• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தமிழனின் அடையாளங்களை தேடும் முயற்சியில&#

Status
Not open for further replies.
தமிழனின் அடையாளங்களை தேடும் முயற்சியில&#

"ஏன்டா, ஆயிரந்தான் இருந்தாலும் பொம்பளப் புள்ளைய
கை நீட்டி அடிக்கிறியே, வெக்கமாயில்ல? "
என பெண்ணுரிமைக்கு முன்னுரிமை கொடுக்கும் .........
யார் இவர்கள்.....????

"இன்னம் ஒரு மழை இருந்தா நவத்தாவயலை
பொறக்கிபுடலாம், ஹ்ம்ம் .. கூத்தாடிக் கருப்பா
மழய கொண்டந்திருப்பா " என கடவுளிடம்
விண்ணப்பம் தொடுக்கும் ...........
யார் இவர்கள்.....????

" என்னது, பாராளுமன்றத்தையே ஒத்தி
வசுட்டாங்கேளா, ப்ச், அத இன்னி எப்ப திருப்ப "
என நையாண்டி கலந்து தற்கால
அரசியலை அலைக்கழிக்கும் ...............
யார் இவர்கள் ....????

பிள்ளைப் பேற்றுள்ள வீட்டில்,
கணவனை அழைத்து
"கெணத்து தண்ணிய ஒன்னும்
ஆத்து வெள்ளம் அடிச்சுக்கிட்டு போய்டாது,
வெரதம்னு வெளி வேலைய பாரு" என்று
நாசூக்காக மருத்துவபதேசம் செய்யும் .....
யார் இவர்கள்......??????

பத்திரிக்கை சச்சரவில், கூட பிறந்தவனை புகுந்தவீட்டில்
தொலைத்துவிட்டு, பாக்கு வைக்க கண்ணைக் கசக்கும்
தமக்கையிடம் "யாத்தா, பேப்பர்ல போட்டாதான் தெரியுமா ?, நீ பாட்டுக்க எதையும் நெனைக்காம போ தாயீ, நான் வந்தர்றேன்" என
உறவுகளின் பந்தத்தை கொணரும் ..........
யார் இவர்கள்....??????

காப்புக் கட்டி கண்ணியமாய் திருவிழா நடத்தி
அதில் " சாமிய பாக்கவாப்பா இந்த கூத்து,விருந்தெல்லாம்??
அட அதுல்லப்பா, பிரிஞ்சு கெடக்குற எல்லாரும் இந்த கோயில்
வாசல்ல ஒன்னு கூடத்தான்டாம்பி " என ஒற்றுமைக்கு
பாலங்களாயிருக்கும் ...........
யார் இவர்கள் ......?????

"நல்லதுக்கு நாங்கள் இல்லைனாலும் ,
துக்கச் சம்பவத்துக்கு நாங்கள் இருக்கிறோம் என
தவறிய வீட்டில், தவறாமல் கைகொடுக்க
இருக்கும் பங்காளிமார்கள் கூட்டம் ........
யார் இவர்கள் ..... ????


சொல்லுகிறேன்....





இவர்கள் ....
மெத்தப் படித்த அதிகார வர்க்கங்களால்
"கைநாட்டுக்காரன்"
"பத்தாம் பசலி"
"பட்டிக்காட்டான்"
"ஏதுமறியாதவன்"
என முத்திரை குத்தப்பட்டவர்கள்.....


வாழ்வியல் முறைகளை, அதன் நுணுக்கங்களை
அறியாமையின்
ஊடலாக சொல்லிக் கொடுக்கும் இவர்கள்...
நாட்டை வாழவைக்கும் கிராமங்களில் ....

வெள்ளை வேட்டி, இடுப்பில் அரைஞான் கயிறு,
கொசுவம் வைத்த சேலை ,
மருதாணி விரல்கள் , பூவில் இழையும் கூந்தல் என
தொலைக்கப் பட்டுக்கொண்டிருக்கும் தமிழனின்
மரபு அடையாளங்களை கட்டிக்காக்கும்
இவர்கள்... என் மனிதர்கள் .....!!!!

அவற்றை ...

அனைத்தையும்
அருகிலிருந்து
கண்டவன்,

அவர்களோடு வாழ்ந்து
உணர்ந்துகொண்டிருப்பவன்
என்ற முறையிலும்.....

இங்கே உங்களுக்கு முன்னால்
பதிவு செய்கையில்
மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் .....
மன்னித்துவிடுங்கள் என்னை, யாதேனும்
தவறாய்ச் சொல்லியிருந்தால் .....

