பயணக் க(வி)தைகள்...

Hi RR madam,
is it boston flowers? or singara chennai flowers....anyway nice flowers...thank u so much...
Your first guess is correct T B S Sir!
This photo was taken when we visited 'Boston
உழவர் சந்தை'! :photo:

 

தாங்கும் சக்திக்கு ஒரு சோதனை ... 1


இப்படியும் ஒரு சோதனையா என்று

எப்படியும் ஒரு எண்ணம் உதிக்குமே!

அடுத்து அடுத்து வரும் இரு இரவுகள்
எடுத்துக்கொள்ளும் பஸ் பயணத்தை

இந்தச் சோதனையாக நான் நினைக்க,
வந்தது எமக்கு திடீர்ப் பயணம் ஒன்று!

நல்ல வைபவங்களிலே பங்கெடுக்கச்
செல்ல இயலாவிடில் பரவாயில்லை!

துயரச் சம்பவம் நிகழ்ந்தால், அப்போது
இயன்ற வகையில் ஆறுதல் சொல்லப்

பயணம் தவறாது செய்ய வேண்டுமே;
பயணம் வந்தது அது போன்று ஒன்று!

முன்னூறு மைல்கள் பயணம் செல்ல,
அன்று இரவே புறப்பட வேண்டியதால்,

கடைசி நேரப் பதிவாக, மிஞ்சிப் போன
கடைசி இரு இருக்கைகள் கிடைத்தன!

சிங்காரச் சென்னையில் புறப்பட்ட பின்
பாங்காகக் சில மைல் தூரம் பயணிக்க,

குளிரூட்டப்பட்ட பேருந்தில், அவர்கள்
குளிர் தாக்காதிருக்க சால்வையும் தர,

குடிநீர் பாட்டிலும், அத்துடன், மறுநாள்
விடியலில் முகம் துடைக்க 'நாப்கின்',

சின்னக் கைத் துண்டு இவையும் தந்திட,
இந்த முன் யோசனையைப் பாராட்டி,

சாய்வு இருக்கையைச் சாய்வாக இட்டு,
ஓய்வு வேண்டி உறங்க முயன்றோம்!

மிதவைப் பேருந்து ஆனாலும், காற்றில்
மிதக்காதே! தரையில்தானே போகும்?

:bump2: . . . தொடரும்................
 
:welcome: back to the Forum dear S4!


"இனிமேலாகினும் மனம் இரங்கதோ?
கனிவு வராதோ ராஜிராம் மேடம் !"

என்ற பாடலை போஸ்ட் செய்யும் முன்பே
மனம் கனிந்ததற்கு மிக மிக நன்றி.:pray2:

கைகளையே கால்களாக்கி வேண்டியபோதும்
கனியாத அந்த மனத்தைக் கனியச் செய்த

ஃபோரம் ஃபிரதருக்கும் மற்றும் காண்பதற்கு
அரியதாகிய நண்பருக்கும் என் நன்றிகள்! :pray2:
 
நண்பர்களில் வேண்டுதல் எப்போதோ வந்துவிட்டது!
மனம்
இரங்க
வைத்தது இலக்கியப் பகுதியின் வறட்சி!! :faint:
 

தாங்கும் சக்திக்கு ஒரு சோதனை ... 2


ஓடும் பெரிய ஐஸ் பெட்டிக்குக் கொம்புகள்

ஒட்டி வைத்தது போல அமைந்த பேருந்து!

சிங்காரச் சென்னை தாண்டும் வரையில்,
பாங்காகவே இருந்தன அகன்ற சாலைகள்.

சில மைல் தொலைவு கடந்த பின், வந்தன
பல குண்டு குழிகளுடன், நிலவுச் சாலைகள்!

துள்ளுந்தாக மாறியது எங்களது பேருந்து!
துள்ளிப் போட்டதிலே காணாமல் போனது

கொஞ்சம் முயன்று பெற்ற சின்ன உறக்கம்!
நெஞ்சம் படபடக்க வைத்திடும் புதிய HORN!

