"நாராயணன்' என்று எழுத வேண்டுமா! "நாராயனன்'

Status
Not open for further replies.
"நாராயணன்' என்று எழுத வேண்டுமா! "நாராயனன்'

"நாராயணன்' என்று எழுத வேண்டுமா! "நாராயனன்' என்று எழுத வேண்டுமா!



large_125514319.jpg


"நாராயணன்' என்று எழுத வேண்டுமா! "நாராயனன்' என்று எழுத வேண்டுமா! என கேட்டால், ""இதென்ன கேள்வி! மூன்று சுழி "ண' தான் சரி என பதில் சொல்வீர்கள். அதே நேரம் ஒருவர், ""அது எப்படி சரியாகும். நாராயணனை "நாரம்+அயனன்' என்று தானேபிரிப்பீர்கள். அப்படியானால், "நாராயனன்' என்று இரட்டைச்சுழியில் தானே எழுத வேண்டும் என எதிர்க்கேள்வி கேட்பார். நாராயணனுக்கு "ண' என்ற மூன்று சுழி எழுத்தைப் பயன்படுத்த காரணம் என்னவென்று கேளுங்கள்.

பிரஜாபதி என்ற சொல்லுக்கு "பிரம்மா' என்றும், "நாராயணன்' என்றும் இரண்டு அர்த்தம் உண்டு. இப்படி ஒரு சொல்லுக்கு, இரு பொருள் இருந்தால் அதற்குரிய விதிப்படி தான் எழுத வேண்டும். ஆனால், ஒரு சொல், ஒரு நபரையோ அல்லது ஒரு பொருளையோ மட்டும் குறிக்குமானால், அதற்கு "ண' என்ற எழுத்தைப் பயன்படுத்த வேண்டுமென பாணினி மகரிஷி இலக்கணம் வகுத்திருக்கிறார். நாராயணன் என்பது திருமாலை மட்டுமே குறிக்கும். வேறு யாருக்கும் இது பொருந்தாது. அதனால், இலக்கண விதிப்படி, மூன்று சுழியை பயன்படுத்துகிறோம்.

நாரம் என்றால் "தண்ணீர்'. "அயனன்' என்றால் "சயனித்திருப்பவர்'. பாற்கடலில் படுத்திருப்பவர் நாராயணன் என்பது உட்பொருள்.


Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts
 
Status
Not open for further replies.
Back
Top