• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

குழி தர்ப்பணம்

narayananms

Active member
எனது தமையனார் சமீபத்தில் (29-6-2020) சிவலோகப்ராப்தி அடைந்தார். கொரானா ஊரடைப்பால்
இறுதி சடங்குகளுக்கு செல்ல இயலவில்லை. குழி தர்ப்பணம் சென்னையில் செய்ய வேண்டும்.
எங்கு எப்படி செய்வது என்பதை பற்றி தயவு செய்து விளக்கவும்.

நாராயணன்
 
08-07-2020 will be the tenth day. 08-07- புதன் கிழமை ஸ்னானம் செய்து விட்டு ஒரு வஸ்தர்த்துடன் சொட்ட சொட்ட ஈர வேஷ்டியுடன் செய்ய வேண்டும். வீட்டிற்குள் செய்ய கூடாது. 30 வாசோதகம். 75 திலோதகம் செய்ய வேண்டும். இரண்டிற்கும் ஒரே மந்திரம் தான்.
வீட்டிற்கு வெளியில் காம்ப்பெளன்ட் சுவற்றிர்க்குள் செய்யலாம்.
 
Attachments

  • Kuzhi-tarpanam (1).pdf
    181 KB · Views: 1,534
நன்றி, திரு. கோபாலன் சார்.
உங்களுடைய பதிவு மிகவும் உ[அயோகமாக இருக்கிறது.
ஸ்மார்த்தார்களுக்கும் வைணவர்களுக்கும் மந்திரத்தில் அதிக வித்தியாசம் இருக்காது என்று நினைக்கிறேன். ஸ்மார்த்தார்களுக்கான மந்திரத்தை முடிந்தால் PDF format-ல் அனுப்பினால், நன்றி.

நாராயணன்
 
எனது தமையனார் சமீபத்தில் (29-6-2020) சிவலோகப்ராப்தி அடைந்தார். கொரானா ஊரடைப்பால்
இறுதி சடங்குகளுக்கு செல்ல இயலவில்லை. குழி தர்ப்பணம் சென்னையில் செய்ய வேண்டும்.
எங்கு எப்படி செய்வது என்பதை பற்றி தயவு செய்து விளக்கவும்.

நாராயணன்
 
எனது தமையனார் சமீபத்தில் (29-6-2020) சிவலோகப்ராப்தி அடைந்தார். கொரானா ஊரடைப்பால்
இறுதி சடங்குகளுக்கு செல்ல இயலவில்லை. குழி தர்ப்பணம் சென்னையில் செய்ய வேண்டும்.
எங்கு எப்படி செய்வது என்பதை பற்றி தயவு செய்து விளக்கவும்.

நாராயணன்
 
Attachments

  • kuzhi tarpanam.pdf
    1.5 MB · Views: 557
ஒருவர் இறந்து இறுதிச்சடங்குகள் வைதீகமுறையில் செய்யப்பட்டு ஸபிண்டீகரணம் செய்து முடிக்கப்பட்டு சில மாதங்களுக்கு பறகு இந்த இறப்பு 10 நாட்கள் தீட்டு உடைய அவருடைய பங்காளிக்கு தெரிய வந்தால் அவர் குழி தர்ப்பணம் செய்யவேண்டிய விதிமுறைகள் என்ன?
2. இந்த கொரானா காலத்தில் கொரானா வியாதியால் இறந்த ஒருவருக்கு அவர் மகன் மூலமாக எந்த இறுதிச்சடங்குகளும் செய்யப்படவில்லை. சுகாதாரத்துறை மூலம் உடல் தகனம் செய்யப்பட்டது. அதன்பிறகு இறந்தவருக்கு எந்த கர்மாவும் செய்யப்படவில்லை. இந்த சூழ்நிலையில் இறந்தவரின் 10 நாட்கள் தீட்டு உள்ள பங்காளிகள் குழி தர்ப்பணம் செய்ய வேண்டிய விதி முறைகள் என்ன?
 
