• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தமிழில் விளையாடுவோம்!

Status
Not open for further replies.
I know you are in Chennai. What is wrong with Chennai Tamizh? It is just a dialect. Will you object to Madhurai, Kanyakumari and Kovai Tamizh too? I know those dialects are different too...
நண்பரே! கோபம் கொள்ளாதீர்! :nono:

ஒவ்வொரு மாவட்டத் தமிழும் ஒவ்வொரு விதம் என்று அறிவேன். செந்தமிழை வளர்ப்போம்

என்ற நல்ல எண்ணம் எனக்கு! கணினி, மடிக் கணினி, தொலைபேசி, அலை பேசி, பேருந்து,

சிற்றுந்து, தானி (ஆட்டோ), குழுமம், தேநீர், முதியோர் காப்பகம், அடுமனை (பேக்கரி) போன்ற

சொற்களை அனைவரும் புரிந்துகொள்கிறார்களே; இது நல்ல மாற்றம்தானே! :thumb:

'தமிழ் இனி மெல்லச் சாகும்' என்ற பயத்தை இல்லாமல் செய்ய முயலுவோம்! :)
 
நண்பரே! கோபம் கொள்ளாதீர்! :nono:

ஒவ்வொரு மாவட்டத் தமிழும் ஒவ்வொரு விதம் என்று அறிவேன். செந்தமிழை வளர்ப்போம்

என்ற நல்ல எண்ணம் எனக்கு! கணினி, மடிக் கணினி, தொலைபேசி, அலை பேசி, பேருந்து,

சிற்றுந்து, தானி (ஆட்டோ), குழுமம், தேநீர், முதியோர் காப்பகம், அடுமனை (பேக்கரி) போன்ற

சொற்களை அனைவரும் புரிந்துகொள்கிறார்களே; இது நல்ல மாற்றம்தானே! :thumb:

'தமிழ் இனி மெல்லச் சாகும்' என்ற பயத்தை இல்லாமல் செய்ய முயலுவோம்! :)

I don't know why you even think that I am getting angry. I did not say anything anywhere to indicate I was getting angry.

I just wanted to know your views about Chennai Tamizh or Tamizh with different dialects.

I am not likely to post Chennai Thamizh in this thread. So, it doesn't matter to me if you like to keep this thread pure with Senthamizh and grammatical English.

I have no more to say. Thanks for your interaction.
 
தமிழ் ஒரு அழகிய மொழி; ஆனால் குறில், நெடில் வித்தியாசங்கள் அறிதல் வேண்டும்.

அதே போலத்தான் ழகர, லகர, ளகர வேறுபாடுகள்; ரகர, றகர வேறுபாடுகள்; நகர, னகர, ணகர வேறுபாடுகள்!

பழக்கத்தால் அறிந்துகொள்ள வேண்டியவை இவை. நல்ல தமிழ் எழுத இவை தேவை.

தொடரும்...............
 
'கோவலனைக் கொண்டு வா!' என்பதற்கு பதிலாக, 'கோவலனைக் கொன்று வா!' என்று பாண்டிய

மன்னன் வாய் தவறிச் சொல்ல, அதனால் கோவலன் கொலையுண்டான்; மதுரையின் பெரும் பகுதி

எரிந்து சாம்பலானது. இது சிலப்பதிகாரக் கதை.

இப்போதைய கதை என்னவெனில்:

என் இனிய இல்லத்தின் அருகில் உள்ள பள்ளிப் பிள்ளைகள், பாட்டில் இறைவனைக் கொல்லுவார்கள்.

எப்படி?

''தேடித் தேடி எங்கும் ஓடுகிறார் - உன்னைத்
தேடிப் பணிந்து கொல்லலாமே!''

இது 'ப்ரபோ! கணபதே' என்ற பாட்டின் அனுபல்லவி!! :dizzy:
 
விளையாட்டக நான் ஒரு வாக்கியம் அமைத்தேன்!

