• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

அதிகாலை எழுந்தவுடன் செய்ய வேண்டிய காரியங்கள்

அதிகாலை எழுந்த பின் சிறிது நேரம் எடுத்துக் கொண்டு ஆசார தர்மங்களை பின்பற்றினால் நாள் முழுவதும் அதற்கான பயனை அனுபவிக்கலாம்.*

1. அதிகாலை எழுந்தவுடன் முதலில்….

வலது கையால் வலது காதைத் தொட்டுக் கொண்டு

*ஸ்ரீவிஷ்ணுவின் ‘ஓம் கேசவாய நம:….’*

என்று ஆரம்பிக்கும் 24 நாமங்களைச் சொல்ல வேண்டும்.

ஸ்ரீவிஷ்ணுவின் நாமத்தை எடுத்துக் கொள்ளும்போது

வலது காதில் கையை வைத்து ஸ்ரீவிஷ்ணுவின்

‘ஓம் கேசவாய நம:, ஓம் நாராயணாய நம:, ஓம் மாதவாய நம:, ஓம் கோவிந்தாய நம:, ஓம் விஷ்ணவே நம:, ஓம் மதுசூதனாய நம:, ஓம் த்ரிவிக்ரமாய நம:, ஓம் வாமனாய நம:, ஓம் ஸ்ரீதராய நம:, ஓம் ஹ்ரிஷிகேசாய நம:, ஓம் பத்மநாபாய நம:, ஓம் தாமோதராய நம:, ஓம் ஸங்கர்ஷணாய நம:, ஓம் வாசுதேவாய நம:, ஓம் ப்ரத்யும்னாய நம:, ஓம் அனிருத்தாய நம:, ஓம் புருஷோத்தமாய நம:, ஓம் அதோக்ஷஜாய நம:, ஓம் நாரஸிம்ஹாய நம:, ஓம் அச்சுதாய நம:, ஓம் ஜனார்த்தனாய நம:, ஓம் உபேந்த்ராய நம:, ஓம் ஹரயே நம:, ஓம் ஸ்ரீகிருஷ்ணாய நம:’ என்ற 24 நாமங்களை சொல்ல வேண்டும்.

ஆதித்ய, வஸு, ருத்ர, அக்னி, தர்ம, வேத, ஆப, ஸோம, அனில போன்ற ஸகல தேவதைகளும் வலது காதில் வாசம் செய்வதால் வலது காதை வலது கையால் தொட்டாலேயே ஆசமனம் செய்த பலன் கிடைத்து விடும்.

ஆசமனத்தால் உள்தூய்மை ஏற்படுகிறது.

2. பிறகு ஸ்ரீ கணேச வந்தனம் செய்யவும்

வக்ரதுண்ட மஹாகாய கோடிசூர்ய ஸமப்ரப |
நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா ||

அர்த்தம் :

துர்ஜனங்களை நாசம் செய்யும், மஹாகாய, அதாவது (சக்திமான்) கோடி சூர்ய பிரகாஸமாய் விளங்கும் அந்த கஜானனனிடம், என் எல்லா காரியங்களும் எந்தவித விக்னமுமில்லாமல் ஸித்தியடைய வந்தனம் செய்கிறேன்.

3. தேவதா வந்தனம்

ப்ரம்மா முராரிஸ்த்ரிபுராந்தகாரிர்பானு: சசி பூமிஸுதோ புதச்ச |
குருச்ச சுக்ர: சனிராஹுகேதவ: குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம் ||

அர்த்தம் :

படைப்பாளியான ப்ரம்மதேவன்; பராமரிப்பவனும் ‘முரன்’ என்ற அசுரனை வதம் செய்த ஸ்ரீவிஷ்ணு; ஸம்ஹரிப்பவரும் ‘திரிபுர’ ராக்ஷஸனை வதம் செய்த சிவன்; இந்த மூன்று முக்கிய தெய்வங்கள் மற்றும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, ராஹு, கேது ஆகிய நவக்ரஹங்களும் என்னுடைய காலைப் பொழுதை சுபமானதாகச் செய்யட்டும்.

