தோஷ பரிகாரம் செவ்வாய் -சனி தோஷம்

Status
Not open for further replies.
தோஷ பரிகாரம் செவ்வாய் -சனி தோஷம்

செவ்வாய் தோஷ பரிகாரம்



9c92be87-4e10-455c-9147-6b7a9a27b67e_S_secvpf.gif


லக்னத்தில் செவ்வாய் இருந்தால் இதை செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகம் என்று கொள்ளவேண்டும். அதற்கு அங்காரகன் ப்ரீதி செய்வது நல்லது. திருநாகேஸ்வரம், திருபாம்புரம், கீழப்பெரும்பள்ளம், பேரையூர், ரமேஸ்வரம், நாகர்கோவில் போன்ற நாகதோஷ நிவர்த்தி ஸ்தலங்களில் யோகபலம் பெற்ற நாளில் சென்று முறையாக சர்ப்ப சாந்தி செய்ய வேண்டும்.

உள்ளூர் உள்ள சிவாலயத்திலும் ராகு- கேதுகளுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அர்ச்சனை செய்து வரலாம். அரச மரங்களில் வீற்றிருக்கும் சர்ப்ப விநாயகரையும் வழிபாடு செய்யலாம். எப்படி செய்தாலும் சர்ப்ப சாந்திக்கு மறுநாள் அங்காரக வழிபாட்டிடையும் செய்ய வேண்டும். இல்லையேல் அங்காரக வழிபாட்டிற்கு மறுநாள் சர்ப்ப சாந்தியை செய்ய வேண்டும்.


சனி தோஷம் நீக்கும் வழிபாடு



ae171bd5-4941-491f-90d0-664cac24f119_S_secvpf.gif




சனி பகவான் நீதிமான். குற்றங்கள் புரிபவர்களையும் தெரிந்தே பாவங்கள் செய்பவர்களையும் அகந்தையுடனும், அகங்காரத்துடனும் நடப்பவர்களையும் அவர் தண்டிக்காமல் விடமாட்டார். சில சமயங்களில் ஒரு பாவமும் அறியாத நல்லவர்கள் கஷ்டப்படும் பொழுது, சனி என்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டான் என்று புலம்புவது உண்டு.

அது போன ஜென்மத்து பாவங்களின் தொடர்ச்சியாகும். ஆகவே எப்பொழுதும் நன்மைகள் செய்ய சனியின் தாக்கம் குறையும் என்று அருளாளர்கள் கூறுவர் என்கிறார் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையை சேர்ந்த விஜய்சுவாமிஜி.

சனீஸ்வரர் எப்பொழுதும் கண்களைக் கட்டிக் கொண்டு தான் இருப்பார், அவரது நேரடிப்பார்வையின் உக்கிரத்தை யாராலும் தாங்க முடியாது என்பதால் தான் அவர் இப்படி கருப்புத் துணியால் கண்களைக் கொண்டிருக்கிறார் என்பது ஐதீகம்.

ஏழரை நாட்டுச் சனி, அஷ்டமச் சனி, ஜன்மச் சனி, ஜாதகத்தில் சனி திசை நடக்கும் போது நல்லதும், கெட்டதும் நடக்க வாய்ப்பு உண்டு. சனியின் பிடியில் சிக்கியிருப்பவர்கள் அவரின் தாக்கம் குறைய ஒவ்வொரு சனிக்கிழமையும் காகத்திற்கு சாதத்தில் எள் கலந்து உணவு வைக்க வேண்டும்.

உளுந்து வடையை காகங்களுக்குப் போடுவது நல்லது. ஒவ்வொரு சனி அன்றும் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் வைக்க வேண்டும். வெள்ளிக்கிழமை இரவு படுக்கும் போது கொஞ்சம் எள்ளை ஈரத் துணியில் கட்டி தலைக்கு அடியிலோ, உடலுக்கு அடியிலோ, வைத்து விடிந்த பின் சாப்பிடுவதற்கு முன் அந்த எள்ளை சாதத்துடன் கலந்து காகத்திற்கு வைக்க வேண்டும்.

சனி பகவான் கால் ஊனமுற்றவர், ஆதலால், உடல் ஊனமுற்றவர்களுக்கும், முதியவர்களுக்கும், ஏழைகளுக்கும் முடிந்த உதவிகள் செய்யலாம். தயிர் அன்னம் அளிப்பது மிகவும் நல்லது. விநாயகப் பெருமானை வணங்கி அவருக்கு நல்லெண்ணெயில் தீபம் இடுதல் நல்ல பலனைக் கொடுக்கும். சனிக்கிழமை வரும் பிரதோஷ நாட்களில் சிவ வழிபாடு சனியின் உக்கிரத்தைக் குறைக்கும்.

கரிநாளில் பைரவரை சிவப்பு மலர்களால் அர்ச்சித்தால் சனியின் தாக்கம் குறையும். வாதம்-மனதளர்ச்சி நீக்குபவர் இந்த சனி பிடித்தவன் சந்தைக்கு போனாலும், கந்தலும் அகப்படாது.இந்த சனியின் பிறந்த நாளிலிருந்து குடும்பத்தை பாடாய்படுத்துகிறது.