'அவள் குழவியைக் கொஞ்சிக் குலவினாள்; அப்போது, ஒரு குளவி அவளைக் கொட்டியது!'

'குழவி' என்றால் அம்மியுடன் உள்ளது என எண்ணிய ஒரு நண்பர், 'குழவியை ஏன் கொஞ்சினாள்?', என வியக்க,

'குழவி' என்றால் 'குழந்தை' எனவும் பொருள் உள்ளதென, நான் விளக்கம் அளித்தேன்!
icon3.png


இது நம் இணையதளத்தில் சில ஆண்டுகளுக்கு முன் நடந்தது! :)
 
aanavankattalai, kaathavarayan, gurusishyan, thiruvarutselvar, adimaippen, rudrathandavam, sivaji, kadhalakadhala ,sivandhamann,
thirumalperumai, gulebagavali, nandhanar, thirudathe, panamapaasama, paadhalabairavi bhamavijayam, aaryamaala,, siththi, bairavi, kuruvi
 
நண்பரே! கோபம் கொள்ளாதீர்! :nono:

ஒவ்வொரு மாவட்டத் தமிழும் ஒவ்வொரு விதம் என்று அறிவேன். செந்தமிழை வளர்ப்போம்

என்ற நல்ல எண்ணம் எனக்கு! கணினி, மடிக் கணினி, தொலைபேசி, அலை பேசி, பேருந்து,

சிற்றுந்து, தானி (ஆட்டோ), குழுமம், தேநீர், முதியோர் காப்பகம், அடுமனை (பேக்கரி) போன்ற

சொற்களை அனைவரும் புரிந்துகொள்கிறார்களே; இது நல்ல மாற்றம்தானே! :thumb:

'தமிழ் இனி மெல்லச் சாகும்' என்ற பயத்தை இல்லாமல் செய்ய முயலுவோம்! :)

அம்மணி

நான் கோவையை சேர்ந்தவன்.
அங்கு தமிழ் மிகவும் மரியாதை கலந்த சொற்களை கலந்துதான் பேசுவது வழக்கம் என்பதை தாங்கள் நன்கறிவீர்கள். நா ன் மதுரைக் கல்லூரியில் படிக்க சென்ற போது தான் தமிழில் பல புதிய சொற்களை அறிந்தேன். அன்று அவை வினோதமாக இருந்தது.
பிறகு முதன்முறை சென்னை சென்ற போதுதான் தமிழ் படும் பாட்டை அறிந்தேன். அன்றய காலகட்டத்தில் சென்னை தமிழில் பல சொற்கள் புரியாது அவை தெலுங்கு, உறுது, மற்றும் வேறு சத்தங்கள் கலந்த மணிப்பிரவாளமாக இருக்கும்!
இன்று மிகவும் மாறி விட்டது. ஆனால் மரியாதை குறைந்தே இருக்கிறது.

பள்ளி மற்றும் கல்லூரியில் வடமொழியை எடுத்து படித்த காரணத்தால் ஆழ்ந்த தமிழ் அறிவை அடைய முடியவில்லையே என்ற குறை உண்டு. இந்த குறை போக இந்த பத்து வருஷங்களில் பல தமிழ் புத்தகங்களை படித்து எழுதி செம்மை படுத்த முயற்சித்து வருகிறேன். தமிழ் உயிரூட்டமுள்ள அழகான மொழி. பல நூறு ஆண்டுகளாக மக்கள் வழக்கில் உள்ளதால் அன்றய சொற்கள் இன்று இல்லை. அச்சுக்கலைவந்தபின் பல எழுத்துக்கள் கூட உறு மாறி விட்டன.

தாங்கள் கூறியுள்ளது போல் வட்டார வழக்கில் பேசும் பலர்
மொழி குறில், நெடில் மற்றும் ழகர, லகர, ளகர வேறுபாடுகள்; ரகர, றகர வேறுபாடுகள்; நகர, னகர, ணகர வேறுபாடுகள் அறியாமல் கலந்து பேசுவது கேட்க மிகவும் வருத்தமாக இருக்கிறது.