அதிக்ராந்த ஆசெளசம்:- தீட்டு காக்க வேன்டிய நாட்கள் கழிந்த பிறகு செய்தி கேள்வி பட்டால் எவ்வளவு நாள் தீட்டு என்று சொல்வது தான் அதிக்ராந்த ஆசெளசம்.

பத்து நாட்கள் தீட்டு பத்து நாட்கள் முடிந்த பிறகு 3 மாதங்களுக்குள் கேட்டால் 3ம் நாள் 75 திலோதகம். 3 நாள் தீட்டு.
3 மாதத்திற்கு மேல் 6 மாததிற்குள் கேட்டால் ஒன்னரை நாள் தீட்டு; 75 திலோதகம்.

6 மாதத்திற்கு மேல் ஒரு வருடத்திற்குள் கேட்டால் ஒரு நாள் தீட்டு. 75 திலோதகம்.
ஒரு வருடத்திற்கு மேல் கேட்டால் ஸ் நானம் மாத்திரம்.

இறந்தவர் வயதில் பெரியவராக இருந்தால் வபனம் செய்த பிறகு திலோதகம் விடவும்.

இக்காலத்தில் செல் போன் மூலம் உடனே தெரிந்து கொள்ள முடிகிறதே.

இறந்தவரின் 10 நாள் தீட்டு உள்ள பங்காளிகள் பத்தாம் நாளன்று 75 திலோதகம் செய்து விட்டு மறு நாள் தீட்டு போகும். புது பூணல், திருமங்கல்ய சரடு மாற்றி கொண்டு வழக்கம் போல் சந்தியா வந்தனம், ஔபாஸனம், பஞ்சாயத்ன பூஜை, வேதம் ஓதுதல், ப்ருஹ்ம யக்ஞம் செய்யலாம். 75 திலோதகம் செய்தால் தான் தீட்டு போகும்.

ஒரு வருடம் நடு வாசல் கோலம் கிடையாது. கலசம் வைத்து பூஜை செய்ய கூடாது. பண்டிகைகள் கொண்டாட கூடாது. குல தெய்வம், மற்றுமுள்ள கோயில் செல்ல கூடாது.

ஊரடங்கு தளர்வுகள் வந்த பிறகு கர்த்தா இறந்தவரின் உடல் போல் தர்பைகளால் செய்து கொளுத்தி அந்த சாம்பலை கரைத்து பிறகு கல் ஊன்றி 9, 10, 11, 12 நாட்கள் காரியங்கள் செய்ய லாம். அது வரை தீட்டு போகாது. பத்து காயத்ரி ஜபம் தினமும் மூன்று வேளையும் செய்து கொண்டிருக்க வேண்டும்.
 
நமஸ்காரம். ப்ரும்மச்சாரி இறந்தால் 10 நாட்கள் தீட்டு உள்ள ஞாதிகள் குழி தர்ப்பணம் செய்ய வேண்டுமா?
2. ப்ரும்மச்சாரிகளுக்கு தீட்டு கிடையாது. அவர்கள் தங்கள் ஞாதிகள் இறந்தால் குழி தர்ப்பணம் செய்ய வேண்டுமா? நன்றி
 
திரு கோபாலன் சார் ஸ்ரார்த்த மந்திரத்தை pdf ல் தரவும் பலருக்கும் உபயோகமாக இருக்கும் சிவாய நமஹ.
 
ஸ்ராத்தம் ஃபொர் ஐயர். ஏற்கனவே நான் இங்கு கொடுத்தது தான்.
 
Attachments

  • Sraththam (for Iyer) (1).pdf
    1.3 MB · Views: 136
இதுவும் சிராத்தம் விஷயம் தான்.
 
Attachments

  • Yajur Vedam Apastamba Sutram (Iyer).pdf
    632.2 KB · Views: 115
நமஸ்காரம், யஜுர்வேத ஆபஸ்தம்ப ஸூத்ர ஶ்ரீவைஷ்ணவ ச்ராத்தப்ரயோகம் PDF File post செய்து உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.
 
you please contact www. ***********.com for vaishnava sratha prayogam. i am iyer, vadamal, aapasthampa suthram. i am not a sastrigal.
 
Latest ads

Back
Top