4. புண்யபுருஷர்களின் ஸ்மரணம்

புண்யச்லோகோ நலோ ராஜா புண்யச்லோகோ யுதிஷ்டிர: |
புண்யச்லோகோ விதேஹச்ச புண்யச்லோகோ ஜனார்த்தன: ||
– புண்யஜனஸ்துதி, ஸ்லோகம் 1

அர்த்தம் :

புண்யவான்களான நளன், யுதிஷ்டிரன், விதேஹன் (ஜனக மஹாராஜா) மற்றும் பகவான் ஜனார்த்தனனை நான் சரணடைகிறேன்.

5. ஸப்தசிரஞ்ஜீவிகளின் ஸ்மரணம்

அச்வத்தாமா பலிர்வியாஸோ ஹனுமாஞ்ச்ச விபீஷண: |
க்ருப: பரசுராமச்ச ஸப்தைதே சிரஞ்ஜீவின: || – புண்யஜனஸ்துதி, ஸ்லோகம் 2

அர்த்தம் :

துரோணாச்சார்யரின் புத்ரன் அச்வத்தாமா, கொடையாளியான பலிராஜா, வேதவியாஸர், ஹனுமான், விபீஷணன், க்ருபாச்சார்யர் மற்றும் பூமியில் 21 முறை துர்ஜன ராஜாக்களை வதம் செய்த பரசுராமர் ஆகிய இந்த ஏழு சிரஞ்ஜீவிகளை நான் வணங்குகிறேன்.

6. பஞ்சமஹாஸதிகளின் ஸ்மரணம்

அஹில்யா திரௌபதி ஸீதா தாரா மண்டோதரி ததா |
பஞ்சகம் நா ஸ்மரேந்நித்யம் மஹாபாதகநாசனம் || – புண்யஜனஸ்துதி, ஸ்லோகம் 4

அர்த்தம் :

கௌதம ரிஷியின் பத்னி அஹில்யா, பாண்டவர்களின் பத்னி திரௌபதி, ப்ரபு ராமசந்திரனின் பத்னி ஸீதா, வாலியின் பத்னி தாரா மற்றும் ராவணனின் பத்னி மண்டோதரி ஆகிய இந்த பஞ்சமஹாஸதிகளை யார் ஸ்மரணம் செய்கிறார்களோ அவர்களின் மஹாபாதகமும் நஷ்டமாகி விடும்.

குறிப்பு –

இந்த ஸ்லோகத்தை உச்சரிக்கும்போது சிலர் ‘பஞ்சகன்யா ஸ்மரேந்நித்யம்….’ என்று சொல்கின்றனர். அது சரியில்லை. பஞ்சக் என்றால் ஐவரைக் குறிக்கும். நா என்றால் மனிதன். அதாவது ‘பஞ்சகம் நா ஸ்மரேந்நித்யம்’ என்பதன் அர்த்தம்,

மனிதர்கள் இந்த ஐவரின் சமூகத்தை ஸ்மரிக்க வேண்டும் என்பதே.

7. ஏழு மோக்ஷபுரிகளின் ஸ்மரணம்

அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா |
புரி த்வாராவதி சைவ ஸப்தைதா மோக்ஷதாயிகா: ||
– நாரத புராணம், அத்யாயம் 27, ஸ்லோகம் 35

அர்த்தம் :

அயோத்யா, மதுரா, மாயாவதி (ஹரித்வார்), காசி, காஞ்சி, அவந்திகா (உஜ்ஜயினி) மற்றும் த்வாரகா ஆகிய ஏழும் மோஷத்தைத் தரவல்ல ஏழு க்ஷேத்திரங்களாகும். இவற்றை நான் ஸ்மரணம் செய்கிறேன்.

8. கரதரிசனம்

இரண்டு கைகளையும் ஒன்றாக சேர்த்து வைத்து அதில் மனதை ஒருமுகப்படுத்தி கீழ் வரும் ஸ்லோகத்தை உச்சரிக்கவும்.

