பயணக் க(வி)தைகள்...

[FONT=arial, sans-serif]
ஒய்யாரமாக வில்லாளி ஒருவன் சிங்கத்தின் மேலே
[/FONT]

[FONT=arial, sans-serif]ஒயிலாகச் சாய்ந்து பரிமளிக்கிறான்! அவன் யாரோ?

IMG_3500.JPG
[/FONT]
 

சிற்பக்கலை காண அற்புதப் பயணம் - 5


நேர் கோட்டில் வாலை நீட்டியவாறு, அணில் ஒன்று

நேராக ஓடி வந்து, துள்ளி விளையாடி மகிழ்வித்தது!

உணவாய் எதையோ கண்டு, ஆவலுடன் கொறித்தது!
உடனே எங்கள் காமரக்களிலும் சிறைப்பட்டது அது!

அழகிய நந்திகள் கோவிலைச் சுற்றி வரிசையிலே;
அழகிய நீர்த்தொட்டி அமைப்பு, கோவில் வாசலிலே!

நீர்த்தொட்டியின் உள்ளே அமைந்த சிலையும் கூடச்
சீர்கெட்டுக் கிடக்கிறது, ஒட்டுக்கள் பற்பல கொண்டு!

பச்சை நிறத்தில் குட்டி நீர்த் தேக்கத்தில் காக்கைகள்
இச்சையோடு தாகம் தீர்க்க வந்திட, வேலையாளும்

ஒரு பாட்டிலில், அதே நீரைக் குடிக்க எடுத்துப் போக,
சிறு பயம் பரவியது, அவரது உடல் நிலை குறித்து!

இரும்பு வலை வேலி போடப்பட்டு, பொங்கும் கடல்
அருகில் செல்லத் தடை செய்துள்ளார்! ஓரிடத்தில்

அமைத்த பாதையில், கடலருகில் செல்ல இயலும்;
அமைதியாக அங்கும் நிற்கின்றன பாறைகள் சில!

மீன் பிடிக்கும் தொழிலும் இருப்பதால், படகுகளில்
மீனவர் மோட்டர்களைப் பொருத்தியுள்ளார். அங்கு

பெரிய சங்குகள் விற்கும் ஒரு முதியவர், சங்கிலே
அரிய நாதம் எழுப்பி எல்லோரையும் கவர்ந்தார்!

வெளியேறும் வழி அருகிலே ஒப்பனை அறைகள்;
எளிதாகத் தெரியாததால், அவை மிகவும் சுத்தம்!

அடுத்த நிறுத்தம் ஐந்து ரதங்கள் என்று தீர்மானம்;
எடுத்த முடிவுடன் சீருந்தில் சென்றோம் பயணம்!

தொடரும் .........................
 
சிற்பக்கலை காண அற்புதப் பயணம் - 6

இதோ அடைந்துவிட்டோம் ஐந்து ரதங்களை! இங்கு
அதே நுழைவுச் சீட்டைக் காட்டி உள்ளே சென்றோம்.

ஐந்து பாண்டவர்களுக்கும், இந்த ஐந்து ரதங்களுக்கும்
எந்த சம்பந்தமும் இல்லை என ஓர் அறிவிப்பு அங்கே!

சென்ற முறை கைடுகள் 'கதை'த்து வந்தனர்; ஆனால்
இந்த முறை அதிகம் ரீல்-காரர்களைக் காணவில்லை!

'பத்து கார்டுகள் ஒரு பாக்கெட்டிலே இருக்கும்; விலை
ஐந்து ரூபாய்', என ஒருவன் விற்க, நான் ஒரு பாக்கெட்

கேட்க, 'ஐம்பது ரூபாய் ஆச்சு' என்று அவன் சொல்ல,
கேட்டு பயந்து நான் ஓட்டம் பிடித்தேன்! தப்பித்தேன்!

சுத்தமான பராமரிப்பில் சுற்றுச் சூழல் தூய்மைதான்!
நித்தம் செய்யும் இந்தப் நற்பணிக்குப் பாராட்டுதான்!

நான்கு ரதங்கள் ஒரு வரிசையில்; ஐந்தாவது தனியே;
நன்கு செதுக்கப்பட்டு உள்ளன பெரிய யானை, சிங்கம்!

சிங்கத்தின் அடிப்பகுதி அரிக்கப்பட்டு கல்லில் ஓட்டை!
அங்குள்ள சிலைகளுக்கு அணிகலன்களே ஆடைகள்!

முதல் ரதத்திற்கு முன்னே செதுக்கப்படாத் பாறைகள்;
முதல் ரத மேற்கூரை மிகவும் எளிமைத் தோற்றமே!

மற்றவை பல நுணுக்க வேலைப்பாடுகளைக் கொண்டு
சற்றே உற்றுப் பார்க்க வைக்கின்றன. இரண்டாவதும்

சிறியது; மூன்றாவது மிகப் பெரியது. அதைச் சுற்றிலும்
பெரிய வாரந்தா போலவே அமைப்பு, பல தூண்களுடன்.

மூன்றாம் நான்காம் மேற்கூரைகளிலே செதுக்கப்பட்ட
முகங்கள் வரிசையில்; ஒரு சுவரில் அர்தநாரீஸ்வரர்!

தொடரும் .....................
 

நான்கு ரதங்கள் ஒரு வரிசையில்; ஐந்தாவது தனியே;

நன்கு செதுக்கப்பட்டு உள்ளன பெரிய யானை, சிங்கம்!

IMG_3540.JPG
 
சிங்கத்தின் அடிப்பகுதி அரிக்கப்பட்டு கல்லில் ஓட்டை!

