• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பார்த்தசாரதி திருக்கோவில் சிறப்புத்தக&#2

பார்த்தசாரதி திருக்கோவில் சிறப்புத்தக&#2

பார்த்தசாரதி திருக்கோவில் - சிறப்புத்தகவல்கள்


பகல் பத்து தொடங்கி இன்று நான்காம் நாளாகிறது. எம்பெருமான் பார்த்தசாரதி பெருமாள் திருக்கோவில் பற்றி இன்று சில தகவல்கள் உங்களுக்காக இங்கு பதியப்படுகிறது.


திருவல்லிக்கேணி என்ற திருத்தலத்தில் திருப்பதி வேங்கடநாதனே பார்த்தசாரதியாக எழுந்தருளியிருப்பதால் இத்தலம் "திருப்பதிக்கு இணையான தலம்" ஆகும்.


ஸ்தலம், மூர்த்தி, தீர்த்தம் என்று மூன்று அம்சங்களும் பொருந்தியிருக்கும் திவ்ய ஷேத்திரத்தை தரிசித்தால் எண்ணற்ற பேறுகளை அடையலாம்.


108 திவ்யதேசங்களில் 61 வது திவ்யதேசமாக விளங்குகிறது "திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள்" திருக்கோவில்.


பள்ளி கொண்ட பெருமாளும், யோக நரசிம்மரும், கஜேந்திர வரதராஜப் பெருமாளும், ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியும், திருப்பதி வேங்கடவனுமாகிய பஞ்ச மூர்த்திகளும் ஒரே தலத்தில் எழுந்தருளி இருப்பதால் இத்தலம் "பஞ்சமூர்த்தி தலம்" என்றும் "தென் பிருந்தாவனம்" என்றும் அழைக்கப்படுகிறது.


தீர்த்தம் என்று பார்க்கும் பொழுது "இந்திர தீர்த்தம், சோம தீர்த்தம், அக்னி தீர்த்தம், மீன தீர்த்தம் மற்றும் விஷ்ணு தீர்த்தங்கள்" என பஞ்ச தீர்த்தங்கள் என்ற இந்த தீர்த்தங்களில் நீராடுபவன் மீண்டும் பிறவாப் பேரானந்தம் (பிறவாத நிலை) அடைகிறான்.


மூலவர் வேங்கடகிருஷ்ணன் நம் பாரத நாட்டில் எங்குமே காண முடியாத "ஒன்பது அடி உயரத்தில்" மிக பிரம்மாண்டமாக எழுந்தருளி அன்று அர்ச்சுனனுக்கு மட்டுமல்ல, இன்று நம்மையும் சரியான பாதையில் வழிநடத்தும் சாரதியாக அனைவருக்கும் சேவை சாதித்து வருகிறார்.


இரண்டு வாசல், இரண்டு த்வஜஸ்தம்பம் என்பது வேறு எந்தக் கோவிலிலும் காண முடியாத பெரும் பேறாகும்.


இங்கு மட்டுமே வருடம் முழுவதும் "200 க்கும் மேற்பட்ட உற்சவங்களும், ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யார்களின் ஜெயந்தி" தின விழாக்களும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.


பிருந்தாரண்ய ஷேத்திரம் :-


பிருந்தாரண்யம் என்னால் என்று தெரியுமா?.


பிருந்தா என்றால் துளசி என்று பொருள். ஆரண்யம் என்றால் காடு. அதுவே, "பிருந்தாரண்யம்" என்று அழைக்கப்படுகிறது.


பார்த்தசாரதி பெருமாள் எழுந்தருளியிருக்கும் இந்த திருத்தலம் முன்னொரு காலத்தில் "பிருந்தாரண்ய ஷேத்திரமாக" விளங்கியது.


முன்னொரு காலத்தில் இந்த வனத்தில் சூரிய ஒளி கூட புக முடியாத அளவு துளசிச் செடிகள் அடர்ந்து வளர்ந்து காடாகக் பரவிக் கிடந்ததாம்.


