• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

"நக்கல்கள்"...சில தமிழ் சினிமாக்கள்....tvk

Status
Not open for further replies.

kk4646

Active member
"நக்கல்கள்"...சில தமிழ் சினிமாக்கள்....tvk

நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் முத்துராமன் மனைவியிடம்
ஆபரேஷனுக்கு முன்னால் என்ன சொல்வார் தெரியுமா?


ஆபரேஷன் சக்சஸ் ஆகம போய்ட்டா நீ டாக்டரை கண்டிப்பாக
கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்வார்....


ஏன் அப்பிடி சொன்னார் தெரியுமா...?


ஓ..!! தெரியுமே....அந்த டாக்டரை " பழி " வாங்கத்தான்..!!
இவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு டாக்டரும் "அவஸ்தைப்" படட்டுமேன்னுதான்...!!
-------------------------------------------------------------------


என்ன சார்...மத்யானம் ஆளைக் காணோம்....


டிவி லே "கரகாட்டகாரன்" சினிமா பார்த்துகிட்டிருந்தேன்..அதான்...


ஓஹோ...அப்பிடியா..."வாழப் பழ" காமடி புரிஞ்சிதா...?


ஓ..புரிஞ்சிதே....விலைவாசி அப்பவே ஏறிப் போச்சு....


ஒரு ரூபாய்க்கு ரெண்டு பழம்தான் கிடைச்சுது.....!!
-------------------------------------------------------------------


"மொழி" படத்திலே பிரிதிவிராஜ் ஜோதிகாவை துரத்தி..துரத்தி லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்குவாரு.....


அப்பிடியா...ஏன் துரத்தணும்....?


பின்ன "பேசாத பெண்டாடி" ன்னா...சும்மாவா.....? அதிர்ஷட்டகார மனுஷன்....சார்....!!
-------------------------------------------------------------------


என்ன சார்.....சினிமாவுக்கு போய்ட்டு வரீங்களா...??


ஆமாம்....ரஜினியின் "சிவாஜி"....படம்...


ஒரு பெரிய "தத்துவத்தை" "சிம்பாலிக்கா" சொல்லியிருக்காங்க...


அப்பிடிடயா....என்னது அது....?


படம் கடேசியிலே ரஜினி "மொட்டை தலையோட".. மொட்டை பாஸ் ன்னு
வருவாரு....


ஒரு ரூபாய வெட்சுக்கிட்டு அடுத்தவங்க தலைய மொட்டை அடிச்சா....


நம்ப தலை மொட்டை ஆயிடுமின்னு "சிம்பாலிக்கா" சொல்லியிருக்காங்க.....!!
-------------------------------------------------------------------


என்ன சார்..."என்திரன்" படம் பாத்தீங்களே....சந்தானம்-கருணாஸ் "காமடி" எப்பிடி இருந்தது...??


"ஓ"...அதுவா.....அதான்...ரஜினியே படத்திலே அவங்க காமடிக்கு சரியான "காம்பிளிமெண்ட்" குடுக்கிறாறே....


அப்பிடியா....என்ன "காம்பிளிமெண்ட்" குடுக்கிறாற் சார்...??


அவங்க செருப்பாலையே ரெண்டுபேரையும் நல்லா அடிக்கிறாற்.....
------------------------------------------------------------------


உங்களுக்கு யார் காமடி பிடிக்கும்....சந்தானமா...கவுண்டமணி-செந்திலா...வடிவேலுவா...விவேக்கா..??


எனக்கு என் காமடிதான் பிடிக்கும்...!!


Tvk
 

நல்ல நக்கல்கள்தான்! 'எந்திரன்', 'என்திரன்' ஆகிவிட்டதும் காமெடியோ?


இந்த நூல் சீக்கிரம் 'ஜோக்' பகுதிக்குப் போய்விடுமோ? :bolt:

இதோ, எந்திரனின் சாகசம்!

Rocking scene from ROBO
 

நல்ல நக்கல்கள்தான்! 'எந்திரன்', 'என்திரன்' ஆகிவிட்டதும் காமெடியோ?


இந்த நூல் சீக்கிரம் 'ஜோக்' பகுதிக்குப் போய்விடுமோ? :bolt:

இதோ, எந்திரனின் சாகசம்!

rocking scene from robo



"எந்திரன்', 'என்திரன்' ஆகிவிட்டதும் காமெடியோ?"


ஹ....ஹா.. நக்கல்கள் "என் திறன்" என்று வைத்துக்கொள்ளுங்களேன்...!!

Tvk
 
ராமா யீ வயசுக்கு வந்தாச்சு படம் வந்தபிறகு திருச்சி காவேரி தியேட்டரில் தூறல் நின்னு போச்சு படம் வந்தபோது
இப்பதான் தூரம் வந்தது ,அதுக்குள் தூரம் நின்னு போச்சா என்று சிலரும்
கவரில் தூரல் நின்னா பரவாயில்லை தண்ணீர் வந்தால் போதும் என்று சிலரும் நக்கல் செய்தார்கள்
guruvayurappan
 
Status
Not open for further replies.
Back
Top