நாராயணா என்னும் நாமம்....
மனிதர்களுக்கு கர்வம் தலைக்கு ஏருவது போல...ஒருமுறை நாரதர்க்கும் கர்வம் தலைக்கு ஏறியது.அதன் விளைவாக நாராயணா என்று பகவான் நாமத்தை தினம் தோறும் சொல்வதால் தனக்கு என்ன பலன் கிடைக்கும் ?என்று ஒரு சந்தேகம் வந்துவிட்டது.
அதே சிந்தனையுடன் வைகுண்டதிற்க்கு வருகிறார்...இருந்தாலும் கடமைக்காகவும், திருமால் தப்பாக நினைக்க கூடாதே என்ற பயத்தாலும் நாராயணா... நாராயணா... என்று கூறிக்கொண்டெ வருகிறார்.
உளகை அளந்தவணுக்கு நாரதர் உள்ளத்தை அளக்க தெரியதா என்ன?
என்றாலும் அறிந்தும் அறியாதவர் போல் என்ன நாரதா... உன் குற்ல் வழக்கம் போல் இல்லயே... மனதில் ஏதொ சந்தெகம் தெரிகிறதே...
நாரதரோ," தங்களிடம் என்னால் எதையாவது மறைக்க முடியுமா?"
இருந்தாலும்....எப்படி கேட்பது என்றுதான் ?
பரவாயில்லை கேள்... இது திருமால்..
கேட்க வேண்டும் போலவும் இருக்கிறது...கேட்காவிட்டால் தலையே வெடித்து விடும் போலவும் இருக்கிறது.....
பரவாயில்லை... கேள்...
அதாவது ஸ்வாமி... தங்கள் நாமத்தை தினம் தோறும் சொல்வதால் யென்ன பயன்.....இது தான் என் சந்தேகம்...என் சந்தேகத்தில் தவறு இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்.
இவ்வாறு இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போது ஒரு வண்டு வட்ட்மிட்டுகொண்டு அங்கு வருகிறது.
நாரதா உன் சந்தேகத்தை அந்த வண்டிடம் கேள்...
உடனே நாரதர் வ்ண்டின் காதில் நாராயணா என்று சொல்வதால் என்ன பயன்? என்று கேட்டார் நாரதர்.
உடனே வண்டு இறந்துவிட்டது.
மீண்டும் திருமாலிடம் வந்த நாரதர் ஸ்வாமி தங்கள் திருநாமத்தை கேட்ட மாத்திரதில் வண்டு இறந்துவிட்டது என்ன செய்வது ?.
பரவாயில்லை... உடனே நீ பூலோகம் சென்று ஒரு ஜமீந்தார் வீட்டு பசு மாடு ஒரு கன்றை ஈனப்போகிறது... அந்த கன்றிடம் உன் சந்தெகத்தை கேள்....
நாரதர் உடனே பூலொகம் வருகிறார்..ஜமீந்தார் வீட்டுக்கு பின் புறம் உள்ள மாட்டு கொட்டகைக்கு வருகிறார்...
இவர் வரவும் பசு மாடு ஈன்வும் சரியாக இருந்தது.
கன்று பிறந்த உடன் அதன் காதில் சென்று நாராயணா என்று சொல்வதால் என்ன பயன்? என்று கேட்டார் நாரதர்.
உடனே கன்று இறந்துவிட்டது.
தலை தப்பியது தம்பிறான் புண்ணியம் என்று விழுந்தடித்துகொண்டு
மீண்டும் வைகுண்டம் வருகிறார் நாரதர்.
திருமாலிடம் அய்யோ ஸ்வாமி என்னவென்று சொல்வேன்.தங்கள் பெயரை சொன்ன உடன் பூலோகத்தில் ஜமின்தார் வீட்டு கன்றும் இரந்து விட்டது.
யாரும் பார்பதற்குள் விழுந்தடித்து ஓடி வருகிறேன்.இன்னும் எனது சந்தேகம் தீர்ந்தபாடில்லை.
உடனே திருமால் பரவாயில்லை நாரதாதிரும்பவும் பூலோகம் சென்று வா.அங்கு மன்னனின் பட்டத்து ராணி நிறை மாத கர்பிணி.இப்பவோ அப்பவோ என்று அவளுக்கு குழந்தை பிறக்கும் நேரம் நெருங்கிகொண்டிருக்கிறது.
குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தையிடம் கேட்டால் உன் சந்தேகத்துக்கு பதில் கிடைக்கும் என்றார் திருமால்.
ஐயோ ஸ்வாமி எனக்கு பயமாக இருக்கிறது.
அரசியார் அருகில் அரசர் நிச்சயம் இருப்பார்.அரன்மனையில் காவலும் அதிகமாக இருக்கும்.ஒருவேளை கடந்த முறை போல் குழந்தை உம் பெயரை கேட்ட மாத்திரத்தில் இறந்துவிட்டால் நிச்சயம் நான் உயிரோடு வரமுடியாது. என்றார் நாரதர்.
பரவாயில்லை.சென்று வா நரதா உன் உயிருக்கு நான் உதிரவாதம் தருகிறேன் என்று திருமால் நாரதருக்கு தைரியமூட்டி அனுப்புகிறார்.
(மீதி நாளஒய்