பார்த்தசாரதி மூலவர் :-


ஸுமதி என்ற மன்னன் ஏழுமலையான் திருவேங்கடத்தானிடம் தனக்கு "கீதாச்சார்யனான பார்த்தசாரதி" கோலத்தில் தரிசனம் அளிக்க வேண்டும் என்று வேணட, அவரது பிரார்த்தனைக்கு இரங்கிய "ஸ்ரீவேங்கடவன்" அவரது கனவில் தோன்றி பிருந்தாரண்ய சேத்திரத்தில் நீ விரும்பிய கோலத்தில் தான் காட்சியளிப்பதாக அருளினார் ஏழுமலையான்.


இதற்கிடையே "ஆத்ரேய மகரிஷி", தன் குரு வேதவியாஸரிடம், தவம் செய்ய ஏற்ற இடத்தினைக் கேட்ட போது அவர் "கைரவிணி புஷ்கரணி" கரையில் ஸுமதி மன்னன் தவம் புரிந்து கொண்டிருக்கும் "துளசிச் செடிகள் நிறைந்த பிருந்தாரண்ய ஷேத்திரமே தவம் செய்ய ஏற்ற இடம்" என்று உபதேசித்தார்.


அதோடு மட்டுமல்லாமல் வலது திருக்கையில் "பாஞ்சஜன்யம்" எனப்படும் சங்கும், இடது கரத்திலுள்ள "ஞான முத்திரை" அவரது திருப்பாதங்களையும் காண்பிக்குமாறு அமைந்த ஒரு திவ்ய மங்கள விக்ரஹத்தையும் அருளினார்.


ஆத்ரேய மகரிஷியும் குருவிடம் விடை பெற்றுக் கொண்டு, ஸுமதி மன்னன் தவம் செய்யும் பிருந்தாரண்ய ஷேத்திரம் வந்து சேர்ந்தார். ஸுமதி மன்னனும் "ஆத்ரேய மகரிஷியின்" வருகையைக் கண்டு ஆனந்தம் அடைந்தார்.


ஆத்ரேய மகரிஷியோ "தன் குரு வேத வியாஸர்" இந்த விக்கிரத்தை தம்மிடம் கொடுக்கச் சொன்னார் என்றதும், ஸுமதி மன்னன் மகிழ்ச்சி அடைந்ததோடு மட்டுமல்லாமல், அவர் கொடுத்தனுப்பிய விக்ரஹம் தான் விரும்பியபடியே "கீதாச்சார்யன் பார்த்தசாரதி" கோலத்தில் இருப்பதைக் கண்டு மகிழ்ந்து அந்த விக்ரஹத்திற்கு வைகானஸ ஆகம விதிப்படி வழிபாடு செய்து வழிபட்டார் ஸுமதி மன்னன்.


மந்நாதப் பெருமாள் :-


வேதவல்லித் தாயார் இங்குள்ள கைரவிணி புஷ்கரணியில் அவதரித்ததாக "பிரம்மாண்ட புராணம்" கூறுகிறது. அங்கு தவமிருந்த பிருகு முனிவர் இந்த குழந்தையை வளர்த்து வந்தார்.


வேதவல்லி மணப்பருவம் வந்ததும் "ரங்கநாதர்" பெண்கேட்டு வந்தாராம். ரங்கநாதரைக் கண்டதும் "இவரே_எந்நாதர்" என்று அழைத்தாராம் பிராட்டியார்.


வேதவல்லித் தாயார் எந்நாதர் என்று அழைத்ததால் பெருமாளுக்கு "மந்நாதர்" என்ற திருநாமம் உண்டானது.


இந்த மந்நாதப் பெருமாள் கிழக்கு நோக்கி காட்சி கொடுக்கிறார். பாம்பணையின் மீது தென்திசையில் தலை வைத்து வடதிசையில் பாதம் நீட்டி, பின்புறத்தில் ஸ்ரீதேவி - பூதேவி தாயார்களும், திருமுடி பாகத்தில் யக்ஜ வராகரும், திருவடிப் பாகத்தில் நரசிம்ம மூர்த்தியுடன் காட்சியளிக்கிறார்.


ஸ்ரீராமர் :-


பரதன், சத்ருக்கனன், இலக்குமணனோடு, ஸ்ரீராமர் - சீதா பிராட்டியாரோடு எழுந்தருளியுள்ளார். இவருக்கு எதிரே ஆஞ்சநேயர் பவ்யமாக கைகளைக் கூப்பியவாறு பக்த ஆஞ்சநேயனாக அருள்பாலிக்கிறார்.


