• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

காயத்ரியை போல் மந்திரமில்லை (Gayathri Mantram)

praveen

Life is a dream
Staff member
காயத்ரியை போல் மந்திரமில்லை (Gayathri Mantram)

விஷ்வாமித்திரர் என்னும் ரிஷியை பற்றி கேள்விப்பட்டு உள்ளீரா சத்திரியரான அவர் தான் இந்த காயத்திரி மந்திரத்தின் படைப்பாளி
உலக ஷேமத்திற்காக தன் தவ வலிமையால் அந்த சத்திரியர் உருவாக்கிய மந்திரத்தை தான் இன்று வேதியர்கள் பிராமணர்கள் உலக ஷேமத்திற்காக தினமும் ஜெபிக்கின்றனர்


விஷ்வம் என்றால் உலகம் மித்ரன் என்றால் நண்பன் விஷ்வாமித்ரன் என்றால் உலகத்தின் நண்பன் என்று அர்த்தம்


அவர் இயற்பெயர் கௌசிகன் உலகத்தின் ஷேமத்திற்காக எப்போதும் தவம் புரிவதும் நல்லதை நினைப்பதும் அவர் தொழிலாக கொண்டு இருந்ததால் விஸ்வாமித்ரர் என அப்பெயரை பெற்றார்


காயத்ரி என்பதற்க்கு காயம்+திரி என்று அர்தம் அதாவது விஸ்வாமித்ரர் உடலை திரியாக்கி இம் மந்திரத்தை உருவாக்கியதால் காயத்திரி என இப்பெயர் இந்த மந்திரத்துக்கு வந்தது


ஸ்வாமி ஏன் உடம்பை திரியாக்கினார்


அடியேன் அதை தான் சொல்லவருகிறேன் ஏன் ஸ்வாமி அவசரம்


ஒரு முறை சத்ரியனான கௌசிக மன்னனுடைய நாட்டில் கடும்பஞ்சம் வந்தது இதை போக்க கௌசிக
மன்னன் மகரிஷி வசிஷ்டரிடம் இருக்கும் காமதேனு பசுவின் பெண்வயிற்று பிள்ளையான நந்தினி என்ற பசுவை தன் நாட்டின் பஞ்சம் போக்கவேண்டி இரவல் கேட்கிறான்


வசிஷ்டர் பசுவை தர மறுக்கிறார்


சினம் கொண்ட கௌசிகன் அவர் மேல் போர்தொடுத்து தோல்வி
அடைகிறான்


வஷிட்டர் கௌசிகனை பார்த்து பிரம்மரிஷிகளுக்கு மட்டுமே காமதேனு நந்தினி என்ற பசுக்கள்
கட்டுப்படும் தேவரீர் பிரம்ம ரிஷி ஆனால் இந்த பசுவை தருகிறேன் என்றார்


மேலும் தவம் இயற்றினாலும் ஒரு சத்திரியானால் எளிதில் பிரம்மரிஷி பட்டம் வாங்கமுடியாது என்றும் வசிஷிடர் உறைக்க


கௌசிகன் அந்த பிரம்ம ரிஷி பட்டத்தை வாங்கி காட்டுவதாக வசிஷ்டரிடம் சவால் விடுகிறார்


சவால் விட்ட கௌசிகன் ஒரு கள்ளி செடியின் முனையில் மேல் நின்று கடும் தவம் புரிகிறார் இதை கண்ட
அன்னை சக்தியானவள் கௌசிகன் முன் தோன்றி தன் கோவிலில் உள்ள
விளக்கில் பஞ்சமுமாக திரு போட்டு தீபம் ஏற்றினால் உன் தவம் சித்தியாகும் என அறிவித்து மாயமானார்


சக்தியின் வாக்கை ஏற்று நான்கு வேதங்களின் பிறந்த நாளான சர்வணமாத பௌர்ணமி அன்று
அவளது ஆலயம் வந்து பஞ்சமுமாக திரி வைத்து ஏற்ற முனைகிறார் அந்த திரிகள் எவ்வளவு முயன்றும் துளிகூட எரியவில்லை


