தூர்வா கணபதி விரதம்.

kgopalan

Active member
20-08-2023- தூர்வா கணபதி விரதம்.



சிராவண மாதம் சுக்ல பக்ஷ சதுர்த்தி அன்று தூர்வா கணபதி வ்ருதம்.

இன்று காலை சுத்தமான ஓரிடத்தில் கோலம் போட்டு தரை முழுவதும் அருஹம் பில்லை=(தூர்வை) ..நிறைய பரப்பி அந்த அருகம்புல்லின் மீது கணபதியின் படமோ அல்லது விக்கிரஹமோ வைத்து 16 உபசார பூஜைகளும்



அருகம் புல்லால் செய்யவும். கொப்பரை தேங்காய் அவல் நிவேதனம் செய்யவும் .கற்பூரம் காட்டி நமஸ்கரித்து முடிவில் கீழ் வரும் பத்து நாமாக்களால் அருகம் புல்லால் அர்ச்சனை செய்து கீழ் வரும் ஸ்லோகம் ப்ரார்தித்து கொள்ளவும்.



1. கணபதயே நம: 2. உமாபுத்ராய நம: 3. அகநாசனாய நம: 4. ஏக தந்தாய நம: 5. இபவக்த்ராய நம: 6. மூஷிக வாஹணாய நம: 7. விநாயகாய நம: 8, ஈச புத்ராய நம: : 9. ஸர்வ ஸித்தி ப்ரதாயகாய நம: 10. குமார குரவே நம:



கணேஸ்வர, கணாத்யக்ஷ கெளரீபுத்ர கஜானன வ்ரதம் ஸம்பூர்ணதாம் யாது த்வத் ப்ரஸ்ஸாதாத் இபாநந..



இவ்வாறு இன்று பிள்ளையாரை அறுகம் புல்லால் நியமத்துடன் பூஜிப்பவர்களுக்கு அனைத்து இடையூறுகளும் விலகி அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்
 
Back
Top