தோடி ராகத்தின் 'ப த நி
ரி க' ஸ்வரங்கள்
பாடி, அதிரும் ஒலியாலே பயமுறுத்தியது!

முன்னால் இருந்த பயணி, தனது கைகளைப்
பின்னால் நீட்டி, இருக்கையில் வைத்தவாறு,

சத்தமான குறட்டைகளுடன் கச்சேரி செய்ய,
சுத்தமாகத் தூக்கமும் ஓடியே போய்விட்டது!

கால்களை விதவிதமான வகைகளில் மாற்றி,
கால்கள் மரத்துப் போகாது, உடற் பயிற்சியில்

நேரத்தை எப்படியோ கடத்த, மீண்டும் சிறிது
நேரத்தில் நல்ல சாலை வந்துவிட, இனிமேல்

அலுங்காது போகும் எம் பேருந்து என எண்ண,
அலுக்காது டியூன் போட்டது ஒரு செல்போன்!

:ballchain:

தொடரும் ...........................

 

ஓடும் பெரிய ஐஸ் பெட்டிக்குக் கொம்புகள்

ஒட்டி வைத்தது போல அமைந்த பேருந்து!

Photo courtesy: Google images

Volvo-Bus-intro.jpg
 
காரணம் எதுவானாலும் :decision:

காரியம் நல்லதே ஆனது! :thumb:


நண்பர்களில் வேண்டுதல் எப்போதோ வந்துவிட்டது!
மனம்
இரங்க
வைத்தது இலக்கியப் பகுதியின் வறட்சி!! :faint:
 

தாங்கும் சக்திக்கு ஒரு சோதனை ... 3


அத்தியாவசியத் தேவைகளுக்கு என்று உள்ளது,

அனாவசியமாகியது காலத்தின் கோலத்தாலே!

நேரம் காலம் தெரியாமல் என்ன பேச்சு, தொலை
தூரம் செல்லும் பயணிகள் இருக்கும் பேருந்தில்?

வீட்டில் செய்யும் அர்த்த ராத்திரிக் கொஞ்சல்கள்,
வீட்டின் வெளியிலும் தொடர்வது கொடுமையே!

அணுவளவும் அமைதி கெடுப்பதை அறியாமல்,
தொணதொணத்தான் அந்த இளைஞன், இரவில்!

அருகில் உள்ள எவரிடமும் யாருமே பேசாமல்,
பெருகி வருகிறது தொலைதூர 'அலைப் பேச்சு'!

'பேசு இந்தியா பேசு' - விளம்பரத்தால், வெட்டிப்
பேச்சே வளர்ந்துவிட்டது இந்திய தேசத்திலும்!

பொறுமை வளர்க்கும் நல்ல பயிற்சியாக இந்தக்
கொடுமையை எண்ணிக்கொள்ள வேண்டுமோ?

பொதுவாக, மற்றவரைத் துன்புறுத்தாத எண்ணம்
மெதுவாக மறைந்து வருவதைக் காண்கின்றேன்!

போர்த்திக்கொள்ளக் கொடுக்கும் சால்வைகளை,
நேர்த்தியாக எடுத்துச் செல்வாராம் சிலர்! எனவே

பேருந்துப் பணியாளன் எல்லோருடமும் கேட்டுப்
பெற்றுச் சென்றான், அவன் தந்த சால்வைகளை!

:bowl: . தொடரும் ...........................


 

தாங்கும் சக்திக்கு ஒரு சோதனை ... 4


நான் பிறந்த மாவட்டத்தின் தலை நகரம்;

தென்னிந்தியாவின் மான்செஸ்டர்தான்!