காலமாற்றத்துக்கேற்ப சொற்கள் மாறுவது அவசியம். தமிழே இதற்கு ஓர் உதாரணம். சங்க கால சொற்கள் மற்றும் அக நானூறு புற நானூறு, திரு க்குறள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் காலத்தில் வழங்கிய சொற்கள் இன்று வழக்கத்தில் இல்லை.

இன்றைய கால கட்டத்தில் பல புதிய பொருட்கள் உபயோகத்திற்கு வந்து விட்டன. அவைகளை மக்கள் அறியும் பெயர்களிலேய பதிவு செய்து கூறி வந்தால் தவறேதுமில்லை என்பது எனது கருத்து. ஒவ்வொரு புதிய சொல்லையும் மொழி பெயர்த்துக்கூறவேண்டியது அவசியமா என யோசிக்கவேண்டும். பல வேற்றுமொழி சொற்கள் இன்றைய வழக்கில் உள்ளன. ஜன்னல் பீரோ ரயில் கார் போன்ற பல சொற்கள் நமது பேச்சில் கலந்து விட்டன.

நல்லதொரு விவாதம், மேலும் தொடரவேண்டும்.

பிரம்மண்யன்
பெங்களூரு.
 
மதிப்பிற்குரிய ப்ரஹ்மண்யன் அவர்களே,

நல்ல தமிழில் எழுதிய தங்கள் பின்னூட்டதிற்கு மிக்க நன்றி! வட்டாரத் தமிழில் புத்தகங்கள் பல பார்த்துள்ளேன்.

சில சொலவடைகள் என்னவென்றே புரியாதும் விழித்திருக்கிறேன். :)

நானும் கோவை மாவட்டத்தின் ஆனைமலை கிராமத்தில் படித்து, கோவைக் கல்லூரியில் முதுகலைப் பட்டம்

பெற்றவள்தான். தந்தை ஆனைமலை மக்களிடம் மிகுந்த மரியாதை பெற்ற, அலோபதி மருத்துவர். சுமார் நாற்பது

ஆண்டுகள் மருத்துவச் சேவை புரிந்தவர் என்பதையும், பெருமையுடன் பதிவு செய்கிறேன். :thumb:

எல்லாச் சொற்களுக்கும் தமிழ் மொழி மாற்றம் தேவையில்லை எனினும், கணினி, மடிக் கணினி, பேருந்து, தானி,

குழுமம், அலைபேசி, தொலைபேசி, நகல் மையம் (Xerox center) போன்ற சொற்கள் வழக்கில் வந்துவிட்டது மகிழ்ச்சி

தருகின்றது. 'அடுமனை' என்ற சொல்லும் கூட, சிங்காரச் சென்னை விளம்பரப் பலகைகளில் வந்துவிட்டன!

அடுமனை = Bakery.
 
என்னைக்கேட்டால் தமிழை முதல் வகுப்பில் கற்றுக்கொடுக்கும் ஆசிரியரை தேர்ந்தெடுப்பதிலேயே மாற்றம் தேவை என்பேன்.

ஒரு நேர்காணலில் அவரை ழகர னகரங்களை உச்சரிக்க்கச்சொல்லி பரீக்ஷிக்கவேண்டும்.

இன்று நாம் காண்பது/கேட்பது:

இன்று = இன்ட்ரு

சென்று = சென்ட்ரு

நின்று = நின்ட்ரு

ழகரமும் ளகரமும் நாக்கை வளைக்க பழக்காமல் போனதால் வசதியாக லகரமாகிப்போயின. கொள்ளலாமே என்பது கொல்லலாமே என்றாகிப்போன கூத்தும், முதல் சுற்று முதல் சுட்ரு வாகிப்போனகோலமும் இந்த வகைப்பட்டது தான்.

