கால பைரவரின் மறைக்கப்பட்ட வரலாறு!!

praveen

Life is a dream
Staff member
கால பைரவரின் மறைக்கப்பட்ட வரலாறு!!

இந்தச் சம்பவம் இராமாயண காலத்தில் நிகழ்ந்தது.இராமாயணமோ இன்றிலிருந்து 17,50,000 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்திருக்கிறது.இத்தனை லட்சம் வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தமைக்கான ஆதாரங்கள் இந்தியா மற்றும் இலங்கை நெடுகக் காணப்படுகின்றன.இந்த ஆதாரங்கள் தற்காலத்தில் உண்மைதான் என்று நவீன விஞ்ஞான ஆராய்ச்சிகள் உறுதிபடுத்திக்கொண்டே இருக்கின்றன.


சென்னையிலிருந்து ஆந்திராவுக்குச் செல்லும் வழியில் நாகலாபுரம்,பிச்சாட்டூர்(ஊத்துக்கோட்டை வழி) செல்லும் சாலையில் நாகலாபுரத்தை அடுத்து இருக்கிறது.இந்த தலம் திருக்காரிக்கரை என்று புராணகாலத்தில் வழங்கப்பட்டுவருகிறது.இங்கே பைரவர் சுவேதபைரவர்,கல்யாண பைரவர்,சந்தான பைரவர் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். கருவறையைச் சுற்றியுள்ள கோட்டங்களில் மேற்கில் இருவரும்,வடக்கில் இருவரும் ஆக நான்கு பைரவர்கள் இருக்கிறார்கள்.இது ஒரு பைரவத்தலம் என்பதால் நடுவில் சாமுண்டி அமைக்கப்பட்டு மற்றவர்கள் இருபுறமும் உள்ளார்கள்.


ராமகிரி பைரவரின் மகிமையை இப்போது பார்ப்போம்:


ராவணனைக் கொன்ற பாவம் தீர,ஸ்ரீராமபிரான் ராமேஸ்வரத்தில் பரிகாரபூசை செய்ய முயன்றார்.அதற்காக காசியிலிருந்து சுயம்புலிங்கம் கொண்டு வருவதற்காக ஸ்ரீஆஞ்சநேயர் காசிக்குச் சென்றார். காசி நகரத்தின் காவலராக இருப்பவர் காலபைரவர்.அவரது அனுமதியின்றி தனது ஸ்ரீராமபிரானின் உத்தரவை நிறைவேற்றிட ஸ்ரீஆஞ்சநேயர் அவசரப்படுகிறார்.காசி நகரைச் சுற்றி பறந்து வரும்போது,சரியான சிவலிங்கத்தை அதன் நேர் மேலே கருடன் வட்டமிட்டுக்காட்டுகிறது;அந்த சிவலிங்கத்தின் அருகில் வந்ததும்,பல்லியின் குரல் போன்ற சுபசகுனத்தின் மூலமாக அடையாளம் கண்டுகொண்டார். தனது அனுமதியின்றி காசியிலிருந்து சுயம்புலிங்கத்தை எடுத்துச் சென்ற அனுமனை தடுத்து கால பைரவர் சமர் செய்தார்(போரிட்டார்!).தேவாதி தேவர்கள் அனைவரும் காசிக்காலபைரவரிடம் முறையிட்டு வேண்டியதால் அனுமனை சுயம்புலிங்கம் கொண்டு செல்ல அரை மனதோடு அனுமதியத்தார். இருந்தபோதிலும் காலபைரவருக்கு திருப்தியில்லை;அனுமன் பறந்து செல்லும் வழியில் உள்ள திருக்காரிக்கரையில், அனுமன் வரும் நேரத்தில் சூரியனை முழு சக்தியுடன் நன்கு பிரகாசிக்க ஆணையிட்டார்.கங்காதேவியை அனுமன் கண்ணில் படாமல் ஒளிந்திருக்கக் கட்டளையிட்டார்.வாயுவை பலமான காற்றை வீச உத்தரவிட்டார்.(பஞ்சபூதங்களும்,நவக்கிரகங்களும் கால பைரவரின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்பதற்கு இந்த சம்பவமே நேரடி ஆதாரம்!!!) பஞ்சபூதங்களில் மூவரின்(நெருப்பு,நீர்,காற்று) தாக்கத்தை தாள முடியாமல் அனுமன் தாகமிகுதியால் துடித்தார்;அப்பொழுது ஸ்ரீகால பைரவர் மாடுமேய்க்கும் சிறுவன் ரூபத்தில் இருந்தார்.குடிக்க நீர் தேடிய அனுமனுக்கு,காளிங்கமடு என்னும் நீருள்ள தடாகத்தைக் காட்டினார்.அனுமன்,தான் நீரருந்தி வரும் வரையிலும் தன் கையில் உள்ள சுயம்புலிங்கத்தை சிறுவனாகிய கால பைரவரிடம் கொடுத்தார். சிறுவன் உருவெடுத்த காலபைரவர் அந்த சுயம்புலிங்கத்தை திருக்காரிக்கரையில் பிரதிஷ்டை செய்துவிட்டு மறைந்துவிட்டார்.அகந்தை கொண்ட அனுமன்,தன் வாலினால் அந்த சிவலிங்கத்தை கட்டியிழுக்க முயன்று தோற்றார்.ராமகிரி வாலீஸ்வரர் கருவறையுள் சிவலிங்கத்தை வணங்குகிற சிலாரூபம் உள்ளது. பின்னர்,மீண்டும் அனுமன் காசிக்குச் சென்று.கால பைரவரை வணங்கி,அவரது முறையான அனுமதியைப் பெற்றுவிட்டு,அங்கிருந்து வேறொரு சுயம்புலிங்கத்தை ராமேஸ்வரத்துக்குக் கொண்டு வந்தார்.அதற்குள் குறிப்பிட்ட நேரம்(நல்ல முகூர்த்தம்) கடந்து விட்டதால்,சீதாதேவி மணலில் உருவாக்கிய லிங்கத்தை ராமேஸ்வரத்தில் ராமர் பூஜை செய்தார். இத்தல வரலாறு கால பைரவரின் மேன்மையைக் காட்டுகிறது.
 
Back
Top