இந்த ஸ்ரீராமர் குடும்பத்தோடு "மதுமான்" என்ற மகரிஷியின் வேண்டுதலுக்கு மனமிறங்கி காட்சி கொடுத்துள்ளார்.


யோக நரசிம்மர் :-


அத்ரி மகரிஷியின் வேண்டுதலுக்கு இணங்கி "ஸ்ரீ தெள்ளியசிங்கர்" என்ற திருநாமத்துடன் மேற்கு திருமுகத்துடன் காட்சி கொடுக்கிறார். இத்திருக்கோவிலில் ஸ்ரீ தெள்ளிய சிங்கர் சன்னதி மட்டுமே மேற்கு பார்த்தது. இவர் யோகத்தில் இருப்பதால் அவரது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கக்கூடாது என்று அவரது சன்னதி கதவுகளில் நாக்கு இல்லை. நிவேதனத்தின் போது மணியிலுள்ள நாக்குகள் ஒலிப்பதில்லை.


இவர் சன்னதிக்கு பின்புறம் பக்தர்கள் "உப்பு, மிளகு" சேர்த்து சமர்ப்பிக்கிறார்கள். இதனால் தீராத வியாதியும் தீரும் என்பது நம்பிக்கை.


கஜேந்திரவரதப்பெருமாள் :-


ஸப்தரோமா என்ற மகரிஷியின் வேண்டூகோளுக்கு இணங்கி காட்சி கொடுத்தவர் "கஜேந்திரவரதப் பெருமாள்". "ஆனையின் துயரம் தீர புள்ளூர்ந்தி சென்று நின்றாழி தொட்டானை" என்ற மங்களாசாசனம் படி, முதலையிடம் மாட்டிக் கொண்ட தனது காலை எடுக்க முடியாமல் இறைவனை நோக்கி "ஆதிமூலமே" என்று கதறிய போது, கருடன் மேலேறி விரைந்து வந்து தன் சக்கராயுதத்தால் முதலையைக் கொன்று கஜேந்திரன் என்ற யானைக்கு மோட்சம் கொடுத்தவர் "கஜேந்திர வரதராஜப் பெருமாள்".


இவர் பக்தர்கள் கூப்பிட வரம் தர ஏதுவாய் சங்கு, சக்கரம் தரித்தபடி கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார்.


குடும்பத்துடன் பெருமாள் :-


பகவத் கீதையின் முதல் அத்தியாயத்திலுள்ள "பாஞ்சஜன்யோ ஹ்ருஷீகேசோ" என்ற 15 வது ஸ்லோகத்தின் பொருளை உணர்த்தியும், இடது கை வரத ஹஸ்தமாக பகவத் கீதையின் 18 வது அத்தியாயத்தின் 66 வது ஸ்லோமாகிய


"ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் ச'ரணம் வ்ரஜ அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமிமாசு'சு:".


அனைத்து_தர்மங்களையும்
கைவிட்டு
என்னைமட்டுமேசரணடை. நான்அனைத்துபாபங்களில் இருந்தும்உன்னை விடுவிக்கிறேன்" என்பதை பிம்பரூபத்தில் பிரதிபலிப்பதாக பெரியோர்களின் வாக்கு.


மூலவரின்_திருமேனியே


"பகவத்கீதையின்ஸ்வரூபம்"
என்பதால்
பெருமாளைசேவித்தால்
ஸ்ரீ பகவத்கீதையை பாராயணம்செய்தபலன் கிட்டும் என்பது கருத்து.


எம்பெருமானின் இடுப்பில் சொருக்கப்பட்ட கத்தியானது போர் வாளாக இல்லாமல் "ஞானம்தரும்ஞானவாளாக" இருக்கிறது.


பார்த்தசாரதி பெருமாளின் வலதுபுறம் "ருக்மணி பிராட்டியார்" சேவை சாதிக்கிறார். தாயாரின் வலதுபுறம் வடக்கு நோக்கி "பலராமன்" காட்சி கொடுக்கிறார். பெருமாளுக்கு இடதுபுறம் கண்ணனின் தம்பி "சாத்யகி" கிழக்கு நோக்கியும், கண்ணனின் மகன் "பிரத்யும்னன்", பேரன் "அநிருத்தன்" இருவரும் தெற்கு நோக்கி காட்சி கொடுக்கிறார்கள்.