இப்படியாக சனியை பல கோணங்களில் வசை பாடினாலும் அவரின் மகத்துவம் சிறப்பானது. சனி ஒருவர் மட்டுமே பிற கிரகங்களை விட உலகத்து மக்களிடம் பிரபலமானவர். குரு கிரகத்திற்கு அடுத்த கிரகம் சனி, குறுக்களவு உத்தேசமாக 73,000மைல். குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணு மாலையா கோவிலில் கற்சிலையாக தூணில் பெண் உருவில் காட்சி தருகிறார்.

நெல்லையை அடுத்த கருங்குளத்திலும் சனி பகவான் நீலாவுடன் அமர்ந்துள்ளார். மனித உடலில் தொடைகளுக்கு உடையவர். குடல் வாத நோய் இவரால் ஏற்படும். மேலும் முதுகு வலி, விரைவீக்கம், முடக்கு வாதம், யானைக் கால், பேய் தொல்லை, மூலநோய், மன தளர்ச்சி இவையும் இவரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இந்நோய் பாதித்தவர்கள் சனியை வணங்குவதால் நோயின் வேகம் வெகுவாக தணியும்.

சனி ஜாகத்தில் 3,6,1,0,11-ல் இருந்தால் நிலபுலம் வாங்குதல், வீட்டு வசதி, விவசாயத்தில் பாடு, உத்யோகம், வருவாய், பெரியோர் ஆதரவு, தலைமை தாங்கும் பொறுப்பு இவையாவும் சுலபத்தில் வந்து விடும். 8-ம் இடத்து சனி, தொல்லைகளை அள்ளித் தந்தாலும், ஆயுளை அதிகரிக்கச் செய்வார்.

ரேகை சாஸ்திரத்தில் நடு விரலுக்கு நேர் கீழ்பாகம் உள்ள சனி மேட்டில், அதிக ரேகைகள் செங்குத்தாக காணப்பட்டால், ஒன்றல்ல பல வீடுகள் சுலபமாக அவர்களை நாடிவரும். 12-ல் சனி இருக்கப் பிறந்தோர்-வாழ்க்கை துணைக்கு வேட்டு வைக்கும் சுபாவம் நிலைக்கும் ஊதாரித்தனம், வந்த வருமானம் நாலாவிதமாக தீய வழியில் செலவிடுதல் போன்றவை நிகழும்.

பெருவிரலை அடுத்த சுக்கிர மேட்டில் பலவித குறுக்கு கோடுகள் அடியில் காணப்பட்டால் சனி பாடாய்படுத்தப் போவதின் அறிகுறி என திடமாக நம்பலாம். 4-ல் சனி அன்னைக்கு அற்ப ஆயுள், கெட்ட நண்பர்கள் சேர்க்கை, வேண்டாத வம்பில் நம்மை இணைப்பது நிகழும்.

* சனி பகவான் ஜாதகத்தில் சீராக அமைந்திருந்தால் இரும்பு மெஷினரி, இரும்பு தொழிற்சாலை, தோல், சிமெண்ட், ஏஜெண்ட், தயாரிப்பு, கரும் பலகை, ரோஸ் உட், நல்லெண்ணை மொத்த வியாபாரம், போக்குவரத்து தொழிலிலும் வெற்றித் தரும்.

* சனியன்று சந்திராஷ்ட தினமாக மகரராசி திருவோண நட்சத்திரத்தில் பிறந்தோருக்கு அமையப் பெற்றால் அன்று கண் பார்வைக்காக அறுவை சிகிச்சை செய்தல் கூடாது.

* லக்னத்தில் சனி அமர்ந்து உடலில் அபரிமிதமாக ரோமங்கள் காணப்பட்டால் இல்லாமை, பணமுடக்கம் ஏற்படும். அதற்கு பரிகாரம் சாதுக்கள், மற்றும் தானம் கேட்போருக்கு ஒரு இரும்பு ஸ்டவ் தானமாக கொடுக்கலாம்.

* சனி இரண்டில் இருந்தால் - நெற்றியில் எள் எண்ணெய் தேய்த்தல் கூடாது.

* சனி மூன்றில் இருந்தால்- வீட்டு வாசல் கதவில் மூன்று இரும்பு ஆணி இருக்கச் செய்யவும்.

* சனி நாலில் இருந்தால் - கறுப்பு ஆடைகள், கொள்ளு (தானியம்) தானம் செய்யலாம்.

* சனி ஐந்தில் இருந்தால் - வீட்டின் மேற்கு பாகத்தில், செம்பு, வெள்ளி, தங்க உலோகம் இருக்கச் செய்யவும்.

* சனி ஆறில் இருந்தால் - 40க்கு மேல் 48 வயதிற்குள்ள இடை காலத்தில் வீடு கட்டுதல் கூடாது.


??? ????? ???????? ??????? || shani dev thosa valipadu
 
Status
Not open for further replies.
Back
Top