நன்றிகளுடன்
அசோக்
 
[h=2]காதலில் அழகு : பெண்கள் !!![/h]
அவளின் காதல் என் காதலை விட அழகுதான்....!!!

என் கைகோர்த்து நடக்க ....
என் மடிசாய்ந்து உறங்க ....
என்னுடன் மனம் விட்டு பேச ...
இப்படி கணக்கில்லா ஆசைகள் இருந்தும்
என்னருகில் இருக்கும் பொழுது
யாதும் அறியாதவளாய் என்னை
மௌனத்துடன் இம்சிக்கும் அழகு !!!
அவளின் காதல் என் காதலை விட அழகுதான்....!!!

தொடக்கத்தில் ஒரு வார்த்தையாவது பேசமாட்டாளா
என்று ஏங்கிய என்னை...
இன்று....
அவளின் துறு துறு பேச்சுக்களில் கொள்ளை கொள்ளும் அழகில் !!!
அவளின் காதல் என் காதலை விட அழகுதான்....

தலைவலி என சிறு பொய்யை சொல்லி
அவளின் ஆத்மார்த்தமான அன்பு மழையில்
நனையும் பொழுது ....
அவளின் காதல் என் காதலை விட அழகுதான்....

அலைபேசியில் ஆயிரம் முத்தங்கள் கொடுத்துவிட்டு
நேரில் ஒரு முத்தத்திற்கு எனை தவிக்கவிடும்
அவளின் காதல் என் காதலை விட அழகுதான்....!!!!

யாரேனும் என்னை தவறாக பேசியபொழுது
அமைதிகாப்பவள் ... பின்னர் தனிமையில்
அவள் என்னை கடியும் அக்கறையில்.....
அவளின் காதல் என் காதலை விட அழகுதான்....

பிறந்தநாள் பரிசுகளாக அவள் விருப்பத்தில்
டைரி மில்க் சாக்லேட்டும் ஒரு கிரீட்டிங் கார்டு என
என் செலவை சிக்கனத்தில் முடிக்கும்
அவளின் காதல் என் காதலை விட அழகுதான்.... !!!

உறவுகளிடம் பகிர்ந்து கொள்ள முடியாத பல விஷயங்களை
நாணத்துடன் என்னிடம் தனிமையில் உறவாடும் அவள் பரிவில்
அவளின் காதல் என் காதலை விட அழகுதான்....!!!

செல்ல மொழி பேசி அழைக்கச் சொல்லி அவளிடம்
கெஞ்சும் பொழுது என்னுடன் பிடிவாதம் இருந்து மறுப்பவள்
ஊடல்களின் விளிம்பில் அவள் அழைக்கும் மழலை
மொழியின் வனப்பில் ....
அவளின் காதல் என் காதலை விட அழகுதான்....!!!!

அலுவலகம் விட்டு திரும்பி அவளின் யாழிசை போன்ற
குரலுக்காக எதிர்பார்க்கும் நொடிகளிலும் சரி,
பெற்றோருக்கு பயந்து , எனதன்புக்கு அடிமையாய்
அவள் பேசும் ஈனஸ்வர காதல் மொழிகளும் சரி ...
அவளின் காதல் என் காதலை விட அழகுதான்....!!!!!

ஆயிரம் உறவுகளை காதலுக்காக தூக்கி எறியும் போதும்
அல்லது உறவுகளுக்காக காதலை தூக்கி எறியும் போதும்
தளராமல் அன்றாட வாழ்வியலை புரிந்த நேர்த்தியில்...
அவளின் காதல் என் காதலை விட அழகுதான்....!!!!!

சுதந்திரமான இந்த காதல் வானில், சிறகொடிந்த
பெண் பறவைகளே அதிகம் என்பேன்...
ஆம் !!!
கணவன் ஒருவன் ...!!
காதலன் ஒருவன் ....!!
என நரக வாழ்கையில் வாழும் அவளின்
பரிசுத்தமான அன்பில் ...!!
அவளின் காதல் என் காதலை விட அழகுதான்....!!!!!


நன்றிகளுடன் ....
அசோக்

 
ஸ்பரிசம் !!!

ஸ்பரிசம் !!!

பூந்தோட்டமாய் பூத்த உன் நினைவுகளின் வாசம் வீசும்
போதெல்லாம் வசப்பட ஏங்குதடா என் இதயம் ... !!!
மொத்தமாய் தந்த உறவுக்கு தவணை முறையில்
தார்மீக உறவைத் தருகின்றாய் ....!!!