இந்த இன்ட்ரு, சென்ட்ரு,நின்ட்ரு, சுட்ரு விஷயம் தான் எப்படி வந்தது என்று எனக்குப்புரியவே இல்லை.
 
Last edited:
பாடல்:
மரமது மரத்தில் ஏறி மரமதினூடே சென்று மரத்தினால் மரத்தைக்கொன்று வளமனைக்கேகும் மரமதைக்கண்ட மாந்தர் மரமொடு மரமேடுத்தார்.

பல கருத்து சொற்கள்:
அரசு= அரச மரம், அரசன்
மா= மாமரம், குதிரை
வேல்= வேலமரம், வேல் ஆயுதம்
வேங்கை= வேங்கை, வேங்கை மரம்
ஆல்= ஆல மரம், ஆலாத்தி
அத்தி= அத்தி மரம்

விளக்கம்:
அரசன் குதிரையில் ஏறி, காட்டின் ஊடு சென்று வேலினால் வேங்கையை கொன்று வளம் பொருந்திய அரண்மனைக்கு ஏகிய போது அரசை கண்ட மக்கள் ஆலாத்தி (ஆல்+அத்தி) எடுத்தனர்.
 
ithu polave kavi kalamegam aalangudi ennum uuril uraiyum iraivanai padia padal

tamil fonts illathathal ingu thanglishil padivu seikiren

aalangudiyanai , aalalam undanai, aalangudiyan enru aar sonnar?
aalanguiyaneyagil kuvalayathorellam madiyaro manmeethile.

meaning
the name of the god in that place is aalangudiyan- meaning the god of aalangudi. another meaning is that a person who did not drink poison ( aalam= aalahala visham) So the poet asks who coined the name aalangudiyan. If he did not drink that poison- aalahala visham, the entire universe might have been extinct due to that poison.

What a wonderful thought and poetic words.
 
...... இந்த இன்ட்ரு, சென்ட்ரு,நின்ட்ரு விஷயம் தான் எப்படி வந்தது என்று எனக்குப்புரியவே இல்லை.
ஒரு வேளை, இவர்கள் ஆங்கில Transliteration போல உச்சரிக்கின்றார்களோ?

indru = இன்று; sendru = சென்று !! ;)
 
'முயற்சி' என்பதை 'முயற்ச்சி' என்றும், 'பயிற்சி' என்பதைப் 'பயிர்ச்சி' என்றும் கூட எழுதுகின்றார்களே! :dizzy:

ஹூம்........ தமிழை நன்கு பேசவும், எழுதவும், சில ஆண்டுகளேனும் உழைக்க வேண்டும்.

என்னை மிகவும் வதைக்கும் விளம்பரப் பலகை: வீட்டு மனைகல் விற்க, வாங்க இங்கு அனுகவும்!!

சில வேடிக்கைகளும் உண்டு. குறுகிய பலகை ஒன்றில் எழுதிய உணவக விளம்பரம் இதோ:

இது
பிராமணர்
கள்
சாப்பிடும்
இடம்.
 
மதிப்பிற்குரிய ப்ரஹ்மண்யன் அவர்களே,

நல்ல தமிழில் எழுதிய தங்கள் பின்னூட்டதிற்கு மிக்க நன்றி! வட்டாரத் தமிழில் புத்தகங்கள் பல பார்த்துள்ளேன்.

சில சொலவடைகள் என்னவென்றே புரியாதும் விழித்திருக்கிறேன். :)

நானும் கோவை மாவட்டத்தின் ஆனைமலை கிராமத்தில் படித்து, கோவைக் கல்லூரியில் முதுகலைப் பட்டம்

பெற்றவள்தான். தந்தை ஆனைமலை மக்களிடம் மிகுந்த மரியாதை பெற்ற, அலோபதி மருத்துவர். சுமார் நாற்பது

ஆண்டுகள் மருத்துவச் சேவை புரிந்தவர் என்பதையும், பெருமையுடன் பதிவு செய்கிறேன். :thumb:

