பயணக் க(வி)தைகள்...


வெள்ளியின் பயணம்!


பூமியின் அருகில் நிலவு இருப்பதால்,

பூமியில் உள்ளோர் காணும் நிகழ்வு

அழகிய சூரிய, சந்திர கிரஹணங்கள்;
அழகிய விண்வெளியில் விந்தைகள்!

சூரியன் - பூமி நடுவில், இன்று காலை,
சீரிய முறையில், ஒரே நேர் கோட்டில்

வெள்ளி கிரஹம் வர, அதன் நிழலும்
துல்லிப் புள்ளி போலச் சூரியன் மேல்

சென்று கடக்கும்! கடற்கரை அருகில்
சென்று பார்க்காத ஏக்கம் வருகிறது!

திருஷ்டிப் பொட்டு , சிவந்த சூரியனில்
இருப்பது போலத் தெரிந்திருக்குமோ?

கடற்கரை ஓரம் இனிய இல்லம் கட்டி,
கடலில்
ஆழிப் பேரலைகள் எழுந்தால்

கதி கலங்கி நடுங்குவோர், அதிகாலை
மதி மயங்கி, இக்காட்சி காணுவாரோ?

:clap2:


 
Last edited:

திருஷ்டிப் பொட்டு , சிவந்த சூரியனில்

இருப்பது போலத் தெரிந்திருக்குமோ?

IMG_3301.JPG


Yes!! This is a photo taken from the direct relay of the transit of Venus across the Sun.
 
Last edited:
Dear Dr. C.N,

In the poem posted yesterday two words needed correction. When I changed your likes vanished!! Sorry for that.

"திருஷ்டிப் பொட்டு , சிவந்த சூரியனில்
இருப்பது போலத் தெரிந்திருக்குமோ?

கடற்கரை ஓரம் இனிய இல்லம் கட்டி,
கடலில் ஆழிப் பேரலைகள் எழுந்தால்,"


Raji Ram :)
 

சிற்பக்கலை காண அற்புதப் பயணம் - 1


கல்லிலே கலை வண்ணம் காண விழைந்து,

நல்லதொரு பயணம் செல்ல எண்ணம் வர,

சிங்காரச் சென்னையை அடுத்து அமைந்த
பாங்கான மாமல்லபுரம் தேர்வு ஆயிற்று!

புகைப்படக் கலை வல்லுனன் தங்கை மகன்,
மிகையான மகிழ்வுடன் காலை வேளையில்

புறப்பட, சிற்றுண்டி முடித்து, குட்டிக் காரில்
புறப்பட்டோம் மாமல்லபுரம் நோக்கி! அந்த

வழியில் உள்ள 'புலிக் குகை'யை, இதுவரை
விழிகள் காணாததால், அங்கு இறங்கினோம்.

தொல்பொருள் ஆராய்ச்சி மையம், இப்போது
நல்வகையில் பாதுகாப்பு செய்துள்ளார். எம்

காமராக்கள் தமது வேலையைத் தொடங்க,
காமராக்களில் சிறைப்பட்டன பல படங்கள்.

ஒற்றைப் பெரிய பாறையில், மிக அழகாகச்
சற்றே வியக்க வைத்திடும் பெரிய வடிவம்.

நடுவில் உள்ள மண்டபத்தில் வெறுமையே;
கடவுள் உருவும் அதனுள்ளே காணவில்லை!

சில ஜோடிகள் அசட்டுச் சிரிப்புடன் உலவிட,
சில நொடிகள் புரிய வைத்தன, காதலர் என!

கல்லூரிக்கும், பள்ளிக்கும் மட்டம் போட்டு
காதல் புரிய வருகின்றார், இவ்விடம் தேடி!

பல மென்பானங்கள், சிப்ஸ் வகையறாக்கள்

சில கடைகளில் நிரப்பி விற்பனை ஆகிறது!

தொடரும்.................
 

ஒற்றைப் பெரிய பாறையில், மிக அழகாகச்

சற்றே வியக்க வைத்திடும் பெரிய வடிவம்.

நடுவில் உள்ள மண்டபத்தில் வெறுமையே;
கடவுள் உருவும் அதனுள்ளே காணவில்லை!



IMG_3446.JPG
 

சிற்பக்கலை காண அற்புதப் பயணம் - 2


மணல் பரப்பில் இத்தனை பெரிய பாறைகளா?

கணப் பொழுதில் மனதில் எழுந்தது ஆச்சரியம்!

ஏதோ உருவங்களைச் செதுக்க முயன்று, அதை
ஏனோ முடிக்காது விட்டதுபோலவே தெரிகிறது!