அதிகாலை குளித்து நுனிக் கூந்தல் முடித்து ...
அரை முழம் மல்லிகை சூடி ஆண்டவனை
தொழும்போது வெட்கமாய் வந்தெதிரே நிற்கின்றாய் ..!!!!


வேண்ட நினைத்த மனதை வேட்கைக்கு தள்ளுகிறாய் ....!!!
விழியீர்ப்புக்கு முன் புவியீர்ப்பு என்ன செய்து விடும் ....???!!
வந்தே வீழ்ந்திடுவேன் உந்தன் மார்பில் ....!!!
அன்றாடம் உனக்கேங்கும் எனக்கு
அத்தி பூத்தாற்போல் விருந்தோம்பல் ...!!!

விரல் வந்து தொடு முன்னே வெட்க விதை எனக்குள்
முளைத்துவிட ... தலை கவிழ்ந்தே இருக்கின்றேன் ...!!!
உன் அழகு முகம் காண கோடி ஆசை இருந்தும்....!!!

நீ எந்தன் இதழ் பற்றி நீந்திய பொழுதும் உன் உயிர் கடலில்
மூழ்கி போவேன் ... வியர்வையில் குளிப்பாட்டி என் வேட்கை
அணைத்திடுவாய் ....

வேள்விகள் எல்லாம் வதையாகும்
நாவின் ஈரம் வற்ற
வெற்றுடல்களின் வேதனை தீர ...
மயக்கம் தெளியாது உந்தன் மார்பில்
சாய்ந்திடும் சுகம் இனியொருமுறை
பெற்றிட இன்னும் எத்தனை திங்களாகும் .....!!!

காத்திருக்கிறேன் உன் ஸ்பரிசத்துக்காக ....

ஏக்கத்தின் எழுத்துக்களில் ....
இங்கு நான் ..!!!
அங்கு நீ ....!!!

 
Last edited:
அம்மா... எழுத வார்த்தைகள் இல்லாமல் .....!!!!

அன்னையை பிரிந்து வேலைக்காக ஊர் விட்டு ஊர் வந்த ஒருவன், பகிர்ந்து கொண்ட வலியுடன் எனதையும் செர்த்தேழுதுகிறேன் !!!


அம்மா...!!!!
எழுத வார்த்தைகள் இல்லாமல்
தொடங்குகிறேன்...!!

பருவம் வரை பக்குவமாய்
வளர்த்து விட்டாயே

ஊர் சண்டை இழுத்து வந்தாலும்
உத்தமன் என் பிள்ளை என்று
விட்டு கொடுக்காமல் பேசுவாயே!!!


அம்மா..!!

நீ சொன்ன வேலைகளை விளையாட்டாய்
தட்டி சென்ற நாட்கள்..!!

செல்லம், தங்கம், "மளிகை கடைக்கு "
போய்வா என நீ சொல்ல
இந்த வயதில் கடைக்கு போவதா?.. போம்மா
என நான் சொன்னேன்..!!

அம்மா !!

இன்றோ..
இங்கே கண்ணுக்கு தெரியாத
யாரோ ஒருவருக்காக ஓயாமல்
வேலை செய்கிறேன் அம்மா..!!

நெற்றி வியர்வை சிந்த பரிமாறும்
உந்தன் கை பக்குவ உணவு
நான் அறிந்த அமுதத்தின் அசல்தான்.
இருந்தும் தவறவிட்ட பல நாட்கள்..!!

கண்ணு "பத்து நிமிஷம்" பொறுத்துக்கோடா
சூடா சாப்பிட்டுட்டு போய்டலாம் என நீ சொல்ல
பத்து நிமிடமா ..!, நான் வெளியில
சாப்பிட்டு கொள்கிறேன் என சொல்லி
நான் கிளம்பிய தருணங்கள்..!!

இன்றோ..
இங்கே உப்பு.,சப்பில்லா சாப்பாடு
சாப்பிடும் போதே கண்கள் கலங்க!!!

இன்று காரம் கொஞ்சம் அதிகம்
போய்விட்டது என கடைக்காரர்
சொல்ல..!!

எனக்கு மட்டும் தெரிந்த
உண்மை..!!

பாசமுடன் நீ அளித்த உந்தன்
ஒற்றை பிடி சோற்றுக்காக இப்போது
ஏங்குகிறேன் அம்மா..!!