பேருந்து நிலைய வாயிலில் இறங்கி, வேறு
பேருந்து நிலையம் செல்ல வேண்டும்! அது

எல்லா ஊர்களுக்கும் செல்லும் பேருந்துகள்
எல்லாம் புறப்படும், மத்திய பஸ் நிலையம்!

உள்ளூர்ப் பேருந்தில் ஏறினால், இருக்கைகள்
உள்ளன எழுபத்தி ஐந்து சதம் பெண்களுக்கே!

ஜன்னல் இருக்கைகளில் ஒவ்வொரு பெண்!
என்னவர் நின்றபடியே பயணிக்க, நடத்துனர்

பெண்கள் உடன் வந்தவர் அமரலாம் அந்தப்
பெண்கள் இருக்கையிலும் என்பதைக் கூற,

இந்த விஷயம் எனக்கும் புதிதாகவே தெரிய,
அந்த நடத்துனருக்கு நன்றி பாராட்டினோம்!

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வழக்கமே;
இவ்வாறு இருப்பதும் மிகவும் வினோதமே!

முப்பது மைல் வேறு வண்டியில் பயணித்து,
மூன்று மணி நேரம் ஆறுதல் அளித்த பிறகு,

மீண்டும் சென்றடைந்தோம் கோவை நகரம்;
கொஞ்சம் ஓய்வெடுத்தோம் விடுதி ஒன்றில்.

இரவில் மீண்டும் மிதவைப் பேருந்து; அன்று
இரவில் கிடைத்தன முதல் இரு இருக்கைகள்.

கால்களை நீட்டி வைக்க ஏதுவானலும், எமது
காதுகளைப் பதம் பார்த்தன தோடி ஸ்வரங்கள்!

ஓட்டுனர் தூங்காது இருந்தால்தானே, பேருந்து
ஓட்டுவார் எங்கும் முட்டி மோதிக்கொள்ளாது!

கிடைத்த கோழித் தூக்கத்தில் மனம் மகிழ்ந்து,
அடைந்தோம் எங்கள் சிங்காரச் சென்னையை!

தாங்கும் சக்தி உடலில் உள்ளதா என சோதிக்க
நீங்களும் செல்லலாம் இரு இரவு பஸ் பயணம்!

:cheer2:

 

தாங்கும் சக்திக்கு ஒரு சோதனை ... 4


நான் பிறந்த மாவட்டத்தின் தலை நகரம்;

தென்னிந்தியாவின் மான்செஸ்டர்தான்!

பேருந்து நிலைய வாயிலில் இறங்கி, வேறு
பேருந்து நிலையம் செல்ல வேண்டும்! அது

எல்லா ஊர்களுக்கும் செல்லும் பேருந்துகள்
எல்லாம் புறப்படும், மத்திய பஸ் நிலையம்!

உள்ளூர்ப் பேருந்தில் ஏறினால், இருக்கைகள்
உள்ளன எழுபத்தி ஐந்து சதம் பெண்களுக்கே!

ஜன்னல் இருக்கைகளில் ஒவ்வொரு பெண்!
என்னவர் நின்றபடியே பயணிக்க, நடத்துனர்

பெண்கள் உடன் வந்தவர் அமரலாம் அந்தப்
பெண்கள் இருக்கையிலும் என்பதைக் கூற,

இந்த விஷயம் எனக்கும் புதிதாகவே தெரிய,
அந்த நடத்துனருக்கு நன்றி பாராட்டினோம்!

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வழக்கமே;
இவ்வாறு இருப்பதும் மிகவும் வினோதமே!

முப்பது மைல் வேறு வண்டியில் பயணித்து,
மூன்று மணி நேரம் ஆறுதல் அளித்த பிறகு,

மீண்டும் சென்றடைந்தோம் கோவை நகரம்;
கொஞ்சம் ஓய்வெடுத்தோம் விடுதி ஒன்றில்.

இரவில் மீண்டும் மிதவைப் பேருந்து; அன்று
இரவில் கிடைத்தன முதல் இரு இருக்கைகள்.

