மக்கள் வாழ்வோடு கலந்திருக்கும் மலைக் கொழுந்தீஸ்வரர்!

Maha52

Active member
மக்கள் வாழ்வோடு கலந்திருக்கும் மலைக் கொழுந்தீஸ்வரர்!

By சி. வெற்றிவேல்


1571799269130.png

ஸ்ரீமலைக் கொழுந்தீஸ்வரர்

தமிழகத்தில் பெரும்பாலான கிராமங்களின் பெயர்கள் காரணப் பெயர்களாக அமைந்துவிடுவதுண்டு. பெயருக்குப் பின்னே ஒரு வரலாறோ, கதையோ ஒளிந்திருக்கும். அப்படிப்பட்ட ஒரு கிராமம்தான் `மூவரை வென்றான்.’ இந்த ஊர் மட்டுமல்ல, இங்கு மலைமேல் அருளும் மலைக் கொழுந்தீஸ்வரர் ஆலயமும் தனிச் சிறப்பு வாய்ந்தது என்று கேள்விப்பட்டு அங்கு சென்றோம்.

பொ
துவாக விருதுநகர் மாவட்டத்தை, `கந்தக பூமி’ என்று சொல்வார்கள். விருதுநகர் - திருவில்லிபுத்தூர் இடையிலான நெடுஞ்சாலையில், அழகாபுரியிலிருந்து மேற்கு நோக்கிப் பிரியும் பாதையில் சுமார் நான்கு கி.மீ தூரம் பயணம் செய்தால், மூவரை வென்றானை அடையலாம். ஊரிலிருந்து கண்ணுக்கு எட்டிய தூரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை. நீர்வளம் நிறைந்த இந்தப் பகுதி, தென்னை மரங்கள், விவசாய நிலங்கள் எனப் பசுமையும் செழிப்புமாகக் கண்ணுக்கு விருந்தாகவும் திகழ்கிறது.

ஒரு காலத்தில் ‘வீரமல்லன்’ எனும் நாட்டாமையின் கீழ் இந்த கிராமம் இருந்தது. கி.பி. 17-ம் நூற்றாண்டின் இறுதியில் ராணி மங்கம்மாள் மதுரையை ஆட்சிபுரிந்தபோது, தன் வீரத்தின் காரணமாக இந்த கிராமத்தை மானியமாகப் பெற்றான் வீரமல்லன். ராணி மங்கம்மாள் ஆட்சியில் இருந்தவரை இவனுக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை. அவள் இறந்த பிறகு சுற்றிலுமிருந்த ஜமீன்தார்களால் பிரச்னைகள் ஏற்பட்டன. மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் ‘கன்னிமாலை’ ஆற்றுநீரைப் பயன்படுத்துவதில் வீரமல்லனுக்கும் நத்தம்பட்டி ஜமீனுக்குமிடையே பிரச்னை தொடங்கியது. கன்னிமாலை ஆறுதான் இரு ஊர்களுக்கும் எல்லையாக ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றின் வடகரையில் வீரமல்லனும், தெற்கே நத்தம்பட்டி ஜமீனும் ஆட்சி புரிந்துகொண்டிருந்தார்கள்.

மேலும் படிக்க https://www.vikatan.com/spiritual/temples/sri-malai-kozhuntheeswarar-temple-in-moovaraivendran

நன்றி விகடன்
 
Last edited:
Back
Top