அன்றைய பொழுதில் சுற்றி திரிந்த நாட்கள்
வறண்ட தலை முடியில் வலுக்கட்டாயமாய்
தடவி விடும் எண்ணெய் துளிகள்
வேண்டா வெறுப்பாய் நிற்கும்
நான்..!!

இன்றும்
என் தலை முடி சகாராதான் அம்மா
உந்தன் கை ஒற்றை எண்ணெய்
துளிக்காக ஏங்கி நிற்கிறது..!!

ஆசையால்..
மழையில் நனைந்து வர
முணுமுணுத்தபடி துடைப்பாய்
உந்தன் முந்தானையில்

இப்போது நனைகிறேன்
ஆசையால் அல்ல, ஏக்கத்தால்..,

அத்தி பூக்கும் தருணமாய்..!
என்றாவது ஒருநாள் என்னை
திட்டும் நீ..! அந்த நொடியில்
எதிர்த்து பேசினேனே அம்மா..!!

இன்றோ..
இங்கே உயர் அதிகாரி திட்ட
சுரணை இல்லாத கல்லாய் நிற்கிறேனே
அம்மா..!!


என்னை மன்னித்துவிடேன் அம்மா..!!

உனக்காக, தேடி திரிந்து பார்த்து,
பார்த்து வாங்கிய புடைவையை பற்றி
சொல்வதற்கு முன் உன் வார்த்தைகள்
வருமே..! கண்ணு உனக்காக
ஒரு சட்டை வாங்கிருக்கேன் வரும்போது
எடுத்துகிட்டு போடா என்று..!!

எப்படி அம்மா சொல்வேன் எந்தன்
அன்பையும் , ஏக்கத்தையும் !!

என் ஏக்கங்களை சொல்ல துடிக்க...
கைபேசியை எடுத்து , அம்மா....என்று
சொல்லும் நொடிகனத்தில் மாறுகின்றது
எந்தன் வார்த்தைகள்., நான் இங்கு
நலமாய் இருக்கேன்..!நீ எப்படியம்மா
இருக்க..!!!

என் அன்னை ஆயிற்றே...
என் ஒற்றை வார்த்தையில்
புரிந்து கொள்வாய் எந்தன்
மனதை..!!

நான் சொல்ல மறந்த வார்த்தைகளை
பக்குவமாய் பட்டியளிடுவாய்..,
"வேலைக்கு ஒழுங்கா சாப்பிடப்பா"
"மறக்காம எண்ண தேச்சி குளிடா"
"ரோட்ல பத்திரமா பாத்து போடா"
" உடம்ப பாத்துக்கோடா தங்கம் "

என் கண்கள் கட்டுபடுத்திக் கொண்டாலும்
என் இதையம் மட்டும் கதறி அழுகிறதே
அம்மா..!!

உன்னை என்னிடம் இருந்து பிரித்த
இந்த வாழ்க்கையை திட்டுவதா..?
இல்லை..
உந்தன் மேல் நான் வைத்திருக்கும்
பாசத்தை காட்டியதற்கு நன்றி சொல்வதா.?

தெரியவில்லையே அம்மா..!!

உனக்காக உயிரற்ற பொருட்களால்
அன்பு சின்னம் அமைத்து என்ன
பயன்..!!

உதிரம் என்னும் பசை தடவி
எலும்பு என்னும் கற்கள் அடுக்கி
உன் அன்பின் சின்னமாய் இருப்பேன்
அம்மா என்றும் உந்தன்
காலடியில்...!!!
 

Attachments

Kaathal

இன்று -

கடற்கரைகளும்

குளிரூட்டப்பட்ட

கண்ணாடி அறைகளும்

காதலுக்கு

வைக்கின்றன விலை!

பெற்றோர் நெஞ்சுக்கு

வைக்கின்றன உலை!

******************

முதலாண்டுக் காதல்

கல்லூரியில்!

மூன்றாமாண்டுக் காதல்

கச்சேரியில் !

*****************

முளையிலே வந்த

பிஞ்சுக் காதல்

மனதுக்குள்

முளை விடுவதற்கு

முன்னாலேயே

கருவறைக்குள்!

**********************

தலைவன்

இவன்தானென்று

நிச்சயித்து -

வெட்கத்தில்

நிலம் பார்த்து -

தன் நிழல் பார்த்து- அதில்

அவன் அகம் பார்த்து -

மணமேடை வரும்

நாள் பார்த்து -

நாணிக்கிடந்து -

நாயகன்

முகம் பார்க்க

நாயகி மனம்

பூத்துக் கிடந்தால் - அது

புனிதக் காதல்!