எல்லாச் சொற்களுக்கும் தமிழ் மொழி மாற்றம் தேவையில்லை எனினும், கணினி, மடிக் கணினி, பேருந்து, தானி,

குழுமம், அலைபேசி, தொலைபேசி, நகல் மையம் (Xerox center) போன்ற சொற்கள் வழக்கில் வந்துவிட்டது மகிழ்ச்சி

தருகின்றது. 'அடுமனை' என்ற சொல்லும் கூட, சிங்காரச் சென்னை விளம்பரப் பலகைகளில் வந்துவிட்டன!

அடுமனை = Bakery.
எனது மதிப்புக்குறிய அம்மணி,
தாங்கள் கூறுவது யாவும் உண்மையே. ஆனால் பெயர்ச்சொல்லை மொழிபெயர்த்து எழுத வேண்டுமா என்ற வினா எனது மனதில் எழுகிறது. தமிழில் பல வேற்று மொழி சொற்களை ஏற்றுக் கொண்டிருக்கிறோமே.பலரது பெயர்கள்வடமொழியிலிருந்து வந்தவைதான். நமது திரு க்கோயில்களில்தான் அங்குள்ள தெய்வத்தின் பெயரை இரு மொழிகளிலும் கூறுவர். இந்த மாறுதல் சைவ வைணவ மறுமலர்ச்சிகாலத்தில், தீவிர மாக இருந்தது. பிறகு திராவிடர் கழக ஆட்சியில்த் தான் வேகமாகியது. ஆனால் பல புதிய மொழிபெயர்ப்பு சொற்கள் பெயர் மற்றும் விளம்பர பலகையுடன் நின்று விட்டன என்பதே உண்மை. ஆந்திரத்திலும்,கர்நாடகத்திலும் வைணவ வேதமாகிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தெலுங்கு மற்றும் கன்னட மொழியிலேயே எழுதி படிக்கின்றர். அவை "திராவிட மொழி" யில் இருப்பதாக கூறுவார்கள்.
மலயாளத்தில் பல நல்ல பழைய தமிழ் சொற்கள் இன்றும் உபயோகத்தில் உள்ளன. அதேபோல கன்னட மொழியிலும் சில நல்ல தமிழ் சொற்களை கேட்டு இருக்கிறேன்.

நான் அறிந்த வரை இலங்கை ஈழநாட்டில் வழங்கும் தமிழ் பண்டைய தமிழ் என்று கூறலா ம்.

பிரஹ்மண்யன்
பெங்களூரு.
 
thanks for very interesting debates. As tamil has only one கசடதப instead of 4, the pronunciation for the words is funny.
example for luggage they say lukkage, for gramam they say kramam as they read the words in tamil. since they are not aware in sanskrit and other languages it is different
 
இலங்கைத் தமிழ்!!

ஒரு முறை தீவிர தமிழ் விரும்பியான ஓர் இலங்கைத் தமிழர், ஆட்டோ ஓட்டுனரிடம், 'ஆகாயக் கப்பல் நிலையம்

செல்ல வேண்டும்' என்று உரைத்து வண்டியில் ஏற, ஓட்டுனரோ கப்பல் ஹார்பரில்தானே இருக்கும் என எண்ணி,

சென்னைத் துறைமுகத்திற்குக் கூட்டிச் செல்ல, பெரிய தகறாரே வந்துவிட்டதாம்! :)
 
க, ட, த, ப ஆகிய எழுத்துக்களில் நான்கு வேறுபாடுகள் இல்லாததால் வரும் தொல்லைகள் சில:

PadmA, BathmA ஆவாள். kOti, kOdi ஆகும்.

' kOdi' என்றால் தெலுங்கில் 'கோழி' என்று அர்த்தம்.

