நுறு வருடங்கள் வாழ முடிவதில்லயே .. ஏன் ..?

Status
Not open for further replies.
நுறு வருடங்கள் வாழ முடிவதில்லயே .. ஏன் ..?

நுறு வருடங்கள் வாழ முடிவதில்லயே .. ஏன் ..?
எவையெல்லாம் நம் ஆயுளை குறைகின்றன ...?


விதுர நீதி :


திருதராஷ்டிரன் விதுரரைப் பார்த்து, மனிதனுக்கு ஆயுள் நூறு வருடங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இருந்தும், முழுமையான ஆயுள் வரை யாரும் வாழ்வதாகத் தெரியவில்லையே...இது ஏன்..? என்று கேட்டார்.

அதற்கு விதுரர், ஆறு கூரிய வாள்கள் தான் மனிதனின் ஆயுளை அழிக்கின்றன - குறைகின்றன என்றார் ...
அவை:
அதிக கர்வம் கொள்ளுதல்
அதிகம் பேசுதல்
தியாக மனப்பான்மை இல்லாமை
கோபம்
சுய நலம்
நண்பர்களுக்கு துரோகம் இழைப்பது
போன்றவை என்றார்

விதுரர் கூறீய அந்த ஆறு வாள்கள் எப்படியிருக்கும் ? அதைப் போக்க என்ன செய்ய வேண்டும் ...?

1. தான் கெட்டிக்காரன், தான் செல்வந்தன், தான் கொடையாளி, தான் நல்லவன், பிறர் கெட்டவர்கள் என்று நினைப்பதால் கர்வம் அதிகரிக்கிறது. கர்வம் கொண்டவனைக் கடவுள் சீக்கிரம் அழித்து விடுவார். ஆகவே, கர்வம் கொள்ளாமலிருக்க வேண்டுமானால், தன் விஷயத்தில் குற்றங்களைப் பார்க்க வேண்டும். பிறர் விஷயத்தில் குணங்களைப் பார்க்க வேண்டும்.

2. அதிகம் பேசுகிறவன் வீண் விஷயங்களைப் பற்றிப் பேசி, வீண் வம்பை விலைக்கு வாங்குவான். அதனால்தான் பகவான் கீதையில் கூறுகிறார்; கடுமையில்லாததும், உண்மையானதும், பிரியமானதும், நன்மையைக் கருதியதுமான வார்த்தை எதுவோ, அது வாக்கினால் செய்யப்படும் தவம்.

3. எல்லாவற்றையும் நாம்தான் அனுபவிக்க வேண்டும் என்கிற ஆசையின் காரணமாகத்தான் நமக்குத் தியாக மனப்பான்மை ஏற்படுவதில்லை. நாம் இந்த உலகில் பிறந்ததே நமக்காக அல்ல, பிறருக்கு உதவுவதற்காகத்தான் என்று உணர்ந்தால் தியாக மனப்பான்மை ஏற்படும்.

4. கோபம்தான் மனிதனுடைய முதல் எதிரி. கோபத்தை வென்றவன்தான் யோகி, அவன்தான் உலகில் சுகப்படுவான். கோபத்துக்கு வசப்பட்டவன், தர்மம் எது? அதர்மம் எது? என்ற விவேகத்தை இழந்து பாவங்கள் செய்கிறான். என்ன தீமைகள் ஏற்பட்டாலும், யார் நம்மைக் கோபித்துக் கொண்டாலும் அவற்றைச் சகித்துக் கொள்ளக் கற்றுக் கொள்ள வேண்டும்.

5. சுயநலம்தான் எல்லாத் தீமைகளுக்கும் காரணம். சுயநலம் பாராட்டுகிறவர்கள், தங்கள் காரியம் ஆக வேண்டும் என்பதற்காக எந்தப் பாவத்தையும் செய்ய அஞ்ச மாட்டார்கள். பிறர் இன்புறுவதைக் கண்டு நாம் இன்புற வேண்டும். பிறர் துன்புறுவதைக் கண்டு நாம் துன்புற வேண்டும். இப்படிச் செய்தால் சுயநலம் போய்விடும்.

6. உலகில் நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிது. அப்படியிருக்க, அவர்களுக்குத் துரோகம் செய்வதைப் போன்ற அநியாயம் உண்டா? பகவான் கீதையில் கூறியிருப்பது போல, நாம் எல்லோருடனும் வெறுப்பின்றியும், நட்பு மனப்பான்மையுடனும், கருணையுடனும் பழக வேண்டும்.


aanmigam


 
Last edited:
தமிழில் ஆசாரக்கோவை என்ற நீதி நூல் இருக்கிறது. அதை படித்து முடிந்த வரை நடந்தால் ஆயுள் அதிகரிக்கும். பிராமணர்கள் ஆகிய நாம் காயத்ரி மந்திர ஜபம் தொடர்ந்து செய்ய வேண்டும். அது பிரணாயமம் செய்வதற்கு சமம். ஆயுளை கூட்டும். வேதங்களில் சொல்லப்பட்டுள்ள வேள்விகளை முடிந்த வரை செய்யவேண்டும். இப்படி செய்தால் பிராமணர்கள் தாங்களும் வாழ்ந்து மற்றவர்களுக்கு வழிகாட்டவும் முடியும்.
 
Status
Not open for further replies.
Back
Top