• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்

saidevo

Active member
Self Publishing Online: Print On Demand Paperback Books

ன் கவிதை முயற்சிகளை நான் தொடங்கி நடத்திவரும் முகநூல் குழுமங்களில் அரங்கேற்றியும் பயிற்றுவித்தும் ஆற்றும் பணியின் மும்முரத்தில் இக்குழுமத்தின் பக்கமே வர இயலவில்லை! அன்பர்களுக்கு என்னை நினைவிருக்கும் என்று எண்ணுகிறேன்.

பொதுவாக, அச்சு நூல்களை ஒரு பதிப்பகத்தாரிடம் தந்து நம் செலவில் வெளியிடச் செய்வோம். அவர்கள் குறைந்தது 100 பிரதிகள் வெளியீட்டுக்கான தொகையை நம்மிடம் வாங்கிக்கொண்டு, புத்தகங்களை நம்மிடம் அனுப்பிவிடுவார்கள். அதை விற்பதும், நண்பர்களுக்கு அன்பளிப்பாக அனுப்புவதும் நம் பொறுப்பு. சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் நம் பதிப்பகம் சாவடி நிறுவினால் சில பிரதிகள் அங்கு விற்பனையாக வாய்ப்புண்டு.

புனைகதை ஆசிரியர்களின் படைப்புகளை வெளியிட்டுச் சந்தைப் படுத்தி விற்பனை செய்வதில் காட்டும் ஊக்கத்தைப் பதிப்பகத்தார் கவிதை நூல்கள் வெளியீட்டில் காட்டுவதில்லை. கவிஞர்கள் தாமே பணம் செலுத்திப் புத்தகம் வெளியிட்டாலும். கவிஞர்கள் தம் செலவில், முக்கியமாக நண்பர்களுக்கு அன்பளிப்பாகத் தருவதற்கும், ஏனையோர்க்கு நூல்களை விலைக்குத் தருவதற்கும், நூறு பிரதிகளுக்குப் பதிலாக, இருபது முப்பது பிரதிகள் வெளியிட இயன்றால், அது அவர்களுக்கு வசதியாக இருக்கும். ஆனால் இவ்வசதியைப் பெரும்பாலான பதிப்பகங்களிடம் எதிர்பார்க்க முடியாது.

இவ்வாறான நிலையில் தான், Print On Demand என்னும் வகையில், நூலாசிரியரே தம் நூலை Self Publishing Online பதிப்பாக வெளியிடும் வசதியும், முயற்சியும் முக்கியத்துவம் பெறுகிறது.

இவ்வாறு வெளியிடும் பெரும்பாலான இணையப் பதிப்பகங்களும் Packages என்ற வகைகளில் குறைந்தது Rs.10,000 நூலாசிரியரிடம் செலுத்தச் செய்து, அவர்களுக்கு ஆசிரியர் பிரதிகளாக ஐந்து முதல் பத்து பிரதிகள் மட்டுமே தருகின்றனர்.

இவர்களுக்கிடையில் https://pothi.com சில புதுமையான உத்திகளில் தனித்து நிற்பதாகத் தெரிகிறது.

• Pothi.com பதிப்பகத்தாரிடம் நம் நூல்களை paperback அச்சு நூல்களாக வெளிட ஏதும் பணம் செலுத்த வேண்டுவதில்லை! நூலாசிரியர்களுக்கு இஃதோர் வரப்பிரசாதம் என்பேன்!

• ஆசிரியர்களும் மற்றவர்களைப் போல் தமக்கு வேண்டிய பிரதிகளை ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளவேண்டும்.

• புத்தகத்தின் நிர்ணயைக்கப்பட்ட விலையை விடக் குறைந்த விலையில் ஆசிரியர்கள் இப்பிரதிகளை வாங்கிக் கொள்ளலாம்.

• மற்றவர்கள் வாங்கும் பிரதிகளைப் பதிப்பகம், விலையை முதலில் பெற்றுக்கொண்டு, அவ்வப்போது அச்சிட்டு அனுப்பிவைக்கும்.