'kOdi namaskAram' என்றால் அவர்கள் சிரிப்பார்கள்!!
wink-new.png
 
க, ட, த, ப ஆகிய எழுத்துக்களில் நான்கு வேறுபாடுகள் இல்லாததால் வரும் தொல்லைகள் சில:

PadmA, BathmA ஆவாள். kOti, kOdi ஆகும்.

' kOdi' என்றால் தெலுங்கில் 'கோழி' என்று அர்த்தம்.

'kOdi namaskAram' என்றால் அவர்கள் சிரிப்பார்கள்!!
wink-new.png
ha ha other languages have funny meaning. i read sometime back that if you do telugu pani in tamil pani, you will get malayala pani
here pani is பனி
 
There is no problem with Tamil as such. As a language it is an ancient language-as old as Sanskrit-and is one of the very fine languages in the world. It's treasure of literature will be the envy of any other language.

When we landed in the Heathrow Airport, the person in the immigration counter called out my wife's name as well as my name in a funny way. For a few minutes we could not even make out that it is we whom he is calling. After three calls the intuition gave a prod and we went to the counter. He was used to only English and for him a name in Sanskrit was from Martian origins. The name Padma becoming Bathma, koti becoming kodi all fall in this category.

I have heared many educated people saying this. That Tamil language is deficient in representing the range of sounds fully as Sanskrit and so phonetically it is primitive. And I always contest this. They have never cared to look a little deep to understand Tamil first.

We can categorise the problem into two.

1) One when you have to pronounce and spell words in other languages. This is a problem common to every language as I explained in the beginning of this post. For an Englishman Padma becomes Pad ma. And with his stress on plosives in a way different from what we are used to with English in India, even English words when they are pronounced by him become alien to us because of the peculiarity of the accent. So we can conclude that the words from other languages will not be spelt or pronounced in Tamil the same way as that of the natives of those lands. and naturally Tamils can not be an exception. As people get used to the word they either reach perfection or Tamilise it and use it. It is understood well and that is what matters in communication. So an unreasonable comparison of languages is uncalled for.

In Urdu there is a word gham meaning கஷ்ட்டம்/துன்பம். For those who are not familiar with this word please listen to the song Jaane woh kaise ..........in the film Pyaasa--an old movie. The song goes on to say "gham se ab ghabraanaa kaisa gham sow bhaar mila"..... Now this word gham is pronounced in a particular way in Urdu. It is neither ham, nor gam nor even gham. The way it is pronounced can not be put down in writing. It has to be learnt from a person who knows Urdu. And the beauty is that this sound that represents this letter "gha" in Urdu is never found represented in any other language. So whenever this word கஷ்ட்டம்/துன்பம் - Gham is written down or spoken in any other language it is always misspelt, mispronounced and reveals that the person is not from Urdu speaking background.

2) Now taking Tamil, it is not correct to say Tamil does not distinguish phonetically the க, ச, ட, த, ப and ர while using in words and sentences and so the language is incomplete when compared to Sanskrit. In Tamil there are gammar rules which take care of the phonetic needs. Thus when we write,

இறைவன் அங்கும் இங்கும் எங்கும் இருக்கிறான்.

we do not read it out as Iraivan ankkum, inkkum enkkum irukkiRaan as க is a வல்லின எழுத்து-a guttural plosive in phonetics. We say angum, ingum and engum.

Similarly when we say அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே

we do not read it as aval paranththu pOnaalE ennai maranththu pOnaalE etc.,

In several such instances the sounds get qualified to come with appropriate phonetics. That is because there are clear grammar rules for this in Tamil. What has been achieved in other languages by a surfeit of letters is achieved by rules of phonetics in grammar by Tamil. In English they achieve this by combination of alphabets.

In the above two examples the வல்லின க and வல்லின த are modified to nasals from being strictly gutturals because there is a rule of grammar.

In practice we never realise this and we happily use the language correctly without being conscious of this rule.

And the language English is not perfect that way if we apply this inability to represent all phonetic sounds because it is not able to represent ழ of Tamil, the gha of Urdu (gham-துன்பம்) and who knows what other sound represented in other languages.

