• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பக்த விஜயம் ----- ஸ்ரீ நாராயண பட்டத்ரி

drsundaram

Active member
சேலப்பரம்பு நம்பூத்ரி என்று ஒரு 96 வயது குடுகுடு கிழவர் இருந்தார். ஆனாலும் அவருக்கு சுகபோகங்களில் ஆசை குறையவில்லை.

ஒருநாள் அவர் இன்னொரு மங்கையுடன் உல்லாசமாகக் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது நாராயண நம்பூத்ரி வந்தார். இப்படி பாவம் செய்து கொண்டே போகிறீரே எப்போது கடைத்தேறுவீர் என்று நாராயண நம்பூத்ரி கேட்டார்.

உங்களுடைய கிருஷ்ணன் அனேகம் பெண்களை மணந்து கொள்ளவில்லையா? கோபிகாஸ்தீரிகளோடு ராஸக்ரீடை என்று கூத்தடிக்கவில்லையா? அவன் செய்தால் தப்பில்லை. அதையே நான் என் மனைவி இறந்த பின் ஒரு மங்கையை சேர்த்து கொண்டு செய்தால் தப்பா? ராஜ குடும்பத்தில் பிறந்த கண்ணன் இடையர் குலப் பெண்களோடு சம்பந்தம் வைத்துக் கொள்ளவில்லையா? என்றார்.

சரி கண்ணன் செய்ததை மட்டுமே செய்கிறேன் என்கிறீர்களே...

♦கண்ணன் விஸ்வருபம் எடுத்தானே உங்களால் எடுக்க முடியுமா?
♦போர்களத்தில் கண்ணன் கீதை அருளினானே இந்தக் குளக்கரையில் கீதையைப் போல ஒரு ஸ்லோகம் சொல்ல முடியுமா?
♦கண்ணன் கோவர்த்தன கிரியை குடையாகப் பிடித்து கோகுலம் முழுவதும் காப்பாற்றினானே, உம்மால் இந்தப் பாறங்கல்லை பத்து நிமிஷம் தூக்கிக் கொண்டு நிற்க முடியுமா?
♦ விஷப்பாம்பின் மேல் அந்தச் சின்னஞ்சிறு பாலகன் தன் பிஞ்சுக் கால்களால் நடனமாடினான். நீர் ஏன் பாம்பைக் கண்டால் பத்து மைல் தூரம் ஓடுகின்றீர் .
♦கொடிய அசுரர்களை ஒற்றையாய் பந்தாடியவன் என் கண்ணன். போக்கிரிகள் வந்தால் நீர் ஏன் போர்த்திப் படுத்துக் கொள்கிறீர்.
♦திரௌபதிக்கு புடவையாக அள்ளித் தந்தானே என் கண்ணன், நூறு புடவைகள் வாங்கியாவது தானம் பண்ண மனம் வருமா உமக்கு என்ற நாராயண பட்டத்ரியான் ஆவேசமான பேச்சு சேலப்பரம்பின் மனதை அலைக்கழித்தது.

பட்டத்ரி காலில் விழுந்து நான் கடைத்தேற வழி சொல்லுங்கள் என்றார் சேலப்பரம்பு. குருவாயூரப்பன் காலில் விழுங்கள். எஞ்சியுள்ள காலத்தையாவது அவனுக்கு தொண்டு செய்து பாபத்தை போக்கிக் கொள்ளுங்கள் என்றார் பட்டத்ரி.

குருவாயூரப்பா என்னை நீதான் ரக்ஷிக்க வேண்டும் என்றலறியபடி சன்னதி முன் சேலப்பரம்பு நம்பூத்ரி சாஷ்டாங்கமாக விழுந்தார்.

துருவனுக்கு நான்கு மாதங்களில் தரிசனம் கொடுத்தாய்! பரிக்ஷித்துக்கு ஏழு நாளிலும் கட்வாங்கனுக்கு ஒரு முகூர்த்தத்திலும் மோட்சம் அளித்தாய்! பிங்கலைக்கு உடனே மோக்ஷம் அளித்தாய்! 96 வருடங்களை வீணாக்கி விட்ட இந்த மூடனுக்கு எப்போது முக்தி அளிப்பாய் என்று பலவாறு புலம்பலானார்.

