Raji Ram
Active member
நம்பினார் கெடுவதில்லை
குருவாயூரப்பனை எப்போதும் தியானித்துப்
பெரு வாழ்வு வாழ்ந்தவரே பூந்தானம். அவர்
கண்ணனிடம் பேசுவதும் தினப்படி உண்டு;
எண்ணுவதற்கும் அதிசயமே இது இன்று!
உடலில் நோய் தாக்கி வருந்திய ஒருவன்
உடனே அணுகினான் பக்தர் பூந்தானத்தை.
‘தங்களிடம் பேசும் கண்ணனிடமே எனது
சங்கடம் தரும் நோய் குணமாகுமா என்ற
வினாவை எழுப்பி, அவன் தரும் அந்த ஒரு
விடையை எனக்கும் கூறும்’, எனக் கேட்டான்.
‘குணமாகுமா அவன் நோய்?’, என அவர் வினவ,
‘குணமாகாது’, எனக் கண்ணனும் உரைத்தான்!
மனம் உடைந்த நோயாளி சில நாட்களில்
மனம் மகிழ வைக்கும் ஒரு செய்தி கேட்டான்.
குரூரம்மை எனும் எளிய பக்தையும், தினம்
குருவாயூரப்பனிடம் பேசுவதை அறிந்தான்!
இம்முறையேனும் நல்வழி கிடைக்குமென
அம்மையிடமும் தன் குறையைச் சொன்னான்.
அவள் பெற்ற பதிலின்படி அவன் செய்திட,
அவன் நோய் விரைவிலேயே குணமானது!
மெய்யான பக்தர் பூந்தானத்தை அணுகிப்
‘பொய்யுரைத்தீர் நீர்!’ என அவன் சாடிட,
அன்றே பக்தரும் கண்ணனை வினவினார்,
‘நன்றோ நீர் எனைப் பொய்யன் ஆக்கியது?’
சிரித்த கண்ணன் சொன்னான், ‘அவன் நோய்
சரியாகுமா எனச் சந்தேகத்துடன் கேட்டீர்!
அம்மையாரோ என் வல்லமை உணர்ந்து,
எம்முறையில் அவன் குணமாவான் என்று
நம்பிக் கேட்க, உரைத்தேன் தினம் என்
நாமம் தவறாது நினைத்தல் நலம் என!’
‘அச்சுதா! ஆனந்தா! கோவிந்தா!’ என்பதுவே
நிச்சயம் குணமாகும் ஒரு நல்வழி அன்றோ?
குருவாயூரப்பனை எப்போதும் தியானித்துப்
பெரு வாழ்வு வாழ்ந்தவரே பூந்தானம். அவர்
கண்ணனிடம் பேசுவதும் தினப்படி உண்டு;
எண்ணுவதற்கும் அதிசயமே இது இன்று!
உடலில் நோய் தாக்கி வருந்திய ஒருவன்
உடனே அணுகினான் பக்தர் பூந்தானத்தை.
‘தங்களிடம் பேசும் கண்ணனிடமே எனது
சங்கடம் தரும் நோய் குணமாகுமா என்ற
வினாவை எழுப்பி, அவன் தரும் அந்த ஒரு
விடையை எனக்கும் கூறும்’, எனக் கேட்டான்.
‘குணமாகுமா அவன் நோய்?’, என அவர் வினவ,
‘குணமாகாது’, எனக் கண்ணனும் உரைத்தான்!
மனம் உடைந்த நோயாளி சில நாட்களில்
மனம் மகிழ வைக்கும் ஒரு செய்தி கேட்டான்.
குரூரம்மை எனும் எளிய பக்தையும், தினம்
குருவாயூரப்பனிடம் பேசுவதை அறிந்தான்!
இம்முறையேனும் நல்வழி கிடைக்குமென
அம்மையிடமும் தன் குறையைச் சொன்னான்.
அவள் பெற்ற பதிலின்படி அவன் செய்திட,
அவன் நோய் விரைவிலேயே குணமானது!
மெய்யான பக்தர் பூந்தானத்தை அணுகிப்
‘பொய்யுரைத்தீர் நீர்!’ என அவன் சாடிட,
அன்றே பக்தரும் கண்ணனை வினவினார்,
‘நன்றோ நீர் எனைப் பொய்யன் ஆக்கியது?’
சிரித்த கண்ணன் சொன்னான், ‘அவன் நோய்
சரியாகுமா எனச் சந்தேகத்துடன் கேட்டீர்!
அம்மையாரோ என் வல்லமை உணர்ந்து,
எம்முறையில் அவன் குணமாவான் என்று
நம்பிக் கேட்க, உரைத்தேன் தினம் என்
நாமம் தவறாது நினைத்தல் நலம் என!’
‘அச்சுதா! ஆனந்தா! கோவிந்தா!’ என்பதுவே
நிச்சயம் குணமாகும் ஒரு நல்வழி அன்றோ?