இரு செங்குத்துப் பாறைகள் அருகருகே நின்றன;
ஒருவரும் அவற்றினிடைச் செல்லவே முடியாது!

சாய்வான நீண்ட பாறை, தவம் செய்வது போல
ஓய்வின்றி நிற்கிறது; நம் மனம் அதிசயிக்கிறது!

பனை மரங்கள் வரிசையாகச் சூழ, நிழலும் தவழ,
நினைவில் நிலைக்கும் இடமாக இது இருக்கிறது.

ஒரு சுற்று முடித்து, படங்கள் எடுத்து, உடனேயே
ஒரு நிமிடத் தாமதமும் இல்லாது பயணித்தோம்!

ஆதவனின் பரிபூரண அருளும் அன்று கிடைத்தது,
ஆதவன் மேகப் போர்வைகளை நாடிவிட்டதாலே!

அடுத்த நிறுத்தம் கடற்கரைக் கோவிலில்; அங்கு
எடுத்துச் செல்லவேண்டும் நுழைவுச் சீட்டு ஒன்று.

நம்மவர்கள் பத்து ரூபாய் கொடுத்தால் போதும்;
நம் நாட்டிலே உலவும் வெளிநாட்டினருக்கு 250!!

ஐந்து அமெரிக்க டாலர்தானே என நினைத்தாரோ?
விந்தையாக இருந்தது இந்த வினோதப் பாகுபாடு!

ஒரு முறை எடுத்த நுழைவுச் சீட்டு போதுமானது;
வேறு இடங்களிலும் அதுவே செல்லுபடியாகும்!

நீண்ட நடை பாதையில் நடக்க ஆரம்பித்தோம்;
நீண்ட பசுமை அந்த மணல் பரப்பில் கண்டோம்!

:car: . . தொடரும் ..........................
 

மணல் பரப்பில் இத்தனை பெரிய பாறைகளா?

கணப் பொழுதில் மனதில் எழுந்தது ஆச்சரியம்!

IMG_3464.JPG
 
[FONT=arial, sans-serif]
சாய்வான நீண்ட பாறை, தவம் செய்வது போல
[/FONT]

[FONT=arial, sans-serif]ஓய்வின்றி நிற்கிறது; நம் மனம் அதிசயிக்கிறது!


IMG_3459.JPG
[/FONT]
 
[FONT=arial, sans-serif][FONT=arial, sans-serif]நீண்ட நடை பாதையில் நடக்க ஆரம்பித்தோம்;[/FONT][/FONT]
[FONT=arial, sans-serif]நீண்ட பசுமை அந்த மணல் பரப்பில் கண்டோம்!

IMG_3466.JPG
[/FONT]
 

இரு செங்குத்துப் பாறைகள் அருகருகே நின்றன;

ஒருவரும் அவற்றினிடைச் செல்லவே முடியாது!

IMG_3444.JPG
 

சிற்பக்கலை காண அற்புதப் பயணம் - 3

ணற்பரப்பில் எப்படி இந்தப் பசுமை சாத்தியம்?
மனத்தில் பலரும் இவ்வாறு வியப்பது சத்தியம்!

நடைபாதை ஓரங்களிலே கத்தரித்த பசுமைகள்;
இடையிலுள்ள செடிகளிலே சிவப்பு நிற மலர்கள்.

தொல்பொருள் ஆராய்ச்சி தத்தெடுத்த பின், பல
நல்வகை மேம்பாடுகள் செய்துள்ளது, உயர்வே!

கோவிலின் சில பகுதிகளைக் கடல் கொண்டது!
கோவிலில் எந்த வழிபாடும் அறவே கிடையாது!

சிதைந்த சிற்பங்கள், சிதைக்கின்றன மனத்தை!
புதைந்து கடலுள் சென்றவை என்னென்னவோ!

கல் மீது படிந்துள்ள கறைகளை நீக்கிடும் பணி
நில்லாது ஓடுகிற பணியாளரால் நடக்கின்றது!

காகிதக் கூழ் செய்து, அதை கல் மீது பூசிவிட்டு,
காற்றில் காய்ந்து வறண்டதும், சிற்றுளிகளால்

செவ்வனே நீக்க, கறைகள் மாயமாய்ப் போகும்!
இவ்விதம் அப்பணி நடக்கிறது, சில நாட்களாய்!

எத்தனை டன் காகிதம் வேண்டுமோ, அறியேன்,
அத்தனை பெரிய கோவிலைச் சுத்தம் செய்திட!

