தினசரி ஸ்லோகங்கள் (Everyday Slokams)

praveen

Life is a dream
Staff member
தினசரி ஸ்லோகங்கள் (Everyday Slokams)

காலையில் எழும் போது:
அண்ணாமலை எம் அண்ணா போற்றி
கண்ணார் அமுதக் கடலே போற்றி
என சொல்ல வேண்டும். அல்லது ஹரி ஹரி என்று சொல்ல வேண்டும்.

இரு உள்ளங்கைகளைப் பார்த்த வண்ணம்
கராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமத்யே ஸரஸ்வதீ
கரமூலே து கௌரீ ஸ்யாத் ப்ரபாதே.
என்று சொல்ல வேண்டும்.

படுக்கையிலிருந்து தரையில் காலை வைக்கும் முன்:
ஸமுத்ர வஸனே தேவீ பர்வத ஸ்தனமண்டிதே
விஷ்ணுபத்னீ நமஸ்துப்யம் பாதஸ்பர்ஸம் க்ஷமஸ்வமே!

குளிப்பதற்கு முன்:
கங்கே ச யமுனே சைவ கோதாவரீ ஸரஸ்வதீ
நர்மதே ஸிந்து காவேரீ ஜலே(அ)ஸ்மின் ஸன்னிதம் குரு

விளக்கேற்றும் முன் சொல்ல:
சுபம் கரோது கல்யாணம்
ஆரோக்யம் சுக சம்பதம்
மம புத்தி ப்ரகாசாய
தீப ஜ்யோதிர் நமோஸ்துதே!

செல்வம் கிடைக்க:
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் தனநாயிகாயை
ஸ்வர்ணாகர்ஷண தேவ்யாயை
சர்வ தாரித்ரிய நிவாரணாயை
ஓம் ஹ்ரீம் ஸ்வாஹா

கல்விச் செல்வம் இல்லத்தில் நிறைந்திருக்க:
உக்தீத ப்ரணவோத் கீத
ஸர்வ வாகீஸ்வரேஸ்வர
ஸர்வ வேத மயோசிந்த்ய
ஸர்வம் போதய போதய
ஓம் தம் வாகீஸ்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ஸௌ ப்ரசோதயாத்.

நவக்கிரஹ ஸ்துதி:
ஆரோக்யம் ப்ரததாது னோ தினகர:
சந்த்ரம் யசோ நிர்மலம்
பூதிம் பூமிஸுத: ஸுதாம்சு தனய:
ப்ரக்ஞாம் குருர்கௌரவம் கான்ய:
கோமளவாக்விலாஸமதுலம்
மந்தோ முகம் ஸர்வதா
ராஹுர்பலம் விரோத சமனம் கேது:
குலஸ்யோன்னிதம்

அடுப்பு பற்ற வைக்கும் போது:
தீயிடை மூன்றாய் திகழ்ந்தாய் போற்றி

நீர் அருந்தும்போது:
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி

காலை சிற்றுண்டி உண்ணும் போது:
தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி

வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் போது:
காவாய் கனக் குன்றே போற்றி
ஆவா எந்தனுக்கு அருள்வாய் போற்றி

மதியம் சாப்பிடும் போது:
அன்னபூர்ணே ஸதாபூர்ணே
சங்கரப்ராண வல்லபே
ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம்
தேஹி ச பார்வதீ

மாலையில் விளக்கேற்றும் போது:
தீப ஜ்யோதி பரம் பிரம்ம
தீப ஜ்யோதிர் ஜனார்த்தன
தீபோஹரது மே பாபம்
சந்த்யா தீப நமோஸ்துதே

படுப்பதற்கு முன்:
கரசரண க்ருதம் வா காயஜம் கர்மஜம் வா
ச்ரவண நயனஜம் வா மானஸம் வா அபராதம்
விஹிதம வஹிதம் வா ஸர்வமேதத் க்ஷமஸ்வ
சிவசிவ கருணாப்தே ஶ்ரீ மஹாதேவ சம்போ!.

 
Back
Top