ஜனதா குழம்பு

Status
Not open for further replies.
ஜனதா குழம்பு

April 27, 2015



janatha_2387376f.jpg


என்னென்ன தேவை?
உருளை, கேரட், பீன்ஸ், அவரை, முருங்கை - ஒன்றரை கப்,
காய்ந்த மிளகாய் - 3
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எலுமிச்சைச் சாறு - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைக்க
கசகசா, சோம்பு, சீரகம், மிளகு - தலா 1 டீஸ்பூன்
முந்திரி - 5
தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2

எப்படிச் செய்வது?


காய்கறிகளைச் சதுரமாக நறுக்கி குக்கரில் போட்டு வதக்கவும்.

காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, அரைத்த விழுதைச் சேர்த்துத் தேவையான அளவு தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும்.

உப்பு சேர்க்கவும்.

இறக்கும்போது எலுமிச்சைச் சாறு சேர்க்கவும்.


நெய்யில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து இந்த ஜனதா குழம்பில் சேர்க்கவும்.


சாதத்தில் ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டால் சுவையில் மயங்கும் விருந்தினர் கூடுதலாக இரண்டு நாட்கள் தங்கிவிட்டுச் செல்வார்கள்.


???? ??????? - ?? ?????
 
Status
Not open for further replies.
Back
Top