அதிக்ராந்த ஆசெளசம்:- தீட்டு காக்க வேன்டிய நாட்கள் கழிந்த பிறகு செய்தி கேள்வி பட்டால் எவ்வளவு நாள் தீட்டு என்று சொல்வது தான் அதிக்ராந்த ஆசெளசம்.
பத்து நாட்கள் தீட்டு பத்து நாட்கள் முடிந்த பிறகு 3 மாதங்களுக்குள் கேட்டால் 3ம் நாள் 75 திலோதகம். 3 நாள் தீட்டு.
3 மாதத்திற்கு மேல் 6 மாததிற்குள் கேட்டால் ஒன்னரை நாள் தீட்டு; 75 திலோதகம்.
6 மாதத்திற்கு மேல் ஒரு வருடத்திற்குள் கேட்டால் ஒரு நாள் தீட்டு. 75 திலோதகம்.
ஒரு வருடத்திற்கு மேல் கேட்டால் ஸ் நானம் மாத்திரம்.
இறந்தவர் வயதில் பெரியவராக இருந்தால் வபனம் செய்த பிறகு திலோதகம் விடவும்.
இக்காலத்தில் செல் போன் மூலம் உடனே தெரிந்து கொள்ள முடிகிறதே.
இறந்தவரின் 10 நாள் தீட்டு உள்ள பங்காளிகள் பத்தாம் நாளன்று 75 திலோதகம் செய்து விட்டு மறு நாள் தீட்டு போகும். புது பூணல், திருமங்கல்ய சரடு மாற்றி கொண்டு வழக்கம் போல் சந்தியா வந்தனம், ஔபாஸனம், பஞ்சாயத்ன பூஜை, வேதம் ஓதுதல், ப்ருஹ்ம யக்ஞம் செய்யலாம். 75 திலோதகம் செய்தால் தான் தீட்டு போகும்.
ஒரு வருடம் நடு வாசல் கோலம் கிடையாது. கலசம் வைத்து பூஜை செய்ய கூடாது. பண்டிகைகள் கொண்டாட கூடாது. குல தெய்வம், மற்றுமுள்ள கோயில் செல்ல கூடாது.
ஊரடங்கு தளர்வுகள் வந்த பிறகு கர்த்தா இறந்தவரின் உடல் போல் தர்பைகளால் செய்து கொளுத்தி அந்த சாம்பலை கரைத்து பிறகு கல் ஊன்றி 9, 10, 11, 12 நாட்கள் காரியங்கள் செய்ய லாம். அது வரை தீட்டு போகாது. பத்து காயத்ரி ஜபம் தினமும் மூன்று வேளையும் செய்து கொண்டிருக்க வேண்டும்.