• PDF, E-Pub கோப்புகளாக அனுப்பு நம் புத்தகங்களை மின்னூலாகவும் வெளியிடலாம். மின்னூலின் விலை, அச்சுநூல் விலையில் பொதுவாக 60% என்ற அளவில் வைத்துக்கொள்ளலாம்.

• மின்னூல்களை வாங்குவோர் இணையம் மூலம் பணம் செலுத்தியதும், நூலின் மின்பிரதியை அனுப்புகிறார்கள். மின்னூல்களைக் கண்டபடி ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வதை மட்டுப்படுத்த, வாங்குவோரின் மின்னஞ்சலை மின்பிரதியின் ஒவ்வொரு பக்கத்திலும் பதிப்பித்து விடுகிறார்கள்.

• நூலின் அட்டை அமைப்பை நாமே வடிவமைத்துக்கொள்ளவும் வலைதளத்தில் ஒரு மென்பொருளை இயக்குகிறார்கள்.

• Pothi.com பதிப்பகத்தாரில் Store-இல் ஆங்கிலம், இந்திய மொழிகளில் அவர்கள் வெளியிட்டுள்ள நூல்கள் பத்தாயிரத்துக்கும் மேலென்று தெரிகிறது. உலகம் முழுவதும் இவர்கள் நூல்களை அனுப்பி வைப்பதுடன், மின்னூல்களையும் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

விஷயத்துக்கு வருகிறேன்...

Pothi.com வழியாக என் கவிதை, கதை, உரைநடைத் தமிழ் மற்றும் ஆங்கிலப் படைப்புகளைத் தொகுத்து வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளேன். இவ்வாறு நான் இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள் இங்கே:

https://store.pothi.com/search/?q=குருநாதன்+ரமணி

நூல் வெளியீட்டுக் கால நிரல்
• திகட்டத் திகட்ட ஹைக்கூ
• ரமணியின் யாப்பிலக்கணத் திரட்டு
• அனுபவத் துளிகள் (மரபு கவிதைகள்)
• பயணம் (நாவல்)


நூல் பதிப்பிக்க எண்ணும் அன்பர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இப்பதிவு. ஆர்வமுள்ள அன்பர்கள் என் நூல்களை அச்சுநூல், மின்னூல் தேர்வில் விரும்பும் வடிவில் வாங்கிப் படித்துக் கருத்துரைக்கலாம்.

*****
 
அண்மையில் வெளியிட்ட என் சிறுகதை உத்திகள் நூல் இங்கே:
https://store.pothi.com/book/குருநாதன்-ரமணி-சிறுகதை-உத்திகள்/

பிறநூல்கள் இங்கே:
https://store.pothi.com/search/?q=குருநாதன்+ரமணி&sort_by=relevancy
 
Very interesting!
Accounting books/Management books .do they publish?
A book can be in either print form or e-form?
What is the difference? Paper back books ,how many pages
max?
kindly advise.
 
Very interesting!
Accounting books/Management books .do they publish?
A book can be in either print form or e-form?
What is the difference? Paper back books ,how many pages
max?
kindly advise.
Seems they publish all kinds of books. Their Website Pothi.com has all the details.
ramaNi
 
#ரமணி_புத்தகம்
ரமணியின் புத்தக வெளியீடுகள்:
அவன்-அவள் (சிறுகதைகள்)

அன்புடையீர், வணக்கம்.

நான் சென்ற வாரம் பதிப்பித்த ’அவன்-அவள் (சிறுகதைகள்)’ நூல் பற்றிய விவரம் கீழே. முனைவர் வ.வே.சு. அவர்களும், வாசகர் நோக்கில் கவிஞர் ராமு அவர்களும் இந்நூலுக்கு அணிந்துரை அளித்துள்ளார்கள்.

அச்சுநூல்
https://store.pothi.com/book/குருநாதன்-ரமணி-அவன்-அவள்-சிறுகதைகள்/
மின்னூல்
https://store.pothi.com/book/ebook-குருநாதன்-ரமணி-அவன்-அவள்-சிறுகதைகள்/

அனைத்து நூல்களும்
https://store.pothi.com/search/?q=குருநாதன்+ரமணி&sort_by=relevancy

அன்புடன்,
குருநாதன் ரமணி

*****
 

Latest ads

Back
Top