கருட பஞ்சமி ஸ்பெஷல்

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
கருட தரிசனம் கர்ம பலன் நீங்கும்.
முன்னோர்கள் சொன்னது.

கருட தரிசனம் காணும் போதெல்லாம் பாப விமோசனம். கருடனை தரிசனம் செய்ய நினைத்தால்அவ்வளவு எளிதில் எல்லோரும் கருடனை தரிசனம் செய்ய முடியாது. எந்த தினத்தில் காணுகிறோமோ அந்த தினத்திற்கு என்று பலன்கள் உண்டு. உலகளந்த பெருமானின் வாகனம் உலகை காக்க தர்மத்தை நிலை நாட்ட பிறவி எடுக்கும் பகவானின் அமர்வு பீடம் கருட தேவன்.கருட தேவனுக்கு என்று காயத்ரி மந்திரமும் உண்டு. .

கருடனை தரிசிக்கும் போது கை கூப்பலாகாது. வலது கை மோதிர விரலால் இரு கன்னங்களையும் 3,4, தடவை தொட்டு இறை சுலோகத்தை சொல்ல வேண்டும்.

கருட பகவான் அருள் வழங்கும் தலங்கள்;

* திருவில்லியங்குடியில் கருடன் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார்.
* ஸ்ரீவில்லிபுத்தூரில் கருடனுக்குப், பெருமாளுடன் சம ஆசனம்தரப்பட்டுள்ளது.
* திருத்தண்காலில் கருடன் கைகளில் பாம்பும், அமிர்த கலசமும் காணப்படுகிறது.
* திருக்குளந்தையில் உற்சவராகப் பெருமாள் பக்கத்தில் அமர்ந்து கருடன் அருளாசி புரிகிறார்.
* அழகர் கோவிலில் பெருமாளைச் சுமந்தபடி காட்சியளிக்கிறார் கருட பகவான்.

தெய்வங்கள் அனைத்துக்கும்
அநேகமாக வாகனங்கள் உள்ளன.
ஆனால் வாகனங்களுக்கு வாகனம் எதுவும் கிடையாது. ஆனால் கருடன் அதிலும் சிறப்பு மிக்கவராக உள்ளார். ஏனெனில் கருடனுக்கு வாகனம் உண்டு. அதாவது வாயுதான் கருடனின் வாகனமாக உள்ளதாக இதிகாச புராணங்கள் தெரிவிக்கிறது. இதற்கு சான்றாக இருப்பது விஷ்ணு சகஸ்ரநாமம்.

கருட வாகன தரிசன பலன்.......

ஞாயிறு - பாவங்கள், பிணி நீங்கும்.
திங்கள் - சுகம் கிடைக்கும்.
செவ்வாய் - துணிவு, மகிழ்ச்சி கிட்டும்.
புதன் - எதிரிகள் நீங்கிச் செல்வார்கள்.
வியாழன் - நீண்ட ஆயுள் கிடைக்கும்.
வெள்ளி - செல்வ வளம் பெருகும்.
சனி - நம்பிக்கை ஓங்கும்.

ஓம் தத்புருஷாய வித்மஹே
சுவர்ணபக்ஷாய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்

கருடாழ்வாரை வணங்குவோம்.
கருடாழ்வாரை வணங்கினால் சகலவிதமான நன்மைகளும் பெருகும். கண் பார்வை குறைபாடுகள் அகலும் பகையும் பிணியும் நீங்கும். செல்வளம் கொழிக்கும். பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை.

ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும் அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுணம். படிப்பில் நல்ல தேர்ச்சி, நினைவாற்றல், தேர்வில் வெற்றி ஆகியவற்றை கருடாழ்வாரை மனம் கனிந்து வழிபடுவதன் மூலமாகப் பெறமுடியும் என்று பத்ம புராணம் கூறுகிறது.

எம்பெருமான் பள்ளி கொள்ளும் ஆதி சேஷனையும், அவரைத் தாங்கிச் செல்லும் வாகனமாகிய கருடாழ்வாரையும் சிந்தித்து நல்ல வாழ்வு பெறுவோம்.

1595387335749.png
 
Back
Top