உடனே அந்த விளக்கில் தான் ஏறி தனது உடலின் தலை இரண்டு கை இரண்டு கால் இவைகளை ஐந்து முகத்திலும் வைத்து அந்த விளக்கை ஒரு மந்திரம் உச்சாடணம் செய்து எரிய வைக்கிறான்


அவர் தன் உடலையே திரியாக்கி ஒரு நாள் முழுவதும் அன்ன ஆகாரமின்றி தன் நாட்டு மக்களுக்காக போராடுவதை கண்டு ஜோதியான அந்த சக்தி விஸ்வாமித்ரர் என்று அழைத்து பிரம்மரிஷி என்ற பட்டத்தையும் கொடுத்தாள்


தன் உடலை திரியாக்கி அந்த ஜோதியை மையமாக வைத்து தன் தவத்தால் கௌசிக மன்னன் தான் அறிந்த நான்கு வேதத்தின் சாரமாக ஒரு மந்திரம் இயற்றி உச்சாடணம் செய்ததால் அதுவும் மந்திரத்திற்காக தன் உடம்பையே (காயத்தை) திரியாக்கி உச்சாடணம் செய்து வரம் பெற்றதால் அந்த மந்திரம் காயத்திரி மந்திரம் என இனி அழைக்கப்படும் என்றாள்


கௌசிகன் கூறிய இந்த மந்திரம் நான்கு வேதங்களின் சாரம் என்பதால் இந்த மந்திரத்தை இனி வேதியர்கள் ஜோதி சொருபமான என்னை உத்தேசித்து உச்சாடணம் செய்து உலகம் உய்ய பிரார்த்தனை செய்ட்டும் என அருளியதால்


அன்று முதல் காயத்ரியை வேதியர்களான நாம் இன்றுவரை சந்தியாவந்தனத்துக்கு பின் நித்யானுஷ்டானமாக ஜோதி சோருபமானவளை வேண்டி உச்சாடணம் செய்கிறோம்


காயத்ரி மந்திரத்துக்கு கட்டுபட்ட அவளை அந்த மந்திரத்தை கொண்டே காயத்ரி தேவி என அழைக்கிறோம்


சிரவண மாத பௌர்ணமிக்கு மறுநாள் அவர் அந்த மந்திரத்தால் பிரம்மரிஷி என்ற பட்டம் பெற்றதால் நாமும் நன்மைகளை வேண்டி அன்று காயத்ரிதேவிஐ உத்தேசித்து ஜபம் செய்ய ஆரம்பிக்கிறோம்


அன்று எவ்வளவுக்கு எவ்வளவு மந்திர உச்சாடணம் செய்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நம் பூர்வஜன்ம பாவங்கள் தொலைந்து நமக்கும் சித்தி உண்டாகும்


இப்போது புரிந்து கொண்டீரா காயத்ரி மந்தரம் எப்படி ஏன் வந்தது அதன் மகிமை அதை ஏன் உபாகர்மாவுக்கு மறுநாள் கொண்டாடுகிறோம் .
 
I could fortunately recite it 1015 times today, apart from the usual japam for morning and evening Sandhya vandanam.

Viswamitrasya rakshati Brahmedam Bharatam janam (Rig Veda 3.53.12)

- This mantra of Rishi Viswamitra, will protect the people of Bharata.
 
I could fortunately recite it 1015 times today, apart from the usual japam for morning and evening Sandhya vandanam.

Viswamitrasya rakshati Brahmedam Bharatam janam (Rig Veda 3.53.12)

- This mantra of Rishi Viswamitra, will protect the people of Bharata.

Nice to hear that!! The feeling doubles after reading the original post!! I too completed 1008 today!
 

Latest ads

Back
Top