படிச்சுப் பாருங்க கண்டிப்பா சிரிப்பிங்&#

  • Thread starter Thread starter V.Balasubramani
  • Start date Start date
Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
படிச்சுப் பாருங்க கண்டிப்பா சிரிப்பிங்&#

I would like to share an email recd. from a friend of mine.

படிச்சுப் பாருங்க கண்டிப்பா சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க.

கோர்ட்டில் அந்த விவாகரத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது.

பிரதிவாதியான
மனைவி தன் கணவர் தன் மேல் அபாண்டமாகப் பழி போட்டு இந்த விவாகரத்தைக் கேட்டிருப்பதாக வாதாடியதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று.

அரசாங்க
வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார்.

அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?”

அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க

ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு?”

எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?”

அடாடாஉங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது

தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்

கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா?”

அவரு கருப்புதாங்க. நானும் கறுப்புதானஅதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க

வீட்டுக்காரரோட என்ன சண்டை?”

வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை, மாசம் ஒண்ணாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கப் போயிடறாரு

இதற்கு
மேல் அவரால் தாங்க முடியவில்லை.

எதுக்காக விவாகரத்து கேட்கிறார்என்று அலறி விட்டு இருமினார்.

..அதுவாஎன்னோட பேசறப்ப எல்லாம் ரத்தக் கொதிப்பு வந்துடுதாம்.

நீங்க
நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க

உங்களுக்கென்ன
ரத்தக் கொதிப்பா வந்திரிச்சு?
இது அபாண்டம்தானே?”


Source: Sri Rangachari Ji
 
I would like to share an email recd. from a friend of mine.

[h=2]சும்மா "நச்"சுனு சில SMS ஜோக்குகள்.​.[/h]
டீச்சர்: உன்னோட பேர் என்னமா
?

பெண்: ஐஸ்வர்யா

டீச்சர்: நல்ல பேரு.. வீட்டுல எப்படி கூப்பிடுவாங்க?

பெண்: கிட்டக்க இருந்தா மெல்லமா கூப்பிடுவாங்க.. தூரமா
இருந்தா சவுண்டா கூப்பிடுவாங்க..

டீச்சர்: ???
( எதுக்கு தாயி இந்த கொலை வெறி? )

===================================================

இரண்டு குடிகாரர்கள் ரயில்வே தண்டவாளத்தின் மீது நடந்து
போய்க் கொண்டிருக்கிறார்கள்.

"மச்சி என்னடா இவ்ளோ தூரம் நடந்தும் படியேறியும்
இன்னும் நாம மேல போகவே இல்லையே.."

"அட அது கூட பரவாயில்ல மாமு.. சனியன் புடிச்சவனுங்க..
கைப்பிடிய எம்புட்டு கீழ வச்சிருக்காங்க பாரு.."

=====================================================

சர்தாரும் அவருடைய மனைவியும் டைவர்ஸ் கேட்டு
கோர்ட்டில் அப்ளை செய்திருந்தார்கள்.

ஜட்ஜ் எவ்ளவோ சொல்லியும் ரெண்டு பேரும் பிரியணும்னு
தீர்மானமா சொல்லிட்டாங்க.

கடைசியா ஜட்ஜ் கேட்டார்.

"உங்களுக்குத்தான் மூணு பிள்ளைங்க இருக்காங்களே..
அவங்கள எப்படி பிரிச்சுப்பீங்க.."

ரொம்ப யோசிச்சுட்டு சர்தார் சொன்னார்.

"சரி விடுங்க.. நான் அடுத்த வருஷம் டைவர்ஸ்
பண்ணிக்கிறேன்.."


Source: Sri Rangachari Ji
 
ஹா ஹா ... சிரிப்பு தாங்க முடியலை .... !!

ஒரு முறை ஒருவன் மனைவியை முதன் முதலாகப் பிரிந்து வெளியூர் சென்றான்..

போய்ச்சேர்ந்ததும் மனைவிக்கு மின்னஞ்சல் அனுப்பினான்..
ஆனால் அதிக ஆ.கோ. வில் ஒரு எழுத்து மாற்றி (சேருமிட முகவரியை) அடித்து விட்டான்..!

வேறோறிடத்தில் தன் கணவனைப் பறிகொடுத்த மனைவி,

இறுதிச் சடங்குகள் அப்போதுதான் முடிவடைந்த நிலையில் தனக்கு வந்திருக்கும் ஆறுதல் செய்திகளைப் படிப்பதற்காக தன் உள் பெட்டியைத் திறந்தாள்..

சிறிது நேரத்தில்..

" சக்கரம்" என்று கத்தியவாறு மயங்கி விழுந்து விட்டாள்..
உறவினர்கள் வந்து பார்த்த போது கணிணி திரையில் இவ்வாறு செய்தி ஒளிர்ந்து கொண்டிருந்த்தது..!

TO ----------என் அன்பான மனைவி

SUBJECT------ வந்து சேர்ந்துவிட்டேன்..
TIME---------- மார்ச்சுவரி 32/ 2000 ... 9.00 pm.

அன்பே..


அதற்குள் செய்தி அனுப்பியது கண்டு அதிர்ச்சி அடைந்திருப்பாய் என்று எனக்குத் தெரியும்..

என்னுடைய பயணம் அற்புதமாக இருந்தது.
இங்கே கணிணிகளும் இணையத் தொடர்பும் உள்ளது.
இங்கே எனக்கு வசதியான அறை ஒதுக்கி இருக்கிறார்கள்.
அப்புறம் உன்னை இங்கு அழைத்து வருவதற்கு கூட ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன.
நாளையோ அல்லது மறுநாளோ நீயும் இங்கே வந்து விடலாம்.
உன் பயணமும் அட்டகாசமாய் இருக்கும்.
உன் வரவை எதிர் நோக்கி..
உன்னை ஒரு கணமும் விட்டகலா அன்புக் கணவன்



Source: Sri Rangachari Ji
 
Status
Not open for further replies.
Back
Top