சேனை கூட்டுக் கறி

Status
Not open for further replies.
சேனை கூட்டுக் கறி

சேனை கூட்டுக் கறி
April 13, 2015

senai_2375636f.jpg






என்னென்ன தேவை?



சேனைக் கிழங்கு - 100 கிராம்
மொச்சை, துவரம் பருப்பு - தலா 50 கிராம்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள், பெருங்காயம், வெல்லம் - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
வறுத்துப் பொடிக்க
கடலைப் பருப்பு, உளுந்து - தலா 1 டீஸ்பூன்,
தனியா - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
தேங்காய்த் துருவல் - கால் மூடி

எப்படிச் செய்வது?



சேனைக் கிழங்கைப் பெரிய துண்டுகளாக நறுக்கி வேகவைக்கவும்.

மொச்சை, துவரம் பருப்பைத் தனித்தனியாக வேகவைத்துக் கொள்ளவும்.

வறுக்கக் கொடுத்த பொருட்களைச் சிறிது எண்ணெயில் சிவக்க வறுத்து, நன்கு பொடிக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, புளியைக் கரைத்துச் சேர்க்கவும்.

மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்து கொதிக்க விடவும்.

வேகவைத்த சேனை, மொச்சை மற்றும் துவரம் பருப்பு ஆகியவற்றைச் சேர்தது கொதிக்க விடவும்.

பொடித்த பொடியைத் தூவி மேலும் 1 கொதிவிட்டு, கூட்டுக் கறிபோல் வந்தவுடன் கறிவேப்பிலையை தூவி இறக்கவும்.


???? ???????? ??? - ?? ?????
 
Status
Not open for further replies.
Back
Top