• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

சங்கடஹர சதுர்த்தி

Status
Not open for further replies.
சங்கடஹர சதுர்த்தி

சங்கடஹர சதுர்த்தி


blogger-image--110201744.jpg



சங்கடஹர கணபதி
சங்கடநாசன கணபதி



விநாயகப் பெருமானின் வழிபாட்டில் சதுர்த்தி என்னும் திதி முக்கியமானது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறைக்கு ஒன்றும் தேய்பிறைக்கு ஒன்றுமாக இரண்டு சதுர்த்திகள் வரும். அவற்றில் மிகவும் முக்கியமானதாக ஆவணி மாதத்தில் வளர்பிறையில் வரும் சதுர்த்தியையே கருதி வருகிறோம். இைதத்தான் நாம் விநாயகச் சதுர்த்தி என்று விமரிசையாகக் கொண்டாடி வருகின்றோம். அதன் பின் வரும் ஒவ்வொரு வளர்பிறைச் சதுர்த்தியையும் மாதச் சதுர்த்தி என்ற பெயரில் விநாயக வழிபாட்டிற்கு உகந்தவையாகக் கொண்டுள்ளோம்.

இதுமட்டுமின்று ஒவ்வொரு தேய்பிறையிலும் வரும் சதுர்த்திகளும் முக்கியமானவையே. இவற்றை சங்கடஹர சதுர்த்தி என்று அழைப்பார்கள். விநாயக வழிபாட்டில் இவையும் சிறப்பிடம் பெற்றவைதான். இவ்வகைச் சதுர்த்திகளில் தலையாயது மாசி மாதத்தன்று பெளர்ணமி கழித்து வரும் தேய்பிறைச் சதுர்த்திதான். இதனை மஹாசங்கடஹரசதுர்த்தி என்று அழைக்கிறோம்.

மாசி மாதம் வரும் சங்கடஹர சதுர்த்தியிலிருந்து மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்திகளின்போது விரதமிருந்து விநாயகரைச் சிறப்பாக வழிபாடு செய்வார்கள்.

விநாயகருக்கு முப்பத்திரண்டு வடிவங்கள் உண்டு. இவற்றை மூர்த்தி பேதங்கள் என்று கூறுவார்கள். அவற்றில் பதினாறு மிகவும் முக்கியமானவை. அவற்றில் ஒன்று சங்கடநாஸன கணபதியாகும்.

ஒவ்வொரு வகையான பலனைப் பெறவேண்டி ஒவ்வொரு வகையான விநாயக
வடிவங்களை வணங்குவதுண்டு. கடன் நீங்க ருணமோசன கணபதியையும் பணம் வேண்டி லட்சுமி கணபதியையும் வழிபடுவதுண்டு. அந்தந்த வழிபாட்டிற்கு உரிய தனிப்பட்ட
மந்திரங்களும் தோத்திரங்களும் முறைகளும் உண்டு.

சங்கடங்கள், இக்கட்டுகள், நெருக்கடிகள் தீருவதற்கு சங்கடஹர கணபதியை வணங்குகின்றோம். சங்கடஹர கணபதியை வணங்கியவர்களில் செவ்வாய் கிரகம் எனப்படும் அங்காரகன் முக்கியமானவர். அவரை வழிபட்டுப் பல மங்கலங்களுடன் கிரகப் பதவியையும் 'மங்கலன்' என்னும் சிறப்புப் பெயரையும் விநாயகரிடமிருந்து பெற்றார். ஆகையால் சங்கடஹர சதுர்த்திக்கு 'அங்காரகச் சதுர்த்தி' என்றும் பெயர் ஏற்பட்டுள்ளது. செவ்வாய்க் கிழமையன்று
வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. சங்கடஹர சதுர்த்தியன்று விரதம்
இருந்து வழிபட்டால் சங்கடங்கள் தீருவதோடு செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் கெடுதல்களும் தோஷங்களும் நீங்கும்.

சந்திரனும் விநாயகரைச் சிறப்பாக வழிபட்டுப் பல சிறப்புகளுடன் விநாயகருடைய திருமுடியில் பிறைச் சந்திரனாகவும் நெற்றியில் முழு நிலவுத் திலகமாகவும் விளங்கும் பேறு பெற்றான். விநாயகருக்கு பாலசந்திரன் என்றும் பெயர் உண்டு. மேலும் சங்கடஹர சதுர்த்தியன்று சந்திரனையும் பூஜிக்க வேண்டிய முறையும் உண்டாகியது.

சங்கடஹர சதுர்த்தியன்று விடியுமுன்பே எழுந்து குளித்து விரதம் இருந்து விநாயகரை வழிபட வேண்டும். அன்று இரவு 10.30 மணிக்கு மேல் சந்திரனைப் பார்த்துவிட்டு சந்திரனையும் பூஜித்துவிட்டு உணவு உட்கொள்ள வேண்டும்.

விரதம் இருக்க முடியாதவர்கள் விநாயகருக்கு உகந்த 'காரியசித்தி மாலை' என்ற துதியைப் படிக்க வேண்டும். அதனை எட்டு முறை அன்றைய தினம் படிப்பது மேலும் சிறப்பு.
சங்கடநாசன கணபதி ஸ்தோத்திரத்தையும் படிக்கலாம்.



kariyasiddhi maalai

shankashta nasana sriganesa sthothram

இவை வலுவும் ஆற்றலும் மிக்கவை. இவற்றில் ஏதவது ஒன்றைப் படிக்கலாம்.

முடிந்தவர்கள் இவற்றில் ஒன்றுடன் விநாயகர் கவசத்தையும் படிக்கலாம்.

விநாயகருடைய முப்பத்திரண்டு வகையான மூர்த்தங்களில் சங்கடஹர கணபதியும்
ஒன்று.

இளஞ்சூரியனைப் போன்ற நிறத்தோடு நீல நிற ஆடையணிந்து கொண்டு செந்தாமரையில் வீற்றிருப்பார். வலது கரங்களில் அங்குசமும் வரதமும் விளங்கும். இடது மேல் கரத்தில் பாசம் இருக்கும். தொடையின் மீது தன்னுடைய சக்தியை அமர வைத்திருப்பார். செம்மை நிறமுடைய அந்த சக்தி நீல நிற உடையும் ஆபரணங்களும் அணிந்து நீல மலரை ஏந்தியிருப்பார்கள். சங்கடநாஸனார் தமது இடது கீழ்க் கரத்தால் அந்த சக்தியை அணைத்தவாறு பாயசப் பாத்திரத்தைத் தாங்கியிருப்பார்.

'சங்கடஹர கணபதி' என்றும் 'சங்கடநாஸன கணபதி' என்றும் பெயர் பெற்ற இவரைத் தமிழில் நாம் 'தொல்லை நீக்கியார்' என்று அழைக்கிறோம்.


sankatahara chathurthi

KOSHASRINI: '?????? ??????????'

 
Status
Not open for further replies.
Back
Top