கால்களை நீட்டி வைக்க ஏதுவானலும், எமது
காதுகளைப் பதம் பார்த்தன தோடி ஸ்வரங்கள்!

ஓட்டுனர் தூங்காது இருந்தால்தானே, பேருந்து
ஓட்டுவார் எங்கும் முட்டி மோதிக்கொள்ளாது!

கிடைத்த கோழித் தூக்கத்தில் மனம் மகிழ்ந்து,
அடைந்தோம் எங்கள் சிங்காரச் சென்னையை!

தாங்கும் சக்தி உடலில் உள்ளதா என சோதிக்க
நீங்களும் செல்லலாம் இரு இரவு பஸ் பயணம்!

:cheer2:

hi RR

இது கோவை மாநகர காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம்....இந்த ஊரு என்னோட சொந்த ஊரு....
 
Last edited:

எங்கே எங்கள் இடங்கள்? - 1


முதுகலைப் படிப்பை முடித்த வேளையில்,
புதிய ஆசை: 'சேரவேண்டும் வேலையில்!'

சிங்காரச் சென்னைக்கு அப்போது இத்தனை
சிங்காரப் பெயர் கிடையாது! அது 'மதராஸ்'!

சென்னையில் ஒரு நேர்முகத் தேர்வு; நான்
சென்னை வர ரயிலில் பயணிக்கவேண்டும்.

கோவையில் வந்து ரயிலில் ஏற வேண்டும்;
கோவை மாமா பயணச் சீட்டு வாங்கினார்,

எனக்கும், துணையாக வரும் தந்தைக்கும்.
தனக்கும் பயணம் செல்ல வேண்டும் என்று

என் மாமா மகனும் சில நாட்களில் சொல்ல,
அவன் பயணச் சீட்டும் மாமா வாங்கினார்!

அந்தக் காலத்தில் குட்டி, கெட்டிச் சீட்டுதான்;
இந்தக் காலம் போல விவரங்கள் இருக்காது!

குட்டிச் சீட்டின் பின், கையெழுத்தில், ரயில்
பெட்டி எண்ணும், ரயில் எண்ணும், தேதியும்

எழுதிக் கொடுப்பார்கள்; அவ்வளவே! மாமா
எழுதினார் பயணச் சீட்டு வாங்கிவிட்டதாக!

ரயில் பிடிக்க, கடைசி நிமிடத்தில் மட்டுமே
ரயில் நிலையம் அழைத்துப் போவார் அவர்!

அன்றும் அதே கதைதான்! ரயில் நிலையம்
சென்று பார்த்தால், பயணிகள் லிஸ்ட்டிலே

என் பெயரும், தந்தை பெயரும் கிடையாது;
என் மாமா மகனின் பெயர் மட்டும் உள்ளது!

முன் கோபம் மிக்க மாமா, டிக்கட் பரிசோதகர்
முன் சென்று உச்ச ஸ்தாயியில் சத்தம் போட,

சீட்டை நோக்கிய அவரோ, எங்கள் இருவரின்
சீட்டில் காணும் 'பெர்த்'கள் சென்னை நோக்கிச்

சென்றுவிட்டன எனக் கூறி, திரும்பிப் பாராது
சென்றுவிட்டார், இன்னொரு திசை நோக்கி!

ரயில் எண்ணைப் பார்த்தால் அது கொல்லம்
ரயில் எண்ணாக இருக்கிறது! அங்கே நிற்பது

நீலகிரி விரைவு வண்டி! மாமா மகன் டிக்கட்
நீலகிரி ரயிலில்தான் பதிவாகி இருக்கின்றது!

:bowl: . தொடரும் .......................