What matters ultimately is communication. Have I communicated my thoughts to you clearly in this post? LOL.
 
தமிழைக் கசடறக் கற்க நிறைய முயற்சி தேவை! இந்த மொழி எளிதே அல்ல!! :)

ஒரு உதாரணம் கூறுகிறேன்:

ஒரு ஐந்து வயது பாலகனுக்குத் தமிழ் எழுத்துக்களைக் கற்றுக் கொடுக்க முயன்றேன். அவன் படு சுட்டி.

ஒரு வாரத்தில் அத்தனை எழுத்துக்களையும் படிக்க ஆரம்பித்துவிட்டான்! எனக்கோ அளவிலா ஆனந்தம்!

''கண்ணா! ஒரு சொல்லை எழுதறேன்; அதைப் படி. இப்போ நான் சொன்னதிலே ஒரு சொல்தான் அது!''

என்று உரைக்க, சரியென்றான்! நான் எழுதியது 'படி' என்ற சொல். அவன் படித்தான்: Ba ...ti ... Bati!! :dizzy:
 
தமிழைக் கசடறக் கற்க நிறைய முயற்சி தேவை! இந்த மொழி எளிதே அல்ல!! :)

ஒரு உதாரணம் கூறுகிறேன்:

ஒரு ஐந்து வயது பாலகனுக்குத் தமிழ் எழுத்துக்களைக் கற்றுக் கொடுக்க முயன்றேன். அவன் படு சுட்டி.

ஒரு வாரத்தில் அத்தனை எழுத்துக்களையும் படிக்க ஆரம்பித்துவிட்டான்! எனக்கோ அளவிலா ஆனந்தம்!

''கண்ணா! ஒரு சொல்லை எழுதறேன்; அதைப் படி. இப்போ நான் சொன்னதிலே ஒரு சொல்தான் அது!''

என்று உரைக்க, சரியென்றான்! நான் எழுதியது 'படி' என்ற சொல். அவன் படித்தான்: Ba ...ti ... Bati!! :dizzy:

ஐந்து வயதில் எழுத்துக்களை முதலில் படித்தால் போதும். எழுத்துக்கூட்டி படிப்பது என்பது அடுத்த நிலை. எனவே அந்தப்பாலகனை குற்றம் சொல்வதற்கில்லை.

அவனுக்கு எழுத்தின் வகைகளை படிப்பிக்கும்போது-வல்லின மெல்லின இடையினங்களைப்பற்றி விளக்கும் போது அவன் மனதில் இந்த வல்லின பகரம் மெல்லின ஓசையுடன் வரும் இடங்களைப்பற்றிய ஏற்கெனவே எழுந்திருக்கும் ஐயமாக இது வெளிப்படும். அப்போது நாம் இலக்கணத்தில் இருக்கும் சூத்திரத்தை அவனுக்கு விளக்கினால் போதும்.

வல்லின க ச ட த ப எழுத்துக்கள் அவற்றின் முன் மெல்லின ங ஞ ண ந ம ன வோடு வந்தால் அவை (வல்லினங்கள்) மெல்லின ஓசையுடன் பேசவும் படிக்கவும் படும் என்பது இலக்கணம்.

எனவே இஞ்சி என்பது inji தான். inchi அல்ல. பஞ்சு panju தான் panchu அல்ல.
வங்காளம் vangaalam தான். vankaalam அல்ல. பங்கு pangu தான் panku அல்ல.
அண்டம் andam தான் antam அல்ல. ...................இப்படியே ஒவ்வொன்றும்.

பிரச்னை என்னவென்றால் இதை தமிழாசிரியர்கள் கூட கற்றுக்கொடுப்பதில்லை.
 
Roja ராேசாதான்- ராேஜா இல்லை Raja ராசாதான் - ராஜா இல்லை சங்கம் வளர்த்த தெ (தே )ன் தமிழ் நாட்டில்!
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top