின், மூன்று மடங்கு விலை!
அதை விடுத்து, பஸ் பிரயாணம் செய்ய விழைந்தோம்!

'சித்தி! ரெஸ்ட் ரூம் உள்ள பஸ்; கவலையே இல்லை!'
சிரித்துக் கொண்டு கூறினான், என்னவரின் மருமகன்!

தொடரும் ......................
icon4.png
 
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 32

சுட்டிக் குழந்தைகளைக் காணும் ஆவலுடன், எங்கள்
குட்டிப் பெட்டிகளுடன், பெரிய பேருந்தில் ஏறினோம்!

உயர இருக்கைகளும், குளு குளு ஏர் கண்டிஷனும், ஓர்
உயர்வான பயணத்தைச் சுட்டிக் காட்டியதில் மகிழ்ச்சி.

பேருந்து புறப்பட்டு வேகமெடுத்தது; கடந்து செல்லும்
சீருந்துகள், சின்னச் சின்னதாய், வண்ண வண்ணமாய்!

நியூயார்க் பாலம் தாண்டுவது, ஹிட்ச்காக் படம் போல,
நிமிடங்களில் ஏதோ ஒரு பய உணர்வைத் தூண்டியது!

பேருந்து சில நிமிடங்கள் நின்றது; 'வழி இட்லி'களைப்
பேக் செய்து தந்திருந்தாள், மருமகள்; பசியாறினோம்!

இன்னும் சுமார் நான்கு மணி நேரப் பயணம் இருந்தது.
இருக்கிறதே ரெஸ்ட் ரூம், தேவைப்பட்டால்! அதனால்,

கீழே இறங்காமல், பேருந்தினுள்ளே கொஞ்சம் நடந்து,
மீண்டும் இருக்கையைச் சாய்த்துவிட்டுச் சாய்ந்தேன்!

கொஞ்ச நேரம் ஆனது; மனக் குரங்கு, 'ரெஸ்ட் ரூமைச்
சென்று பார்', எனச் சின்ன ஆணையிட்டது; எழுந்தேன்.

இருக்கைகளைப் பற்றி நடந்து, பயணிகளின் முடியை
இழுக்காது, பேருந்தின் பின் இருக்கைக்குச் சென்றேன்!

மடக்கும் வகைக் கதவு; குண்டர்கள் நுழைவது கடினம்;
மடக்கி, நுழைந்து, கதவை மூடியதும், லைட் எரிந்தது!

தொடரும் ...................... :shocked:
 
hi

really nice bus services/experiences in USA...i used to travel from WASHINGTON DC TO BOSTON ....its called MEGA BUS....free wi fi

with nice AC BUS.....never feel boring ....really enjoyable and worthwhile journey in eastern corridor....via BALTIMORE/PHILADELPHIA/

NEW YORK AND BOSTON...even we have service upto TORONTO IN CANADA....some ppl travel to TORNOTO VIA BUFFALO BY BUS
 
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 33

குடலைப் புரட்டிடும் நாற்றமும், காட்சியும், என்னை,
உடனே வெளியேறக் கட்டளையிட்டன! பச்சையும்,

நீலமும் கலந்த நிறத்தில், ஏதோ திரவம், ஒரு பெரிய
அளவுப் பீங்கான் சட்டி ஒன்றில்; அதன் மேலே ஸீட்!

ஏற்கனவே உப
யோகித்த மனித, மனிதிக் கழிவுகள்;
ஏறெடுத்துப் பார்த்தாலே, உண்ட உணவு வாந்திதான்!

மறு நொடியில் வெளியேறி, கதவை மூடி, தாளிட்டு,
இருக்கையில் அமர்ந்து சாய்ந்தேன், விழிகளை மூடி!

சுட்டிப் பெண்களின் சேட்டைகளை நினைத்து, இந்தக்
கெட்ட காட்சிகளை உடனே மறந்திட முயற்சித்தேன்!

சின்னத் தூக்கம் தொடர்ந்தது; கண் விழித்த பொழுது,
இன்னும் சில நொடிகளில் பாஸ்டன், என அறிந்தேன்!

