நம்மாழ்வார் திருவாய்மொழி சில விஷயங்கள்

praveen

Life is a dream
Staff member
நம்மாழ்வார் திருவாய்மொழி சில விஷயங்கள்

நம்மாழ்வார் - திருவாய்மொழி - சில விஷயங்கள்


1. திருவாய்மொழி தவிர மற்ற திவ்ய பிரபந்தங்கள் பெருமாள் வீதிகளில் எழுந்தருளும் பொழுது சேவிக்க பெறுகின்றன . ஆனால் திருவாய்மொழி மட்டும் வீதிகளில் சேவிக்க பெறுவதில்லை . ஆஸ்தானத்தில் மட்டுமே சேவிக்க பட வேண்டும்


2. நம்மாழவார் அருளிச்செயலான திருவாய்மொழிக்கு ஒரு வடமொழி ஸ்லோகமும் ஐந்து தமிழ் பாசுரங்களும் உள்ளன


3. கண்ணபிரானுக்கு ஈன்ற தாய் தேவகியும் வளர்த்த தாய் யசோதையுமாக இரண்டு தாய்மார்கள் போல திருவாய்மொழிக்கு பெற்ற தாய் நம்மாழவார் பரிவுடன் வளர்த்த தாய் ஸ்ரீ ராமானுஜர்


4. போறியா பெருமாள் விஷயமானால் கஸ்தூரி வாசனையும் திருவேங்கடமுடையான் விஷயமானால் ஸ்ரீ பாதுகாரேணு மணமும் தேவா பெருமாள் விஷயமானால் பத்மகந்தமும் வீச வேண்டும் . திருவாய்மொழி அநுஸந்தானம் பண்ணினால் மகிழ மணம் வீசும்


5.ஓம் என்று ஓதியே வேதம் ஓதுவது போல திருப்பல்லாண்டு பாடி உடனே மத்திமபதமான நம : என்பதன் விளக்கமான கண்ணிநுண்சிறுத்தாம்பைப் பாடி பிறகு நாராயண பதத்தின் விளக்கமான திருவாய்மொழியை சேவிப்பது ஸத் ஸம்பிரதாயமாகும் .


6.சாம வேத சாரமான படியால் இதனை ஆரணக்கவி என்பர் . எம்பெருமான் விஷயம் அன்றி வேறு எந்த விஷயமும் கலவாத தூய பசும்பால் ஆனபடியால் '' திருமாலவன் கவி '' எனவும் பெயர்.


7. ஸ்ரீ நாதமுனிகள் திருக்குருகூர் வந்து கண்ணிநுண்சிறுத்தாம்பு பதிகம் பன்னீராயிரம் தடவை ஜபித்து நம்மாழ்வாரிடமிருந்து நாலாயிர திவ்ய பாசுரங்களையும் பின்னால் அவதரிக்கப் போகிற ஆச்சார்யர் என்ற பொருள்படும் பவிஷ்யதாச்சார்யர் விஹரத்தை காட்டியதோடு , நித்ய ஆராதனத்திற்கு பயன்படும்படி ஒரு சிற்பியின் கனவிலும் திருமேனியை காட்டி வடித்துக் கொடுத்தார் . அந்த விக்கிரஹம் தற்போது திருக்கோஷ்டியூரில் சௌம்ய நாராயண பெருமாள் கோயிலில் உள்ளது


8. திருவாய்மை மொழி என்ற சொற்கள் கொண்ட திருவாய்மொழி த்வயம் எனப்படும் ரத்தினத்தின் விவரணமாக உள்ளது


9. நம்மாழ்வார் பாடியருளிய திருவாய்மொழி ' யானாய்த் தன்னை தான் பாடி'' என்ற ஆழ்வார் சொற்படியே எம்பெருமானே ஆழ்வார் வாக்கில் நின்று பாடிய பிரபந்தம் ஆகும்


10. ஆழ்வார் திருநகரியில் ஆழ்வார் சந்நிதியும் ஸ்ரீ ஆதிபிரான் சாநித்தியும் தனி தனியே உள்ளது . பெருமாள் விமானத்தை விட ஆழ்வார் விமானம் சற்று பெரியது


11. ஆழ்வார் திருநகரியில் மார்கழி மாதத்தில் பெரிய திருவத்யயன விழாவில் பகல் பத்தில் பத்தாம் நாள் இரவு நம்மாழவாருக்குசயனத்திருக்கோலமும் மாறனடி பணிந்து உய்ந்தவருமான ராமானுஜருடைய திருமேனிக்கு நாயகித் திருக்கோலமும் அலங்கரித்து நம்மாழ்வார் திருவடிகளை பிடித்து கொண்டிருப்பது போல அலங்கரித்து சேவை நடக்கும்


12. திருக்குறுங்குடி நம்பியே நம்மாழ்வாராக அவதரித்தமையால் திருக்குறுங்குடி கோயிலில் நம்மாழ்வார் திருமேனி இல்லை


13. வானமாமலை திருத்தலத்தில் நம்மாழ்வாருக்கு சந்நிதி இல்லாமல் பெருமானுடைய சடாரியில் விக்கிரகமாக எழுந்தருளி உள்ளார். இங்கே திருவத்யயன உத்சவத்தில் நம்மாழ்வார் திருவடி தொழுவதில்லை . நம்மாழ்வாருக்கு பதிலாக திருமங்கை ஆழ்வார் திருவடி தொழுகிறார்
 
Back
Top