மற்றவையெல்லாம்

போலிக் காதல்!

*****************************

காதல் -

சுவனத்தின் இறக்குமதி !

ஆதம்
ஏவாள்தான்
முதல் காதலர்கள்!

************

அங்கேயும்

சாத்தானின்

வானரச் சேனை

காதலர்களை விரட்டியது!

வானவர் சேனைதான்

வாழ்த்தியது!

***************

காதலுக்காகத்தான்

வானமே

கொஞ்சம் வழி விட்டது!

***************

ஆதமும்
ஏவாளும்

ஆடையை மறந்து வந்தார்கள்

ஆசையை சுமந்து வந்தார்கள்!

**************

அன்றுதான்

முதல்

காதலர் தினம்!

*************

சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதை

சொப்பனத்திலும் தேடுவது

காதல்!

******************

நோகாத இடியும்

கருகாத மின்னலும்

குடை பிடிக்காத மழையும்

மனசுக்குள்

நாளெல்லாம் தருவது

காதல்!

******************

நோய் வந்தாலும்

பாயில் படுக்க விடாத

துன்பம்

காதல்!

*****************

நோயும் அதுதான்

மருந்தும் அதுதான்

மருத்துவன்

இறைவன்!

******************

உப்பில்லாத உணவைப் போன்றது

காதலில்லாத வாழ்க்கை!

உயிரில்லாத உடலைப் போன்றது

காதல் இல்லாத மனசு !

****************

நெருப்பின்

ஒரு துளிப் பொறியைப்போல

காதல் மனதைப்

பற்றிக் கொள்ளும் !

காலம் முழுதும்

அதுவே

குடும்ப வாழ்க்கையாய்

பற்றுதல் கொள்ளும் !

********************

காதலுக்கும் உண்டு வாசம்

அது -

தான் நேசிக்கும்

உயிரோடு மட்டுமே பேசும் !

******************

காதல்-

காலங்களானாலும்

காத்திருக்கும்

கடல் கடந்து சென்ற

கணவனின்

காதலுக்காக!

*****************

காதல்-

தன்னையே பிழிந்து

தாயாகி

தவமிருக்கும்

தலைவன் தந்த

உயிர் காவியங்களுக்காக !

******************

காதல் -

தேகத்தில் மட்டுமல்ல

தியாகத்திலும் என்பதை

பிரிவுத் துயர் விழுங்கி

வாழ்ந்து காட்டும்!

*******************

காதல் -

கண்ணீரில் நனைந்தாலும்

சாயம் வெளுக்காத

வெண்மை!

எரி நீரிலிட்டாலும்

குணம் குன்றாதத்

தங்கம்!

*********************

காதல் -

கொண்டவனேயன்றி

கண்டவனையும்

கண்கொண்டுக் காண விடாத

கடிவாளப் புரவி!

**********************

காதல் -

மனங்களின் தவம்

இறைவன் தந்த வரம்!

*******************

காதல் -

மனிதம் இருக்கும்

மனங்களில்

வாழும் புனிதம்!

ஆதலினால் மானிடரே

காதலிப்போம் -

காதலை !!!!

 
"கண்ணீரில் நனைந்தாலும் சாயம் வெளுக்காதவெண்மை!

எரி நீரிலிட்டாலும்
குணம் குன்றாத தங்கம்!"


வெண்மை என்பதே வேறு நிறம் (சாயம்) இன்மை.

அது எப்படிச் சாயம் வெளுக்கும்???

எரி நீர் = சுடு நீர் என்றால் தங்கத்தின்

உருகும் நிலை மிகவும் அதிகம் அல்லவா?



 
"கண்ணீரில் நனைந்தாலும் சாயம் வெளுக்காத வெண்மை!

எரி நீரிலிட்டாலும்
குணம் குன்றாத தங்கம்!"


வெண்மை என்பதே வேறு நிறம் (சாயம்) இன்மை. அது எப்படிச் சாயம் வெளுக்கும்???

எரி நீர் = சுடு நீர் ... தங்கத்தின் உருகும் நிலை மிகவும் அதிகம் அல்லவா?

காதலின் பசுமை என்றும் குன்றக் கூடாது!

எனவே 'வெண்மை'யைப் 'பசுமை' என மாற்றலாம்!