கராக்ரே வஸதே லக்ஷ்மீ: கரமத்யே ஸரஸ்வதி |
கரமூலே து கோவிந்த: ப்ரபாதே கரதர்சனம் ||

அர்த்தம் :

கைகளின் நுனி பாகத்தில் லக்ஷ்மி வாஸம் செய்கிறாள். கைகளின் மத்ய பாகத்தில் ஸரஸ்வதி வஸிக்கிறாள் மற்றும் கைகளின் அடி பாகத்தில் கோவிந்தன் உள்ளான். அதனால் விடியற்காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளை தரிசனம் செய்ய வேண்டும்.

இன்னொரு அர்த்தம் :

உள்ளங்கைகளின் அடிப்பாகத்தில் ப்ரம்மா உள்ளார்.

8 அ. ஸ்லோகத்தின் உள்ளர்த்தம் லக்ஷ்மியின் மஹத்துவம்

கைகளின் நுனி பாகத்தில் லக்ஷ்மி வாஸம் செய்கிறாள். அதனால் வெளிப்புற உலகரீதியான பகுதி லக்ஷ்மி ரூபமாக உள்ளது. அதாவது உலகியலுக்கு லக்ஷ்மி (செல்வம் அல்ல, மாறாக பஞ்சமஹாபூதம், அன்னம், வஸ்திரம் போன்றவை) மிகவும் அவசியம்.

ஸரஸ்வதியின் மஹத்துவம்

செல்வம் மற்றும் லக்ஷ்மியை அடையும்போது ஞானமும் விவேகமும் இல்லாவிட்டால் அந்த லக்ஷ்மியே அலக்ஷ்மியாக மாறி நம் அழிவிற்கு காரணமாவாள். அதனால் ஸரஸ்வதி மிகவும் அவசியம்.

ஸர்வம் கோவிந்த மயம்

மத்ய பாகத்தில் ஸரஸ்வதியாகவும் நுனி பாகத்தில் லக்ஷ்மியாகவும் வீற்றிருப்பவன் கோவிந்தனே. மஹான் ஞானேச்வர் மஹராஜ் அம்ருதானுபவத்தில் சிவ-பார்வதி ஸ்தவனில் கூறுகிறார், அடி, மத்ய மற்றும் நுனி மூன்றும் வெவ்வேறாகத் தெரிந்தாலும் கோவிந்தனே விசேஷ ரூபத்தில் அங்கு செயல்படுகிறார். பெரும்பாலும் எல்லா காரியங்களுமே விரல்களின் நுனி பாகத்தால் செய்யப்படுகிறது. அதனால் அங்கு லக்ஷ்மி வாஸம் செய்கிறாள். ஆனால் அனுபவத்தின் மூலம் பெருகும் ஞான ப்ரவாஹம் அந்த விரல்களுக்கு செல்லாவிட்டால் கைகளால் எந்தக் காரியமும் செய்ய முடியாது

9. பூமிவந்தனம்

‘கராக்ரே வஸதே லக்ஷ்மி….’ ஸ்லோகத்தைச் சொல்லிய பின் பூமியை பிரார்த்தனை செய்து இந்த ஸ்லோகத்தை உச்சரித்து பின் பூமியில் கால்களைப் பதிக்கவும்.

ஸமுத்ரவஸனே தேவி பர்வதஸ்தனமண்டலே |
விஷ்ணுபத்னி நமஸ்துப்யம் பாதஸ்பர்சம் க்ஷமஸ்வ மே ||

அர்த்தம் :

ஸமுத்திரத்தை வஸ்திரமாக தரித்தவளும், மலைகளை தன் மார்பகங்களாகக் கொண்டவளும் பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் பத்தினியுமான ஹே பூமாதேவியே, நான் உன்னை நமஸ்கரிக்கிறேன். என் பாதங்களை உன் மேல் வைக்கப் போகிறேன். அதற்காக என்னை மன்னித்து விடு.
 
Many thanks 😊 First I need to write down these slokas in a book and start reciting them from now onwards.
 
Latest ads

Back
Top