IMG_3549.JPG
 
முதல் ரதத்திற்கு முன்னே செதுக்கப்படாத் பாறைகள்;
முதல் ரத மேற்கூரை மிகவும் எளிமைத் தோற்றமே!

IMG_3541.JPG
 
சிற்பக்கலை காண அற்புதப் பயணம் - 7

ஐந்து ரதங்களின் மேற்கூரைகளும், அதிசயங்கள்
தந்து நம்மை ஆச்சரியிக்க வைக்கின்றன; ஆனால்

அடிப்பாகங்கள் கற்பாறைகளாகவே காண்கின்றன;
முடிக்கப்படாத தோற்றத்தை நமக்குத் தருகின்றன.

சிலைகள் பல பின்னமாகிய பரிதாபமும், அவை
தலைகள் இன்றிக் காட்சி தருவதும், வேதனையே!


எந்த எண்ணத்தில் மன்னன் இதை ஆரம்பித்து, பின்

எந்த எண்ணத்தால் பூர்த்தி
செய்யாது விட்டானோ!

ஒரு கல்லை அருகில் பார்த்தால், விளங்கவில்லை;
சிறு தொலைவில் செல்ல, தெரிகின்றது விநாயகர்!

கொஞ்ச தூரத்தில் நீண்ட கள்ளிச் செடிகள் வரிசை;
நெஞ்சில் வந்தது அரிஸோனா கள்ளிகள் நினைவு!

வெய்யிலின் தாக்கம் அதிகம் இல்லாததால், எங்கள்
மெய்யில் வருத்தம் தெரியாது சுற்றி உலவினோம்!

உணவகம் சென்று மதிய உணவு உண்ண நினைத்து,
உணவகம் ஒன்றில் நுழைந்தபோது, மிகவும் அழகிய

மீன்களை, ஒரு தொட்டியில் கண்டோம்! வெள்ளை
மீன்கள் இரண்டு, கண்கவர் வடிவிலே சுற்றி வந்தன!

அவை மிக விலை உயர்ந்தவை என்றும், வீட்டிலே
அவை இருப்பது, உயர் மட்டக் குடிகள் எனக் காட்டும்

என்றும், ஒரு புதிய செய்தியைத் தங்கை மகன் கூறி,
என்னைப் படம் எடுக்கத் தூண்டினான்! எடுத்தேன்!

சிற்றுண்டிகள் கேட்ட பின்னரே
தயாரிப்பாம்; எனவே
சற்றும் தயங்காமல் கேட்டோம், South Indian thaali!


தொடரும் ........................
 
Last edited:
சிலைகள் பல பின்னமாகிய பரிதாபமும், அவை
தலைகள் இன்றிக் காட்சி தருவதும், வேதனையே!


IMG_3572.JPG
 
[FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]வெள்ளை மீன்கள் இரண்டு, கண்கவர் வடிவிலே சுற்றி வந்தன!

IMG_3539.JPG
[/FONT]
 

அடிப்பாகங்கள் கற்பாறைகளாகவே காண்கின்றன;

முடிக்கப்படாத தோற்றத்தை நமக்குத் தருகின்றன.


IMG_3565.JPG
 
கல்லில் சிலை வடித்தான்
கலை நூறு கண்டான்
மல்லன் பெற்ற செல்வம்
மலைபோல் குவிந்தது காண்
 

சிற்பக்கலை காண அற்புதப் பயணம் - 8


உண்டி முதற்றே உலகு அல்லவா? நிறைவாக

உண்டு, மீண்டும் பயணித்து, பேருந்து நிறுத்தம்

வந்தால், அங்கும் அழகிய சிற்பச் செதுக்கல்கள்!
அந்தக் காலத்தில் யானைகள் பிரபலம் போலும்!

அழகிய யானைகள் ஓர் ஒற்றைப் பெரிய கல்லில்!
அழகிய மண்டபம் தூண்களுடன் மிகவும் அருகில்!

தெய்வ உருவங்களும், இடையில் காண்கிறோம்;
தெம்புடன், அன்புடன், பேன் பார்க்கும் ஒரு குரங்கு!

மேல் நோக்கிச் செல்லச் சாய்வான ஒரு கற்பாதை;
மேலே சென்றால், அழகிய மண்டபம் ஏறப் படிகள்!

ஹரியும், சிவனும் ஒண்ணு என்ற தத்துவம், அங்கு
அரிதான கடற்கரைக் கோவிலிலே கண்டோம்; ஒரு

புறம் லிங்கம், மற்றும் ஈசன் அம்மை இருக்க, மறு
புறம், பள்ளிகொண்ட பெருமாள் காட்சி தருகிறார்!

இந்த மண்டபச் சுவரில், ஒருபுறம் அனந்த சயனர்;
அந்தப் புறச் சுவரில், தாய் மகிஷாஸுரமர்த்
தினி!

நடுவிலே கர்ப்பக் கிருஹம் போன்ற ஓர் அமைப்பு;
அதனுள்ளே ஈசன் அம்மையுடன் கொலுவிருப்பு!

இளைய தலைமுறை வேகமாகச் சென்று, மேலே
வளைய வருகின்றார், மாமல்லை நகம் கண்டிட!

இன்னும் சிறிது தூரத்திலே, கலங்கரை விளக்கம்!
மின்னும் விளக்கோடு கம்பீரமாய் உயர்ந்திருக்கும்!

வளைந்தேறும் படிகள் உண்டு அதனுள்; மேலேறி,
கலை நயம் மிகுந்த நகரைக் கண்டு களிக்கலாம்!

தொடரும் ........................
 
Last edited:
Back
Top