கத்தரிக்காய் பொடித் தூவல்

Status
Not open for further replies.
கத்தரிக்காய் பொடித் தூவல்

கத்தரிக்காய் பொடித் தூவல்

April 27, 2015

attachment.php




என்னென்ன தேவை?

பிஞ்சு கத்தரிக்காய் - கால் கிலோ


மஞ்சள் தூள் - 1 சிட்டிகை


பூண்டு - 15 பல்,


தக்காளி, வெங்காயம் - தலா 2


கறிவேப்பிலை - சிறிதளவு


மல்லித் தழை - அலங்கரிக்க


எண்ணெய், உப்பு - தேவையான அளவு


பொடித் தூவல் மசாலா செய்ய

கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, வெந்தயம், தனியா - 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 4
அன்னாசிப்பூ - 3


எப்படிச் செய்வது?



மசாலா அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் வறுக்கவும். ஆறியதும் அரைக்கவும்.


கத்தரிக்காயைக் காம்பு நீக்கி நான்காக வெட்டி, எண்ணெயில் பொரிக்கவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.

தக்காளி, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பொரித்த கத்தரி, உப்பு, மஞ்சள் தூள், மசாலா பொடியைச் சேர்த்துக் கிளறவும்.


அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து நன்றாகக் கிளறி சிறிதளவு தண்ணீர் தெளித்து, மூடிவைத்து 10 நிமிடம் வேகவிடவும்.

நடுவே ஓரிரு முறை கிளறவும்.

அப்போதுதான் மசாலா நன்றாகக் கத்தரிக்காயில் இறங்கி சுவை கூடும்.

நறுக்கிய மல்லித் தழை தூவிப் பரிமாறவும்.




???????????? ??????? ?????? - ?? ?????
 

Attachments

  • brinjal.webp
    brinjal.webp
    65.6 KB · Views: 250
Status
Not open for further replies.
Back
Top