எரி நீர், எரி தணலைவிட உஷ்ணம் குறைவு;

'எரி நீர்' என்பதை 'எரி தணலாக' மாற்றலாம்!


My two cents!! :D
 
சரி தோழிகளே....!!!!

மாற்றி வைத்துக் கொள்வோம் ...

ஐயையே! நல்லாவே இல்லையே!

திருத்தம் சொன்னாக் கோபிக்கணும்! :mad:

ஒத்தைக்கு ஒத்தை சண்டை போடணும்! :fencing:

"நான்தான் சரி!"ன்னு மல்லுக்கு நிக்கணும்! :argue:

அப்போத்தானே காரசாரமா ருசியா இருக்கும்!
:rolleyes:
 
தேவதைகளே !!!
சண்டை என்பது எனக்கு பிடிக்காத ஒரு விஷயம்.... காரணம் அலுவலகங்களில் சண்டை போட்டு போட்டு வெறுத்துப் போய்தான் இந்த வலைத்தளத்தில் காலடி எடுத்து வைத்தேன்...!!!

இங்கேயும் ஒரு சண்டையா !!! ஐய்யோ !! வேண்டாம் விடுங்கள் !!!


"
காதல் -


கண்ணீரில் நனைந்தாலும்

சாயம் வெளுக்காத

வெண்மை!

எரி நீரிலிட்டாலும்

குணம் குன்றாதத்

தங்கம்!"



வெண்மை என்பதும் ஒரு நிறம்தான் !!! நீங்கள் ஒன்று செய்யுங்கள் " எதாவது ஒரு வெண்மையான ஒரு துணியை எடுத்து உப்பு நீரில் போட்டு வையுங்கள் " சிறிது நாட்களில் அதன் வெண்மை குறையும்..கண்ணீர் என்பதும் உப்பு நீரும் ஒன்றுதானே !!!!

எரி நீர் என்பது சுடு தண்ணீர், ஆனால் இரும்பையோ அல்லது செம்பு உலோகத்தை சுடு தண்ணீரில் போட்டால் அதன் தன்மை மாறிவிடும் !!! அவ்வாறு மாறாத தன்மை காதலுக்கும் உண்டு ....

வாங்கோ சண்டை ஆரம்பிக்கலாம் !!!

அடுத்த கவிதை விரைவில் ....!!!

:)
 
அடடா! சண்டை ஆரம்பமா! இதோ என் பங்கு...

உப்புத் தண்ணீரில் வெண்மை மாறும்; உண்மை! எனவே இப்படி மாற்றலாம்:

கண்ணீரில் இட்டாலும் சாயம் 'ஏறாத' வெண்மை! (வெண்மை எப்படி வெளுக்கும்?)

எரி நீரில் இட்டால் தங்கம் மாறாதே! எனவே உவமை தவறுதான்! இப்படி மாற்றலாம்:

எரி நீரில் இட்டாலும் மாறாத இரும்பு! (காதல் இரும்பைப்போல உறுதி எனலாமே)

Note: '
ஏறாத', 'மாறாத' என்று Rhyme வேறு! :D

 
ஏறாத மாறாத என்றெல்லாம் சொல்லித்

தேறாத கவிதை ஆக்கிவிடக் கூடாது! :nono:

ஏராளமானவரைப் போலவே இவரும்

பாராமுகம் ஆகிவிடப்போகிறார்.உ ஷார் !
 
கவிஞர்கள் காணமல் போவதற்கு நான் காரணம் அல்ல!! :fish2:
 
தோழிகளுக்கு,

நீங்க அடிச்சு போகச் சொன்னாலும் நான் போக மாட்டேன் !!!

:laugh:

:peep:
 
ஐயோ!!!!

எரி நீரில் இட்ட தங்கத்தின் குணம் குன்றாதை போல் காதலும் அதன் தன்மையில் குன்றுவதில்லை என பொருள்...

இரும்பை எரி நீரில் இட்டால் அது துரு பிடித்து விடும் !!! அது வலிமையான உலோகமனதாக இருந்தாலும் கூட.....

வெண்மை நிறம் சாயம் இழந்தால் அதற்கு மஞ்சள் தன்மை என்று பெயர் . அவ்வாறு சாயம் வெளுக்காத ஒரு உணர்வு காதல்....!!!!




அடடா! சண்டை ஆரம்பமா! இதோ என் பங்கு...

