காெத்தமங்கலம் சுப்பு

Status
Not open for further replies.
தில்லானா மோகனாம்பாள் முதலில் நாவல் வடிவில் வார இதழ் ஒன்றில் நீண்ட காலம் வெளிவந்தது. அதற்கு கிடைத்த வரவேற்பு, அதனை திரைப்படமாக எடுக்கத் தூண்டியது. பொதுவாக நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்படும்போது, சுவையில் சிதைவு நேரிடும். அதற்கு இந்தத் திரைப்படம் விதிவிலக்கு. இசையாகட்டும், வசனமாகட்டும், நடிப்பாகட்டும் - அது ஒரு காவியம். சிக்கில் சண்முகசுந்தரம், மோகனாம்பாள், ராமன் செட்டியார், நாகலிங்கம், சிங்கபுரம் மைனர், மதன்பூர் மகாராஜா, வைத்தி, தவில் முத்துராக்கண்ணன் - ஒவ்வொரு கதா பாத்திரமும், நம் கண்முன் இன்றளவும் நிழலாடுவது படைப்பாளரின் வெற்றி. நூறாண்டுகளுக்கு ஒரு முறையே இத்தகைய படைப்பாளிகள் தோன்றுவார்கள். இறையருளால், தமிழகம் கடந்த நூறு ஆண்டுகளில் பாரதி, கொத்தமங்கலம் சுப்பு, ஜெயகாந்தன், சாண்டில்யன், கல்கி, டி.கே.சி., சுஜாதா போன்ற படைப்பாளிகள் நம்மிடையே வந்து சென்றுள்ளார்கள். அவர்களை நாம் உரிய முறையில் போற்றுவதை சரியாக செய்துள்ளோமா ?
 
Status
Not open for further replies.
Back
Top