கருட தரிசனம்.


கருட தரிசனம்.


Sri மகாவிஷ்ணு பல்வேறு விதமான வாகனங்களில் அருள்பாலித் தாலும் கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பது மிகவும் சிறப்பானதாகும். விஷ்ணு ஸ்தலங்களில் கருடாழ்வார் `பெரிய திருவடி' என்று அழைக்கப்படுகிறார்.


இவர் பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்குகிறார்.

ஒரு காலை முழங்காலிட்டு மற்றொரு காலை ஊன்றி அமர்ந்த நிலையில் இரு கரங்களையும் எம்பெருமானின் திருப்பாதங் களை தாங்குவதற்காக நீட்டியிருப்பார். இரு புறமும் பெரிய இறக்கைகள் இருக்கும்.

பெருமாள் கோயில்களில் கொடி மரமானது துவஜ ஸ்தம் பம் என்றும் கருட ஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகிறது.

பெருமாள் கருடனை வாகனமாக ஏற்றபோது, `வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்' என்று வரமளித்தார். கருட தரிசனம் சுப சகுனமாகும்.

கருடன் மங்கள வடிவினன். வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. கோயிலில் கும்பாபிஷேகம், யாகம், சிறப்பு வழிபாடுகள் நடக்கும்போது, கோயிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை இன்றும் காணலாம்.


மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலுக்கு எதிரே 54 அடி உயரம் கொண்ட கருட ஸ்தம்பம் உள்ளது.

இது ஒரே கல்லில் செதுக்கப்பட்டது.இது காண்பவரின் மனதை கவரும் வண்ணம் கமபீரமாக இருக்கிறது. கம்பத்தின் மேல் தளத்தில் கருடனுக்கு அழகிய கோவில் உள்ளது. ருக்மணி, சத்யபாமாவுடன் உற்சவமூர்த்தியாக காட்சி அளிக்கும் வித்யா ராஜகோபாலனுக்கு ராஜமன்னார்கோபாலன் என்ற திருப்பெயரும் உண்டு.


ஒரு காதில் குண்டலமும்,ஒரு காதில் தோடும் அணிந்து வித்யா ராஜகோபாலன் என்ற திருப்பெயரோடு ஒரு வஸ்திரத்தில் இடுப்பில் கச்சம், தலையில் சிறு முண்டாசு, வலது கரத்தில் பொன் சாட்டையுடன் மாடு கன்றுகளுடன் இடையர் உருவத்தில் நின்ற திருக்கோலத்துடன் காட்சியளிக்கிறார். இங்கு தாயாருக்கு தனிச்சன்னதி உள்ளது. தாயார் மூலவர் செண்பகலட்சுமி.
உற்சவர் செங்கமலத்தாயார். இக்கோவிலில் பெருமாள்,தாயார் சன்னதி உள்பட 24 சன்னதிகள் உள்ளன.


இந்த தகவல்களை மன்னர்குடி கணினிஆசிரியர் என்.ராஜப்பா தெரிவித்தார்.
Source:aanmikam
maalaimalar
This post is for sharing knowledge only, no intention to violate any copyrights.
 

Attachments

  • Garuda Darishanam..webp
    Garuda Darishanam..webp
    21.1 KB · Views: 134
Back
Top