உப்புத் தண்ணீரில் வெண்மை மாறும்; உண்மை! எனவே இப்படி மாற்றலாம்:

கண்ணீரில் இட்டாலும் சாயம் 'ஏறாத' வெண்மை! (வெண்மை எப்படி வெளுக்கும்?)

எரி நீரில் இட்டால் தங்கம் மாறாதே! எனவே உவமை தவறுதான்! இப்படி மாற்றலாம்:

எரி நீரில் இட்டாலும் மாறாத இரும்பு! (காதல் இரும்பைப்போல உறுதி எனலாமே)

Note: '
ஏறாத', 'மாறாத' என்று Rhyme வேறு! :D

 
தார்மீக உறவுகள்...!!!

மழலை பேச்சில் மகிழ்ச்சி தந்தவன் ....
என் மரபியல் வளர்ச்சிக்கு முழு வடிவம் கொடுத்தவன் .....
பிரியமான அன்பை எனக்கு பருக கிடைத்தவன் ....
என்னுள்ள தாய்மையின் ஈரத்தை உணரச் செய்தவன் ....

******
ஆனால் இன்று அவன் !!
என் அன்பின் பிடியில் இருந்து விரும்பிப் பிரிகின்றான்.....
மூன்றாம் மனிதனாய் அவன் விலகிய போது
தூரமாகியது என்னிருவர் அன்பு என்று தெரியாமற் போனது ....
அவன் கல்யாண கோலத்தை கண்டு கண்குளிர்ந்துவிட்டு.....
இன்று கலங்கிக் கொண்டிருக்கிறேன் அவன் பிரிவில் .....
கானல் நீர் கனவுகளுடன் ..... அவன் நினைவுகளுடன்..!!!!

******

வெகு திங்களுக்கு பின் இன்று, அவன் பிரிவின்பால், நிதர்சன உண்மைகளை
மறைத்து பொய்யென சிரிக்க, நடப்புலக வாழ்வியலை கற்றுக் கொண்டேன் !
அவனின் நினைவுகள் என் இதயத்தை பிளக்க ....
வலியை உணர்ந்து மறக்கிறேன் தினமும்...
பத்து திங்கள் அவனை சுமந்த வயிராயிற்றே !!!!
எப்படி மறப்பேன் தூரமாகி போன, நான் பெற்ற அன்பு மகனை !!!!

- விழிவழி கண்ணீருடன் காப்பகத்திலிருந்து ஒரு தாய் .....


(இந்த எழுத்து சிவகாமி அம்மாவுக்கு சமர்ப்பணம் !!! :(:pray: )
 
The beauty in poetry lies in giving the out of the ordinary examples.

Gold resists all chemical changes. So three is nothing really great about its NOT getting tarnished in hot H2O.

But IRON reacts chemically with hot H2O. So if it does NOT react, that will be a special case like the special love being discussed here.

Same thing with whiteness. The whiteness is the absence of colors. So it can't lose colors - since it does not have any!

But it can take up colors. So when you say the whiteness which does not take up any color, it becomes an unusual case and a very good example.

Think about it please!
 
அன்றே சொன்னார்கள்! :blabla:
நன்றே சொன்னார்கள்! :thumb:

பெற்ற மனம் பித்து! :loco:
பிள்ளை மனம் கல்லு! :hand:

மீண்டும் ஒருமுறை படிக்கவும்
என் முதல் முதல் பதில்.



மழலை பேச்சில் மகிழ்ச்சி தந்தவன் ....
என் மரபியல் வளர்ச்சிக்கு முழு வடிவம் கொடுத்தவன் .....
பிரியமான அன்பை எனக்கு பருக கிடைத்தவன் ....
என்னுள்ள தாய்மையின் ஈரத்தை உணரச் செய்தவன் ....

******
ஆனால் இன்று அவன் !!
என் அன்பின் பிடியில் இருந்து விரும்பிப் பிரிகின்றான்.....
மூன்றாம் மனிதனாய் அவன் விலகிய போது
தூரமாகியது என்னிருவர் அன்பு என்று தெரியாமற் போனது ....
அவன் கல்யாண கோலத்தை கண்டு கண்குளிர்ந்துவிட்டு.....
இன்று கலங்கிக் கொண்டிருக்கிறேன் அவன் பிரிவில் .....
கானல் நீர் கனவுகளுடன் ..... அவன் நினைவுகளுடன்..!!!!