குடும்பத்தோடு இருக்கும் பார்த்தசாரதி பெருமாளைச் சேவித்தால் "
குடும்பஒற்றுமைமேலோங்கும்".


உற்சவர்_பார்த்தசாரதி :-


உற்சவரின் திருநாமம் "பார்த்தசாரதி". போர்க்களத்தில் அம்புகளால் ஏற்பட்ட வடுசின்னங்களோடு, திருமுகத்தில் வசீகரமான புன்னகையோடு காட்சி தருகிறார்.


இந்த முகத்தை சீரமைக்க செய்யப்பட்ட முயற்சிகள் அனைத்தும் வீணாகியதாக சொல்லப்படுகிறது. தங்கமுலாம் பூசப்பட்ட "பஞ்சலோக சிலையான ஸ்ரீ பார்த்தசாரதி விக்ரஹம்" திருமஞ்சனம் முடிந்ததும் ஒரு மணி நேரத்திற்குள் "கருநீல நிறத்தில் மாறும் அதிசயம்" கண் கொள்ளா காட்சியாகும்.


இவ்வாறு மாறும் அதிசயம் பற்றி எந்த உலோகவியல் சிறப்பு நிபுணர்களாலும் இன்றளவும் இதைப் பற்றி விளக்கவும் முடியவில்லை. இதன் காரணத்தையும் அறிந்திட முடியவில்லை.


பகல் பத்து ஆறாம் நாள் :-


உலக மக்கள் அனைவரையும் பார்த்த உடனே, பார்த்தனுக்கு தேரோட்டி, தேரோட்டிக்கே அழகு "மீசை" என்றெல்லாம் நம்மைக் கவர்ந்து கொள்ளும் எம்பெருமானின் கம்பீரமான தோற்றத்திற்கு காரணமான மீசை எதனைக் கொண்டு வரையப்படுகிறது என்று தெரியுமா?.


"பச்சைக்கற்பூரத்தை நன்றாகக் குழைத்து அதனால் வரையப்படுகிறது".


வைகுண்ட ஏகாதசி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும் பார்த்தசாரதி கோவிலில் "பகல்பத்து ஆறாம் நாள் உற்சவம்" முதல் வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாளான "பகல்பத்து பத்தாம் நாள் உற்சவம்" வரை எம்பெருமான் பார்த்தசாரதி பெருமாளை மீசை இல்லாத கோலத்தில் தரிசித்து ஆனந்தப்பட்டுக் கொண்டே வரலாம்.


எம்பெருமானை மீசையோடு தான் பார்ப்பேன் என்று அடம்பிடிப்பவர்கள் "பகல்பத்து ஆறாம் நாள் முதல் பகல்பத்து பத்தாம்நாள் வரை" கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்.


பகல்பத்து ஆறாம் நாள் முதல் பத்தாம் நாள் வரை இந்த "ஐந்து நாட்கள்" மட்டுமே நாம் மீசை இல்லாத கோலத்தில் சேவிக்க இயலும். வருடத்தில் இந்த ஐந்து நாட்கள் மட்டுமே. மற்ற நாட்களில் "வழக்கம் போலே மீசை வைத்த ஆண்மகனுக்கே உரிதான கம்பீரமான தோற்றம் கொண்டு தரிசிக்கலாம்".


மங்களம் :-


ஸ்ரீப்ருந்தாரண்ய நிவாஸாய பலராமானுஜாய ச
ருக்மிணீ ப்ராணநாதாய பார்த்தஸுதாய மங்களம்


மங்களம் ஸ்ரீ பார்த்தசாரதி
மங்களம் ஸ்ரீ ருக்மிணீநேஸா,
சங்குசக்ர விலாஸா, ஸர்வகோடி ப்ரகாசா
மங்களம் ஸ்ரீ பார்த்தசாரதி


கைரவிணி என்னும் தலத்தில் கண்ணனாக
அவதரித்து காண்போர்க்கு காட்சி அளிக்கும்
கமலருக்மணி நேஸா
மங்களம் ஸ்ரீ பார்த்தசாரதி!!!.


பார்த்தசாரதி பெருமாளின் திருவடிகளே சரணம்!!!.


இப்பதிவு "பார்த்தசாரதி" பெருமாளுக்கு சமர்ப்பணம்.
 

Latest ads

Back
Top