அங்கங்கு குப்பைத் தொட்டிகள் உள்ளதால், இனி
அங்கும் என்றுமே தூய்மைப் பகுதியே இருக்கும்!

நம் மக்களும் துப்புரவாக இருந்திட அறிவார்கள்;
நமது சட்டங்கள் கடுமையாக இருந்தால்! நிஜமே!

அப்பகுதிகளை மாசுபடுத்தினாலோ, சிற்பங்கள்
அப்பகுதிகளில் சேதம் அடைந்தாலோ, அபராதம்!

:lock1:

:) . . தொடரும் .........................

 

கல் மீது படிந்துள்ள கறைகளை நீக்கிடும் பணி

நில்லாது ஓடுகிற பணியாளரால் நடக்கின்றது!

IMG_3477.JPG
 

எத்தனை டன் காகிதம் வேண்டுமோ, அறியேன்,

அத்தனை பெரிய கோவிலைச் சுத்தம் செய்திட!

IMG_3476.JPG
 

சிற்பக்கலை காண அற்புதப் பயணம் - 4


சுத்தமான நடைபாதைகளில் நடந்து, கோவிலைச்

சுத்தமாக்கும் பணியைக் காணச் சென்றோம். பின்

கோவிலைச் சுற்றி வட்டமடித்து, புகைப்படங்கள்
கோர்வையாக எடுத்துச் சேகரித்தோம். சிற்பங்கள்

சிதிலமடைந்து, அழகை இழந்து, வருந்த வைத்தன!
சிலைகள் பலவும் அடையாளமே தெரியவில்லை!

சிவ பார்வதி உருவம்போலச் செதுக்கிய அறையில்,
சிவ லிங்கம் 'கிரானைட்'டில் அமைக்கப்பட்டுள்ளது!

பல்லவர் காலத்திலே இந்த வித லிங்கம் இருப்பது
எள்ளளவும் சாத்தியமில்லை எனத் தோன்றுகிறது!

பழையது என்று மக்கள் நம்பவேண்டுமே என்பதால்,
பழையதுபோல் தெரிய உடைக்கப்பட்டு இருக்கிறது!

எதிர்ப்புறம், பள்ளி கொண்ட பெருமாளின் உருவம்;
அதிலும் நிறைய விரிசல்கள் ஒட்டப்பட்டு உள்ளன!

ஒருபுறம் செதுக்கியுள்ள எல்லா உருவங்களும், எந்த
ஒரு வடிவமும் காண முடியாதபடிச் சிதைந்துள்ளன!

புகைப்படத்தில் மட்டுமே அந்தச் சிலைகளின் அழகு
மிகையாகத் தெரிகின்றது! 'Photogenic' சிலைகள்தான்!

குறுகிய பிரகாரம் கோவிலைச் சுற்றிலும் இருக்கிறது;
அருகருகே உருவங்கள் செதுக்கப்பட்டு இருக்கின்றன.

படுத்த நிலையில் ஒரு மாட்டின் உருவம், புகைப்படம்

எடுக்க நம்மைத் தூண்டுகிற விதத்தில் நளினமானது!

ஒய்யாரமாக வில்லாளி ஒருவன் சிங்கத்தின் மேலே
ஒயிலாகச் சாய்ந்து பரிமளிக்கிறான்! அவன் யாரோ?

:car: . . தொடரும் ........................
 

சிவ பார்வதி உருவம்போலச் செதுக்கிய அறையில்,

சிவ லிங்கம் 'கிரானைட்'டில் அமைக்கப்பட்டுள்ளது!


IMG_3487.JPG
 
[FONT=arial, sans-serif]
எதிர்ப்புறம், பள்ளி கொண்ட பெருமாளின் உருவம்;
[/FONT]

[FONT=arial, sans-serif]அதிலும் நிறைய விரிசல்கள் ஒட்டப்பட்டு உள்ளன!

IMG_3483.JPG
[/FONT]
 
[FONT=arial, sans-serif]
ஒருபுறம் செதுக்கியுள்ள எல்லா உருவங்களும், எந்த
[/FONT]

[FONT=arial, sans-serif]ஒரு வடிவமும் காண முடியாதபடிச் சிதைந்துள்ளன!

IMG_3495.JPG
[/FONT]
 
[FONT=arial, sans-serif]
படுத்த நிலையில் ஒரு மாட்டின் உருவம், புகைப்படம்
[/FONT]

[FONT=arial, sans-serif]எடுக்க நம்மைத் தூண்டுகிற விதத்தில் நளினமானது!

IMG_3498.JPG
[/FONT]
 
Back
Top