******

வெகு திங்களுக்கு பின் இன்று, அவன் பிரிவின்பால், நிதர்சன உண்மைகளை
மறைத்து பொய்யென சிரிக்க, நடப்புலக வாழ்வியலை கற்றுக் கொண்டேன் !
அவனின் நினைவுகள் என் இதயத்தை பிளக்க ....
வலியை உணர்ந்து மறக்கிறேன் தினமும்...
பத்து திங்கள் அவனை சுமந்த வயிராயிற்றே !!!!
எப்படி மறப்பேன் தூரமாகி போன, நான் பெற்ற அன்பு மகனை !!!!

- விழிவழி கண்ணீருடன் காப்பகத்திலிருந்து ஒரு தாய் .....


(இந்த எழுத்து சிவகாமி அம்மாவுக்கு சமர்ப்பணம் !!! )
 
சிவகாமி அம்மா !!!

சத்தியமாக இதை எழுதும் எனக்கு இதயம் சற்று
அதிகமாகவே துடித்தெழுகிறது ..!!!
:(

சமுதாய சூழல்களின் பிடியில் சிக்கி
மனித உறவுகளை தொலைத்து திரிந்த எனக்கு
ஆதரவுக் கரம் நீட்டியவள்... !!!
எதிர்பாராமல் வந்து அன்னையின் அன்பை
ஊட்டி வளர்த்தவள்....!!!!

சந்தித்தது கடவுளின் ஆலயம் என்றாலும்
சந்தித்தது ஒரு கடவுளை என்று இன்னும் எண்ணுகிறேன்....

தனிமையின் பிடியில் அன்னையின் பாசத்தை தொலைத்த
வேதனையில் நான் இருக்க ... பாவம்
அதே தனிமையின் பிடியில் மகனை தொலைத்த சோகத்தில் நீ ....
ஆனால் நம்மிருவருக்கும், இருந்தும் எதற்குமில்லாமல்
இருக்கும் இந்த சூழ்நிலையை என்னவென்று சொல்வது...!!!

ம்ம் ...

தனிமை நம் இருவரை சேர்த்திழுக்க ...
என்னை பெற்ற மகனாய் பாவித்தாய் ..!!!

அந்த இரண்டு முழு ஆண்டுகளும்
உன் தாய்மையின் ஈரத்தில் என்னை நனைத்திட்டாய் .....!!!!
நனைந்த என்னால் வேறேதும் கைம்மாறு செய்ய
கிட்டவில்லை .. !!! அம்மா ..!!!
உனக்கு கடைசியாக பால் ஊற்றும் பாக்கியத்தை தவிர ...!!!

அம்மா...!!!
என்னை மன்னித்துவிடுங்கள்....

உள்மனதில்
உனக்கேங்கும் எனக்கு என்ன சொல்லி தேற்றுவது !!!
என்னை விட்டு பிரிந்து இன்றுடன் முழுதாய் இரண்டாண்டுகள்
நிறைவடைந்த நிலையில் ...!!
மீண்டும் அதே தனிமையில் நான் . ...!!!

சுயநலக்காரி.... உனக்கு வேண்டியது பெற்றதும்
எனை சற்றென பிரிந்துவிட்டாய்....!!!

ஆனால் உன்னை பாரமுகமெடுத்து கடைசி வரை
காண நினையாத உன் மகன்...
அந்த சண்டாளனை ஒரு போதும் மன்னிக்காதே அம்மா !!!

இன்றும்....
நீ சொல்லிக்கொடுத்த சந்தியாவந்தனமும் , காயத்ரி மந்திரமும்
என்னுள் உன்னை நினைவு படுத்திக்கொண்டுதான் இருக்கிறது...!!!

இன்றும்...
நீ அளித்த அந்த ஒரு கவளப் பருக்கையும் என் நாவில்
நின்று இனிக்கிறது ...!!!

இன்றும்...
நீ என்னை உன் மடியில் கிடத்தி உன் கடந்த
கால நினைவுகள் சொல்லி அழுத கண்ணீரும் ....
என் இதயத்தில் அலைகிறது...!!!

அடுத்த ஜென்மமொன்று இருந்தால் ....
எனக்கு மகளாய்ப் பிறந்து வா...!!!
செலுத்த வேண்டிய கடன் நிறையவே உள்ளது...!!!

அதுவரை... உன் ஆன்மா ..சொர்க்கத்தில் பத்திரமாக இருக்கட்டும்....!!!

- பெற்றால் தான் பிள்ளையா !!!
உன் வயிற்றில் பிறவா மகன் !!
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top