துருவன் பரிக்ஷித்து கடவாங்கன் பிங்கலை இவர்களைப் பற்றியெல்லாம் எப்போது தெரிந்து கொண்டாய் என்ற குரல் சன்னதியிலிருந்து வந்தது.

பாகவத கதாகாலட்சேபத்தை கேட்பதிலிருந்து என்று சேலப் பரம்பு பதிலளிக்க, அப்படியானால் என் அருகில் வா என்று குரல் ஒலிக்க சேலப்பரம்பு சன்னதிக்குள் போனார்.பகவான் தன்னோடு சேலப்பரம்பை ஐக்கியப் படுத்திக் கொண்டார்.

இதெல்லாம் சேலபரம்புக்கும் பரந்தாமனுக்கும் மட்டும் நடந்த பேச்சுக்கள் செயல்கள் - அங்கிருந்த வேறு யாரும் அறியாமல்.

சூழ்ந்திருந்த பக்தர்களுக்கு சேலப்பரம்பு புலம்பியபடி நமஸ்கரித்ததும் வெகு நேரமாகியும் அசைவில்லாததுமான செய்கை மட்டுமே தெரிந்தது. அவரை மற்றவர்கள் தட்டி எழுப்பும் போது அங்கே வந்த நாராயண பட்டத்ரி அவருக்கு முக்தி கிடைத்து விட்டதை அறிந்தார்.

வெறும் பாகவத கதாகாலட்சேபத்தை கேட்பதாலேயே சேலம்பரம்புக்கு மோக்ஷம் கிடைக்கும் என்றால் அந்த பாகவதத்தின் மகிமையை புரிந்து கொள்ளுங்கள்.

நிந்தாஸ்துதி செய்வது பட்டத்ரிக்கு பிடிக்காது. பூர்வஜெனம வினைக்கு பகவானை கோபித்து எனான புண்ணியம் எனபார். அவர் எத்தனை உபாதைபட்ட போதிலும் குருவாயூரப்பா என்னால் தாங்க முடியவில்லையே.. ன் மீது இரக்கம் காட்டக் கூடாதா என்று கெஞ்சுவாரே தவிர கோபித்து ஒரு வார்த்தை சொல்ல மாட்டார்.

குருவாயூர் ஆலயமே கதி என்று நாராயணீயத்தை பாடிக் ாணெ்டு பன்னிரன்டு ஆண்டுகள் வாழ்ந்தார். ஒரு மண்டலம் மூகம்பிகை தலத்தில் யோகநிஷ்டையில் இருந்தார். பின்னர் துவாரகை பூரி மதுரா பண்டரிபுரம் பத்ரிநாத என்று வட இந்திய யாத்திரை செய்து 1632 ல் கண்ணன் கழலடி சேரந்தார்.

நாராயணியத்தை எழுதி முடிக்கும் போது அவரது வயது 65. அவரது காலம் 1560-1632. இன்றைக்கு ஒரு 400-450 ஆண்டுகளுக்கு முன்னர் குருவாயூரில் நாராயணீயம் இயற்றி ஒவ்வொரு பாடலுக்கும் பகவானிடம் நேரடியாக ஒப்புதல் பெற்றவர். எப்போதோ வேத காலத்தில் பல்லாயிரக் கணக்கான வருடங்களுக்கு முன் நடந்த கதை அல்ல. சமீபத்தில் நடந்த சரித்திரம். அதற்கு சாட்சியாக இருப்பதுதான் நாராயணீயம் என்கிற மஹா காவியம். பட்டத்ரீ என்ற பட்டத்தை பகவானிடம் இருந்து நேரடியாக பெற்றார்.

நாராயண பட்டத்ரீ, எழுத்தச்சன், பில்வமங்களன், பூந்தானம் போன்ற பக்த சிரோண்மணிகள் வாழ்ந்த காலம் கேரளத்தின் வஸந்த காலம்.

பட்டத்ரியின் சரித்திரத்தை படிப்பவரையும் கேட்பவரையும் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தி நல்வழியில் வாழச் செய்து குருவாயூரப்பனின் கருணைக்கு பாத்திரமாக்கும்.

--------
ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா
ஜெய் ஸ்ரீ ராம்
ஜெய் ஸ்ரீ புண்டரீக வரதா!
ஜெய் ஸ்ரீ ஹரி விட்டலே!
--------
 

Latest ads

Back
Top