• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

தோஷ நிவர்த்தி தரும் ராகுகால துர்க்கை பூஜ

Status
Not open for further replies.
தோஷ நிவர்த்தி தரும் ராகுகால துர்க்கை பூஜ

தோஷ நிவர்த்தி தரும் ராகுகால துர்க்கை பூஜை

ஆகஸ்ட் 10,


fe9511aa-b137-4f9e-80ee-f0b761ba7001_S_secvpf.gif



நவக்கிரகங்களில் மிக வலிமை பொருந்திய ராகு பகவான், மங்கள வார ராகு காலத்தில் துர்க்கையை பூஜித்து, மகிழ்ச்சியான முகத்துடனும், நிறைந்தனத்துடனும் விளங்குவதால் தான் மங்கள வார ராகு காலத்தில் துர்க்கையைப் பூஜை செய்ய வேண்டுமென்று சித்தர்கள் சொல்கிறார்கள்.

குறிப்பாக ராகு காலப் பிரீத்தி, செவ்வாய் தோஷ நிவர்த்தி, விவாகப் பிராப்தி, பீடைகள் விலகுதல், பகைகள் நீங்குதல், காரிய சித்தி ஆகிய நோக்கங்களுக்காக இப்பூஜை மேற்கொள்வது நல்லது. ராகு காலத்தில் திருக்கோயில்களுக்கு சென்று அங்குள்ள துர்க்காதேவியை வழிபடுவது சிறப்பு. நல்ல மஞ்சள் நிறத்துடன் கூடிய எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி இரு கிண்ணங்களாளகவும் எதிர்பபுறம் மடக்கி குழியாக்கி அவற்றை திரி விளக்குகளாக பயன்படுத்த வேண்டும்.

சுத்தமான நல்லெண்ணை, நெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றைத்தான் தீபத்திற்கு பயன்படுத்த வேண்டும் ஆயுள் பலத்துக்காக செய்யப்படும் பூஜையின்போது வேண்டுமானால் இலுப்பை எண்ணெயைப் பயன்படுத்தலாம். ராகு காலத்தில் துர்க்கை சந்நிதியில் சுவாசினியை (முதிய சுமங்கலி பெண்களை) நமஸ்கரிக்கின்றவர்கள், எல்லா நலன்களையும் பெறுவார்கள்.

அங்கு சுவாசினிகளுக்கு தாம்பூலம், தட்சிணையும் வழங்குகிறவர்கள் துர்க்கையின் அருளுக்குப் பாத்திரமாவார்கள். துர்க்கை சந்நிதியில் கன்னிப் பெண்களுக்கு கால்களில் நலங்கிட்டு, கைகளில் வளையலிட்டு, பூச்சூட்டி, புத்தாடை வழங்கிய பூஜிப்பவர்கள் மற்றவர்களால் பூஜிக்க தகுந்த வாழ்க்கையை அடைவார்கள்.

http://www.maalaimalar.com/2015/08/10121304/dosham-clear-rahu-kala-durga-p.html

 
Status
Not open for further replies.
Back
Top