நம்பினார் கெடுவதில்லை

Status
Not open for further replies.

Raji Ram

Active member
நம்பினார் கெடுவதில்லை



குருவாயூரப்பனை எப்போதும் தியானித்துப்
பெரு வாழ்வு வாழ்ந்தவரே பூந்தானம். அவர்

கண்ணனிடம் பேசுவதும் தினப்படி உண்டு;
எண்ணுவதற்கும் அதிசயமே இது இன்று!

உடலில் நோய் தாக்கி வருந்திய ஒருவன்
உடனே அணுகினான் பக்தர் பூந்தானத்தை.

‘தங்களிடம் பேசும் கண்ணனிடமே எனது
சங்கடம் தரும் நோய் குணமாகுமா என்ற

வினாவை எழுப்பி, அவன் தரும் அந்த ஒரு
விடையை எனக்கும் கூறும்’, எனக் கேட்டான்.

‘குணமாகுமா அவன் நோய்?’, என அவர் வினவ,
‘குணமாகாது’, எனக் கண்ணனும் உரைத்தான்!

மனம் உடைந்த நோயாளி சில நாட்களில்
மனம் மகிழ வைக்கும் ஒரு செய்தி கேட்டான்.

குரூரம்மை எனும் எளிய பக்தையும், தினம்
குருவாயூரப்பனிடம் பேசுவதை அறிந்தான்!

இம்முறையேனும் நல்வழி கிடைக்குமென
அம்மையிடமும் தன் குறையைச் சொன்னான்.

அவள் பெற்ற பதிலின்படி அவன் செய்திட,
அவன் நோய் விரைவிலேயே குணமானது!

மெய்யான பக்தர் பூந்தானத்தை அணுகிப்
‘பொய்யுரைத்தீர் நீர்!’ என அவன் சாடிட,

அன்றே பக்தரும் கண்ணனை வினவினார்,
‘நன்றோ நீர் எனைப் பொய்யன் ஆக்கியது?’

சிரித்த கண்ணன் சொன்னான், ‘அவன் நோய்
சரியாகுமா எனச் சந்தேகத்துடன் கேட்டீர்!

அம்மையாரோ என் வல்லமை உணர்ந்து,
எம்முறையில் அவன் குணமாவான் என்று

நம்பிக் கேட்க, உரைத்தேன் தினம் என்
நாமம் தவறாது நினைத்தல் நலம் என!’

‘அச்சுதா! ஆனந்தா! கோவிந்தா!’ என்பதுவே
நிச்சயம் குணமாகும் ஒரு நல்வழி அன்றோ?
 
கணபதியின் அழகிய தும்பிக்கையைக் காட்டிலும்
ஜனங்களின் நம்பிக்கை வலிமை வாய்ந்தது அல்லவா?
 
நம்பிக்கையைத் தும்பிக்கையான் மீதே வைத்தால்
தும்பிக்கையின் பலமே நம்பிக்கைக்கு வருமே!
அன்புடன், ராஜி ராம்
 
நம்பினார் கெடுவதில்லை! தொடர்ச்சி ...

அன்றைய குரூரம்மை கதை அறிந்துகொண்ட நாம்,
இன்றைய சாய்னாவின் வெற்றியும் அறிவோமே!

'பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு - என அன்றே வள்ளுவர்,

பற்று விடும் உபாயத்தை உரைத்தாலும், அந்தப்
பற்றைப் பற்றியே தங்கம் கைப்பற்றினாள் மங்கை!

மெய்யாக உரைக்கின்றேன்; அன்று கண்ட FINALS
மெய் சிலிர்க்க வைத்தது அனைவரையும், நிஜமே!

சரியான போட்டி என்று அசர வைத்த முதல் ஆட்டம்,
சரியாக இரண்டு பாயின்ட்டுகளில் கை நழுவியது!

உறுதியுடன் விளையாடிய இரண்டாம் ஆட்டமும்,
இறுதியில் 20 - 19 என்ற நிலை! MATCH POINT வர,

இந்த நேரம் வான் நோக்கிய சாய்னா, ஆவேசமாய்
அந்தப் பாயின்ட்டை முறியடித்து, சமநிலையாக்க,

இருபதில் சமநிலையானது மீண்டும் ஒரு முறை
இருபத்தியொன்றிலும் சமநிலையாக ஆகிவிட,

எதிராளி அழகியோ, மூன்றாவது ஆட்டம் ஆடுவது
எளிதான முயற்சியல்ல என அறிந்துகொண்டு பதற,

அடுத்த இரு பாயிட்டுகளை அதிரடியாய் எடுத்து,
எடுத்தாள் அந்த ஆட்டத்தில் வெற்றிக் கனியை!

அடுத்த மூன்றாம் ஆட்டத்தை மிக எளிதாய் வென்று,
அடுத்த தங்க மெடலை இந்தியாவுக்குப் பெற்று,

மெடல் பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு போகாது,
மெடல் எண்ணிக்கை உயர்த்தினாள், தங்க மகள்!

ஒரு தங்கம் பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர,
ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடினாள் அவள்!

தன்னம்பிக்கையும், இறைவன் மீது கொண்ட
நன்னம்பிக்கையும் அவள் புகழை உயர்த்தின!

இரண்டாம் இடத்தில் இந்தியாவை வர வைத்தது,
இரண்டாம் கருத்துக்கிடமில்லாது இந்த வெற்றியே! :first:


உலகம் உய்ய வேண்டும்,
ராஜி ராம்
 
Status
Not open for further replies.
Back
Top