 

எங்கே எங்கள் இடங்கள்? - 2


தன்னிடம் பாதுக்காப்பாக வைத்துக்கொள்ள,

என்னிடம் இருந்த பையை எடுத்துக்கொண்டு,

தனது இடத்திற்கு மாமா மகன் சென்றுவிட,
தந்தை ப்திவில்லாப் பெட்டியில் சென்று ஏற,

பெண்கள் பதிவில்லாப் பெட்டியில், தெரியாத
பெண்கள் மத்தியில் அமர்த்தப்பட்டேன் நான்!

என் மனமோ, என் பையில் உள்ள என்னுடைய
எண்ணிலாச் சான்றிதழ்களை எண்ணியிருக்க,

நெருக்கியடித்து அமர்ந்து, விடியல் எப்போது
வரும் என்று எதிர்பார்க்கவும் ஆரம்பித்தேன்!

நள்ளிரவில், திடீரென்று பழகிய குரல் ஒன்று,
நள்ளிரவு நிசப்தத்தை மீறி என்னை அழைக்க,

உடனே அறிந்துகொண்டேன், தந்தையே என்று!
உடனே ஓடி வந்து, கண்ணிமைக்கும் நேரத்தில்,

குதித்தேன் ரயிலின் வெளியில், நான்கடி கீழே!
குதித்த பின் அறிந்தேன், எங்கோ சிக்னலுக்காக

ரயில் நின்றது என்றும், என்னை அழைத்து வர
ரயில் நண்பர் யாரோ தந்தையிடம் கூறியதால்,

அவர் என்னைக் கூட்டிச் செல்ல வந்தார் என்றும்!
அவர், தான் இறங்கிய பெட்டி நினைவு இல்லாது,

என்னுடன் அந்தப் பெட்டியைத் தேடி வர, ரயிலோ
தன்னுடைய கூக்குரல் எழுப்பி, போக விழைந்திட,

அதே ரயில் நண்பர் கதவருகில் நின்று, எங்களை
அதே பெட்டியில் ஏற, தன் கரம் கொடுத்து உதவ,

அந்த நல்லவர், நான் படுக்க, Luggage வைத்திடும்
அந்த இடத்தைக் காலி செய்தும் கொடுக்க, நன்றி

பல முறை அவருக்கு சொல்லி, நான் சுருண்டேன்!
'சில நல்லவர்களை இறைவன் உதவ அனுப்புவான்'

என்று எப்போதும் சொல்வதுபோல் தந்தை சொல்ல,
அன்று அப் பயணம் தொடர்ந்தது, சென்னை செல்ல!

சிங்காரச் சென்னை சேர்ந்து, என் பையை கண்டதும்,
சிந்தை தடுமாறிய எனக்கு, மன நிம்மதியே வந்தது!

ஒன்று அறிந்துகொண்டோம்; 'டிக்கட்' பரிசோதகரை
என்றும், மறந்தும், உரத்த குரலில் வையக் கூடாது!

:argue: . . . :nono:


 

வழி நடத்துவாள் அன்னை!


உலக வாழ்வு ஒரு பயணம்; அதை

உயர்ந்த வகையில் நாம் செய்ய

நல்ல வழிகாட்டி தேவை! எனவே
நல்ல மனம் கொண்ட இறைவன்,

தந்தான் நம் தாய்க்கு உரிமையை;
செய்தாள் அவள் தன் கடமையை!

நெஞ்சில் உரம், நேர்மைத் திறம்,
அஞ்சாது நாம் பெற உழைப்பாள்!

நம் வெற்றியில் மனம் மகிழ்ந்து,
நம் தோல்வியில் நாம் தளராது

மீண்டும் முன் செல்ல வழிகாட்டி,
வேண்டும் அரவணைப்பைத் தந்து,

சான்றோன் எனப் பிறர் உரைக்க,
ஈன்ற பொழுதிற் பெரிது உவந்து,

நம் உயர்வாலே பெருமை பெறும்
நம் அன்னையைப் போற்றுவோம்!

தூய தாய்மை வாழ்க! :hail:


 
Back
Top