கஸல் கவிதைகள்

  • Thread starter Thread starter ramachandran girija
  • Start date Start date
Status
Not open for further replies.
மாண்டாலும் நினைவிருக்கும்
மலர்த்தேனின் ஊற்று!
மன்னவனே உன் வாய் பேச்சு !!!

***** ஆக்கம் ரா.கிரிஜா
 
"வான்மதியாய் இத்தரையில்
வந்துதித்த மாற்று!" என
வாயுரைத்து ஓடியதேனோ?

***** ஆக்கம் ரா.கிரிஜா
 
"கான்மலரே" என்று இன்று
கண்மணியை மறந்து
கிளம்புவதேன் சாற்று!

***** ஆக்கம் ரா.கிரிஜா
 
முடியிழந்த ராணி என
மோனமனம் வெந்து வாட
மன்னவனோ வேறு மலரோடு ....

***** ஆக்கம் ரா.கிரிஜா
 
படியளந்த காவிரி போல்
விடைகொடுத்து ஓட
பாவம் என் செய்தேன் நான் ?

***** ஆக்கம் ரா.கிரிஜா
 
ஒடிந்தமன விழிக்கடலில்
ஓலநதி ஓடியே கூட
ஓடிடவா நானுமே கடலினுக்கு?
***** ஆக்கம் ரா.கிரிஜா
 
இடிவிழுந்த சிறுமலர்நான்
இங்கு என்னகவி பாட?
இன்று வார்த்தைகளும் மரணம் ....

***** ஆக்கம் ரா.கிரிஜா
 
தாகநிலா நான் உன்பெயரைத்
தவிப்புடனே பலமுறையும் கூறி
தேடி அலைகின்றேனே தெரியலையோ ?

***** ஆக்கம் ரா.கிரிஜா
 
சோகநதிக் கூடலிலே
சோர்ந்து மனம் ஊறி
சோழியாய் கிடக்கிறனே
சொந்த மனக் கடலில் !

***** ஆக்கம் ரா.கிரிஜா
 
Status
Not open for further replies.
Back
Top