வாச நாப்கினால் (உபயம் - B A பயணம்) துடைத்து, என்
வதனத்தை ஃப்ரெஷ் ஆக்க, காம்பாக்ட் பௌடர் இட்டு,

ஸௌத் ஸ்டேஷனில் இறங்கி, மெட்ரோ ரயிலில் ஏறி,
ஸெல் ஃபோனில் மகனை அழைத்து, விவரம் சொல்லி,

நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை, சின்ன 'ஆ - அம்'
நான் வேண்டுவதால், ஒரு சிறு Doughnut - டை வாங்கி,

அவன் இல்லத்தின் அருகிலுள்ள Alewife நிறுத்தத்தில்,
அவன் வருவதற்குள் உண்டு, பசியாறி, தெம்பானேன்!

தொடரும் ..........................

 
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 34

கைப்பேசி இருந்தால், வாழ்வு மிக எளிதாகும்! தனது
கைப்பேசியில், தான் வந்துவிட்டதாக மகன் உரைக்க,

எங்கள் எதிர்ப் புறம், அவன் காரிலிருந்து இறங்குவதை
நாங்கள் பார்க்க, நிமிடங்களிலே இனிய இல்லத்தில்!

குழந்தைகள் இருவரும், எங்கள் வரவால் மகிழ்ந்தனர்;
குதூகலத்துடன், விளையாட எங்களை அ
ழைத்தனர்.

பலூன் ஒன்றைப் பந்தாக பாவித்து, வாலிபால் போல
'பலூன் கேம்' மூன்று விளையாடி, அயர்ந்து போனோம்!

எங்கள் புதிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டோம்,
எங்கள் இரவு உணவை உண்ணும் வேளையில். பின்பு,

அன்புடன் தங்கை, தன் Beach House - க்கு அழைத்ததை
அன்பு மகனிடம் கூற, ஏற்பாடு செய்கிறேன் என்றான்.

இருவர் பெயரையும், பாஸ்போர்ட்டில் உள்ளது போல,
பொறுமையாய்ப் பூர்த்தி செய்திட, டிக்கட்கள் கிட்டின!

ஸௌத் கேரலினாவில், மெர்டில் பீச்சில் இருக்கிறது,
சௌகரியமாக மூன்று குடும்பங்கள் தங்கிட, தனி வீடு.

அந்தப் பயணத்திற்கு முன், பால விஹார் குழந்தைகள்
சேர்ந்து அளிக்கும், ஒரு பல் சுவை நிகழ்ச்சி இருக்கிறது.

ராமாயணக் காட்சி ஒன்றில், எம் செல்லக் குட்டிதான்,
ராணி சுமித்திரைபோல வேடம் தரித்து வந்திடுவாள்!

தொடரும் ..............................
 
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 35

ஆச்சரியங்கள் பல காத்திருந்தன, அந்த நிகழ்ச்சிக்கு
ஆர்வத்துடன் நாங்கள் சென்ற அந்த மாலை வேளை!

மூன்று வயதுக் குழந்தைகள் முதல், அரிதாரத்துடன்,
தான் மேடையேறும் நேரத்தை எதிர்பார்த்து இருக்க,

பட்டுச் சேலைகளும், சிறந்த சுடிதார்களும் அணிந்து,
பட்டாம்பூச்சி போல, மங்கையர் உலவியபடி இருக்க,

கூடியிருந்த ஜனங்களை வரவேற்றான், ஒரு சிறுவன்,
கூழாங்கல்லை வாயிலிட்டுப் பேசும் ஆங்கிலத்தில்!

'அமெழிக்க' ஆங்கிலத்திலே விளாசித் தள்ளினான்,
அமெரிக்காவிலே ஜனித்து, வளர்ந்தவன் என்பதால்!

செல்லக் குட்டி, பள பள உடையில், சுமித்திரையாக;
என்னவருடன் நான் காத்திருந்தேன், காட்சி பார்க்க!

ராணிகளிடம், தசரதன், மகன் இல்லாததால் வருந்த,
ராணிகள் அவனைச் சமாதானம் செய்ய, அதன் பின்பு

யாகம் நடக்க, பாயசம் கிடைக்க, ராணிகளும் அருந்த,
யாவரும் மகிழ,
ராமன் சகோதரர்களுடன் அவதாரம்!

ஒரே மைக்கை எல்லோரும் பகிர்ந்து கொள்ளணும்;
ஒரே குறையாக இது ஒன்றே தோன்றியது, எனக்கு!

தொடர்ந்த நிகழ்ச்சிகளிலே, பல் வேறு திறமைகளை,
தொடர்ந்து காண்பித்து அசத்தினர், சிறுவர் சிறுமியர்!

தொடரும் ............................. :drama:

 

Latest ads

Back
Top